சிவஞான கற்பம்-7மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:13, 23 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம் Civanjana KaRpam : The Seventh Chapter : On Transcendent Perception
Dear Friends, Of special interest of these chapters in the exposition that the Pure Vedas is raher different from the Four Vedas of Rig etc and which are TEXT Vedas and that Pure Vedas remains always there beyond any language and as the source of all the scriptures. Each scripture is a TRANSLATION of the primordial Pure Vedas and technically the agamas. Vedism has conflated this Pure Vedas ( the Njaal Veetam in Tamil) with the TEXT Vedas of Rig etc leading to many confusions in the histical understanding of genesis and function of scriptures. இதுவரை கடப்புரு காண்திறத்து ஒரு கூறாகிய விஞ்ஞானக்காட்சியின் விளக்கத்தைக் கண்டோம். இஇந்த ஏழாந்தந்திரம் தொடங்கி அதனின் மேலாகிய சிவஞானக்காட்சியைப் பற்றிய விளக்கத்தைக் காண்போம். இக்காட்சி தொடங்கி உலகத்து ஞானிகள் அனைவரும் கண்டுகளித்துள்ள ஏரொளிக்காட்சியை பற்றிய விளக்கம் தரப்படும் என்பதோடு இதுவரை தமிழ சிவஞானிகட்கும் சித்தப் பெருமக்களுக்குமே உரித்தாக விளங்கும் மந்திராயணமும் புதியதொரு வகையில் விளக்கப்படும். முதற்கண் பலவகைய விஞ்ஞானக்காட்சிகளின் மேலாகிய சிவஞானக் காட்சி அல்லது தூரிய துரியாதீதக்காட்சிகள் வழியாக, ஒளிமயமான அருட்பெருஞ்சோதியாக இஇறைவனைக் கண்டு களிக்கும் பேறு எப்படி வந்தடைகின்றது என்று விளக்கப் புகுகின்றார் ஆசிரியர். 7.1 மந்திரங்கட் கடந்து மாமூலங் காணுங்கால் When we transcend even the world of Mantras and access the great Original Ground of all the yanthiras there facilitate the enjoyment of BEING as Resplendent Light
Thirumular stands as someone exceptional in this kind of experiences. For unlike the other Mystics, he delved very deep into it and UNDERSTOOD them in terms Mantras and Yantras that in fact facilitate such experiences and thus penetrated into the Mystery surrounding such experiences and made it a field of hermeneutic scientific experience, something that is within the possibilty of all. இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் என்று மந்திரங்கள் மெய்யாக இiருக்கின்றன, அவை பன்னூறு கோடியாக , எண்ணற்றவையாக , எல்லா உலகத்துத் திறங்களுக்குங் காரணமாக, சிவனார் தம் திருமேனியாக, உலகத்து தோன்றிடும் எல்லாவகை பேதங்கட்கும் காரணமாகவும் நிற்கின்றன என்று கூறி, இiவற்றின் வழி பல்வேறு தாண்டவங்களை, கூத்துக்களை, திருவிளையாடல்களை நடத்தும் இiறைவனை தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குஞ் ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ் The FOUR petalled Lotus ( of Mulaathaara) is actually something that arises within this Radiant Light என்று இந்த மேலான உள்ளொளி, அகத்தெழு பல்லிதழ் தாமரைகளாக, விந்து அவ்வடிவங்களைப் பெற அதிலிருந்து எழும் எழுச்சிகளின் வடிவாகிய நாதங்களாக, அறிவு விளக்கங்களாக விரிந்து எல்லா இருள்களையும் போக்கி நாத விந்துக்களாக நிறைந்த பின்பு, அங்கு பந்தபாசங்களை எல்லாம் எரித்துத் தூய்தாக்கும் அக்னி மண்டலத்து வன்னி எழுத்துக்கள் வெளிப்படும் என்கின்றார். மேற்கொண்டு இஇந்த ஏரொளிச் சக்கரத்தின் செயற்பண்புகளை இன்னும் விரிவாக எடுத்துக் கூறுகின்றார். அவர் நூலைக் கண்டு தெளிக. இத்தகைய மாமுலக் காட்சிகளே சிவஞானக் காட்சியுமாம் -- பந்த பாசங்களையும் ஆணவமலத் தொடக்கால் வரும் பிற தளைகளையும் இல்லாதுபோக்கி சுட்டிமை கெடுத்துக் கட்டிமை போக்கி ஆன்மா பரன்மை மகிழ உதவுதால் என்பதாம். Such experiences of transcendent Universal Light are the Sivanjaanak Katci, a kind of metaphysical seeing that purifies the soul and frees it of all the useless attachments that chain and imprison the mind and thus generate all kinds of conflicts in social existence.
இத்தகைய சிவஞானக்காட்சிகளே , அமுதப்பால் உண்ணலுமாம். இதனால் இத்தகைய ஞானக் காட்சிகளை பெற்றுத் தருகின்ற இத்தகைய காண்டற்கலையே சித்தர்கள் போற்றி வளர்த்த குண்டலினி யோகமும் என்று அடுத்து விளக்குகின்றார் ஆசிரியர். The genuine metaphysical life where occur transductive perceptions is not the vain life of arid philosophical disputations. On the contrary it is a life of self purification and a hence a life that confers good health longevity youthful vitality and so forth by making it possible the imbibing of nectar (amutu) 7.2 அருளில் அழுந்தி ஆணவங்கழன் றார்க்காகுமே aruLil azunti aaNavaGkazan Raarkkaakumee The reign of the MOON that secrets ambrosia accrues to one who immerses himself in the stream of engracing processes and through that get rid of ANavam, that which causes the metaphysical ignorance
Of all possible ways of living that conditioned by Sivayoga which is actually a life under Numenotropism is that kind of life that leads to the enjoyment of deeper and deeper transductive perceptions. It such perceptions because of the illuminations that are facilitated , the pull of DARK STUFF (giggotropism) that causes metaphysical BLINDNESS is gradually overcome. துக்கங்கள் துயரங்கள், அய்யங்கள் கிலேசங்கள் வெறுப்புக்கள் வேதனைகள் கொலைவல்ல நோய்கள் போன்ற மரணாவத்தைகட்குக் காரணமாக இருப்பது இந்த ஆணவ மலமே தான். சிவயோகங்கள் செய்து, பரிபூரணனாகிய இஇறைவனை நெஞ்சில் நிறுத்தி தொழுது வணங்கி சுழிமுனை நாடிச் செலவில் உறுதியாக நிற்க, இதனின்று கழன்று விடுதல் சித்திக்கும். அதன்வழி தூய்தாகும் ஆன்மா ஆதாரத் தலங்களாகிய கற்றளி கற்றளியாக உயர்ந்து பிறகு முடிவில் ஆயிரவிதழ் தாமரைச் சுடரும் சஹஸ்ர தலமடைந்து அதனுள் பொருந்தி நிற்க, அது பொழுது மனோன்மணி முழுமதி வடிவிலே காட்சித் தந்து திருபாற்கடலாகவும் சிவகங்கையாகவும் வடிவெடுத்த அமிர்த ரசமாக ஆன்மாவினுள்ளேப் புகுந்து பாய்ந்து அளப்பரிய வீரியத்தையும் தந்து இளமைப் பொலிவோடு திகழச் செய்து மகேசுவரனாக வாழ அருள்பாலிப்பாள் என்கின்றனர் சித்தர்கள். இவ்வாறு சகஸ்ர தலத்தை அடைந்து ஆன்மாவை அத்தலத்தில் இருத்தி வாழ்வதே அமிர்தமதியொளி ஆட்சி பெற்ற வாழ்க்கை என்பது. சித்தர்களில் ஒருவரான அகத்தியர் என்பார், இத்தகு தரிசனத்தை சடாதார தரிசனம் என்பார். சிவபெருமானது சடாபாரத்திலிருந்து விழும் சிவகங்கையை தரிசிப்பது என்று பொருள் படும். தனது பரிபூரணம் 1200 என்ற நூலில் இதனை மேலும் இவ்வாறு விளக்குவார். தானே தானாய் இருந்த தத்துவமும் நீ தான் Thou art all the realities in the world; thou art the arts and sciences deeply ingrained as an integral part of your soul; பாரப்பா தத்துவங்கள் தான் தீப்பத்தி When the binding elemental realities are burnt in the fire of understanding and when the smoke settles down and dies off, then there will arise the LOTUS to behold; worship that LOTUS drinking the ambrosia it secrets and in the illuminations it provides stand firm in Civayoga to witness the flow of CivaGanga on the flowing hair தானான காலதனைப் பூரணத்தாற் பற்றி அதாவது அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம் என்ற நினைப்பொடு , எல்லாக் கலைகளையும் கற்றறியும் திறத்தினனாய உயிரே ஆன்மாவகும். உடம்பினுள் கிடக்கின்ற மறையெலாம் தெளிய, உலகத்து மறையெலாம் தெளிவாகும். மேலும் மூலக் கனலாகிய காமத்தை எழுப்பி ஆற்றல் பெற்று அதன்வழி தவங்கள் பல செய்து வீரமாகப் போராடி எல்லா தத்துவங்களின் பிடியிலிருந்து விடுபட்டு ஆன்மா சுத்தமாகிற்றெனில், ஞானவிழி திறப்பதொடு ஆங்கு பல்லிதழ் தாமரை வடிவில் மனோன்மணி தோன்றுவாள். அந்த மலிரினை தெரிசித்து தெரிசித்து உடல் உறுதி தரும் அமுதத்தைப் பருகிப் பருகி ஞானத்தைப் பெருக்கிப் பெருக்கி , நெருப்பாராகிய அழிதிறத்து சினத்தையும், கழிகாமவேட்கையாகிய மயிர்ப்பாலத்தையும் கடந்து அறிவினிலே சிவஞானத்தெளிவு சித்திக்க , மனோன்மணித்தாய் பூரணமதியாகவும் பிறகு சுக்கில பெருக்கத்து திருபாற்கடலாகவும், வெட்பம் போக்கி தசை வளர்ச்சிக்கு ஏதுவாகிய குளிர்மையைத் தரும் சிவகங்கையாகவும் எவ்வாறு மண்ணிலும் விண்ணிலும் அவள் அவ்வடிவங்களில் ஊடுறுவி நிறைந்திருக்கின்றாள் என்பதைக் காணலாம் என்கின்றார். இவ்வாறான தரிசனம் பெறுவதே அவள் அருளைப் பெறுவதுமாகும் என்கின்றார்.
The MOON that is witnessed in advanced transductive perceptions also enables the witnessing of the SUN that destroys the metaphysical darkness within by providing the illuminations necessary. மதிவடிவிலே நின்றாடும் மனோன்மணியோடு, யாண்டும் பிரிப்பின்றி வருகின்ற இரவி தரிசனத்தை அடுத்து விளக்குகின்றார் நம் ஆசிரியர். 7.3 இரவியொடு மதியும் எழுந்திடு மகத்தில் The MOON appears along with the SUN for those who persist in the transductive perceptions and gains entry into the metaphysically DISTANT world
The metaphysically distant is that which is always close to us but which we do NOT SEE because of the metaphysical blindness. As this blindness is destroyed and entry into this Mantra world gained, the Bindu (Yin) appears as the Lotus, the MOON, the SivaGanga etc that refreshes the anma by feeding KuNdalini, the Psychic Energy or libido that regenerates the individuals providing youthful vitality. Now along with it also appears the SUN in various forms as the disclosure of Natham (Yang) to dispel the DARKNESS within and purify the anma. பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி மண்ணை யிடந்ததின் கீழொடும் ஆதித்தன் When the earth is broken through there beneath it lies the SUN ஐம்பூதங்களில் ஒன்றாகி பிருதிவியாகிய மண்ணுக்குள்ளே எழுகின்ற இரவி, சாதாரணமாக யாருக்குங் காணவொண்ணாதது. ஏனைய ஐம்பூதங்களாகிய நீருக்கும் தீக்கும் நடுவிலே அவற்றை அண்டி நிற்கின்ற இந்த இரவியை, ஞானவிழி பெற்றாலன்றி காண முடியாதாகும். இந்த ஐம்பூதங்களைக் கடந்து கழன்று அவற்றொடு சாதாரண வாயிற்காட்சி மானதக் காட்சி போன்றவற்றால் அறிய வருகின்ற அறிவுகளையும் மேற்சென்று ஞானத்திருட்டி பெற்று அதன்வழி அறிவாகும் ஞானவுலகினை, துரியவுலகினையும் கண்டு கண்டு களித்து, எண்ணி எண்ணி தெளிந்து வளர்வார்க்கு இக்காட்சி இசையும் என்றவாறு. இனி பரிபூரண அகத்தியர், அகத்திலே செறிந்திருக்கும் இருளை சனி பகவான் என்று கண்டு , இரவி தரிசனமே அதனை அகத்திலிருந்து போக்கி இல்லாதாக்கி ஆன்மாக்களை சுத்தம் செய்யும் என்றுங் கூறுகின்றார். தானவனே தானாகத் தன்மை பூண்டு தானென்ற சனி பகவான் பிடரிமேலே The Sani inhabiting the brain stem destroys all forms of ideas that are developed and retained organized systematically into various clusters. The Sani destroys all these scattering them all hither and thither so that systematic ordering is made forever impossible and hence rational thinking. This makes the person, because of the ignorance that comes to prevail, very egoistic, destructive and arrogant. All the good are cloudied and the person sees the good as evil and the evil as good making him dishonest and low in morals. சிவோகம்பாவனையால் எல்லா கலைகட்கும் அறிவுகட்கும் மூலமாகிய பரிபூரணத்தை தியானித்து, ஞானவிழிகள் திறக்கப்பெற்று துரிய உலகினைக் காண, அது பொழுது சத்தியும் சிவனும் விந்து நாத வடிவிலே உடம்பின் பிரமதண்டுடன் இருக்க, ஆங்கேயே ஆணவ இருள் சனி பகவான் வடிவிலே இருக்கின்றது என்றும் அறிய வரும். அறிவுகளும் இச்சைகளும் தோன்றுகின்ற மூலத்தலமாகிய பிடரி தன்னில் இந்த சனி இருந்துகொண்டு, குடிலை விருத்தியாகத் தோன்றும் எல்லா அறிவுகளும் இணைந்து முழுசுகளாகி பிறகு கோர்த்து முறைமையொடு நிற்கின்ற அறிவுகளாக ஆன்மாவுடன் இருப்பதை தடை செய்து, சிதைத்து தலைவேறு கால்வேறுவாக்கி, ஞானத் தெளிவு உண்டாகாது செய்து அறியாமையிலேயே ஆன்மாக்கள் இருந்துகொண்டு ஆணவச் செருக்கொடும் இழிவான கள்ளங் கபடம் போன்ற குணங்களொடும் இருக்கப் பண்ணும். நல்லதை தீயதென்றும் தீயதை நல்லதென்றும் காணும்படி அறிவினிலே திரிபும் மாயமயக்கமும் வந்தேறச் செய்து ஆன்மாக்கள் முக்தியடைந்து கரைதேறுவதை மெய்யாகாது செய்யும் இந்தச் சனி எனும் ஆணவம். இந்த அஞ்ஞான அவத்தைகளைக் களைய வேண்டின், இறைவனை பரிதியெனும் இரவி வடிவில் கண்டு தியானித்து ஓம் கிலி சிவ என்ற மந்திரங்களை ஓதி ஓதி வரவேண்டும் என்பதாம்.
இனி அடுத்து இந்த இரவிமதி தரிசனங்களால் ஆகின்ற, ஆழக் காட்சிகளின் வழி ஆகின்ற ஞானத் தெளிவுகள் யாதென்று விளக்குகின்றார் ஆசிரியர். The religious rituals are symbolic and they have their roots in transductive perceptions where the natural strategies, the tantras , co-ordinating and ordaining the world events are disclosed in their authenticity. 7.4 விந்துவும் நாதமும் விளைத்திடு மந்திரங்கள்
Such perceptions disclose event constituting natural praxis which is INTERPRETED DIFERENTLY by different people. The Saiva Philosophers understand them as the Panca Kirittiyas. The magician-like Siddhas interpret them as elements of magical arts which give them the desired by the practice of charms black magic and so forth. The medical Siddhas invented many medical products in the light of it. The philosophic Siddhas designed many rituals interpreting the same as hermeneutic strategies that provide illuminations that would redeem the souls. தந்திரக் காட்சிகளை விரிப்பது எளிதன்று என்பதின் ஓர் எடுத்துக்காட்டாக அகத்தியர் பரிபூரணம் 1200 எனும் நூலிலிருந்து சில பாடல்களைத் தருவோம். அடுத்துமிக பூரணத்துக் குறுதி கேட்டேன் I approached a Guru and asked the way towards the Integral Whole . He asked me Who I am? and examined me pressing against me. With confidence and seeing that he was annoyed I said: I am a Sudra. On hearing that he said: My son! come! come! he invited. I neared him and stood next to him touching him. He put a chair and asked me to sit on it. Accepting me as his student he raised the FIRE of VELVI that reached from the earth to the skies. வரைகண்டு எக்கியந்தான் வளர்க்கும்போது In that sacred FIRE, a brilliant Radiance arose and brought forth a round pot that stood in the midst of the wavering FIRE. My Guru spoke with me through his eyes and uttered that I have become am Agastiya. He said that this sacred POT is something that does not ever become empty and insisted that I have a close look at it (to understand the secrets of the universe) Such are the elements of transductive perceptions, the unnaturalness of which among the ignorant lead to the magical arts but which among the philosophic and reflective to an understanding of how events in the world are shaped. All religious rituals are some kind enactments of such elements of transductive perceptions and because of which they are SYMBOLIC.
Witnessing the PLAY that enacts the dramas in life and which are interpreted variously by people is NOT the end of the matter. There are HIGHER and MORE UNIVERSAL transductive perceptions. 7.5 கடந்திட மதியுங் கதிருங் காணலாகுமே kadantida matiyuG katiruG kaaNalaakumee When we go beyond witnessing the SUN and MOON (which are disclosures of Yin and Yang or Natam and Bindu) the MYSTERY surrounding world happenings can be witnessed.
Once we continue to witness the initial disclosures in transductive perceptions, we become more and more clear as to how things happen in the world. Though they may appear magical miraculous and so forth they are not actually so. Neither are they to be seen as illusory and hence to be avoided etc. Though they may appear uncanny they are NOT ILLUSIONS. And once we ascend beyond the MOON and SUN principles operating behind such magical Play we can witness the sources of Divine Mystery, how in fact the deities are in fact constituted with mantras and how BEING plays the world game in terms of these deities or archetypes. The sivanjaanies had delved deep into the mysteries surrounding the world management and what happens there. They and also many Siddhas have explored these rare worlds and unfolded many mysteries part of which consists in having transductive perceptions beyond the inner MOON (Yin) and SUN(Yang) பொங்கியது தான்வடிந்து பாதாளந் தன்னில் தானென்ற தாரணியை அளவிடும் போதளவில் When they tried to understand the Physical Realms, and noting its unboundedness established by Bramma, as its ordaining Deity noting that it teaches the worldly truths and in that serves as supportive for the earthly creatures. The mantra operative in nakaaram which generates the ego-consciousness of "I" and leaving them to function thus left to enter the deeper world of Dark complexioned Thirumal சேர்ந்தந்தச் சாகரத்தை அளவிடவென்று எண்ணி There trying to comprehend the vast ocean, when it was explored further by venturing into its Depths, there was noted a vast fluid world standing there unfailingly. And Thirumaal was its ordaining Deity, as its life principle and hence the moist ground for the generation of everything. Then it was seen that makaaram type of mantras were operative and which serves as the bliss producing towards the transcendent mantra SI-VA-YA, part of the panjsaatsara. இங்கு அனைவருக்கும் அனுபவமாக இருக்கும் மண்ணிலிருந்து தொடங்கி இன்னும் அகழ்ந்து அகழ்ந்து ஆழஞ் செல்வதைக் காண்கின்றேன். எல்லாம் நுதல்விழி நாட்டங்களே, ஞானயாத்திரைகளே. பௌதிக உலகிற்கு அதிபதியாய் அவற்றின் உண்மையை உணர்த்தும் தெய்வமாக நான்முகனைக் காண்கின்றனர். அவனுக்குரிய மந்திரம் நகாரமாகும். அந்த உலகிற்கும் மூலமாக இருக்கும் உலகினைக் காண அங்கு தடிந்த மண் இல்லாது எல்லாம் நீர் மயமாக இருக்கும் சாகரத்தைக் காண்கின்றனர். அந்த நீருலகின் அதிதெய்வம் நாரணன் ஆகும். நீரின் அதிபதியே நாரணன் ஆகும். ஆழ்கடலில் பாம்பணைமேல் பள்ளி கொள்வது அவந்தானே? அவனுக்குரிய மந்திரம் மகாரம் ஆகும். இந்த மகாரம் இன்பம் பயப்பதாய் பஞ்சாக்கரமாகிய சிவாய மந்திரத்திற்கு ஆதாரம் என்றும் கூறப்படுகின்றது.
The description of metaphysical journey that insists on seeing only what is there, always refusing to indulge in imaginations and fantasies and gains visions after visions into the concealed and mysterious world, is continued by this Siddha Agastya. நில்லென்று சொல்லியபின் அக்கினி தன்னையுமே சென்றந்த வாயுதனை அளவிடும்போது அளவில் The Pure Space was also equally immeasurable , unfathomable. But it remains the foundation for anything that assumes the beautiful FORMS or structures. There was Sathasiva as its Lord with the MEANING of the mantra Yakaram as His beat, as the pulse. BEING establishing Sathasiva thus ascended the pillar of Ongkaaram, the Logos and stayed at its tip as the FORMLESS FORM அருவுரு மாகி யந்தக் கம்ப நுனிமேலே Nobody knows that it is BEING who with the FORMLESS FORM and staying at the top of the Logos pillar , there remaining IMMOVABLE becomes the whole UNIVERSE and all the deities and things there. Those who explore the MYSTERIES and see the things as they are in themselves within transductive perceptions of Sivayoga, will see all these and become truly illuminated.. Those who do not and remain their visions blocked by the DARK STUFF will be always confused with all kinds of misperceptions and misunderstandings. Such people fill the world creating religions and cults that show the wrong ways to the people. இப்படிப்பட ஞானானுபங்களைத் தொகுத்துப்பார்க்க, ஒன்று தெளிவாகிறது. அம்மையே மதியாகி அதனின்று பொங்கி எழும் அமிர்தமாகிய மதியொளியே பல்வேறு உலகுகளாய் அதில் வாழத்தொடங்கும் சராசரங்களாய் ஆகின்றது. இஇவ்வாறு அம்மையேத் தானாய் அனைத்தின் மூலமாகும் இஇந்தப் பூரணமானது இவ்வாறு அண்டப் பேரண்டங்களாக விரிந்து நிற்கின்ற விபரத்தை தெளிவாக எந்தவொரு கற்பிதக் கருத்துமின்றி கருதப் போகும் பொழுது, அருவுருவாக ஓங்கார கம்பத்தின் உச்சியிலே அசையாத பரிபூரணமாக நிற்கின்ற பராபரனே பல்வேறு தெய்வங்களாகி நிற்கின்றான் என்று தெய்வங்களைப் பற்றிய மெய்யறிவு சித்திக்கும். மண்ணுலகாகி அதனில் நிறைந்திருக்கின்ற உயிர்பயிர்களாகிய சராசரங்களில் கண்டு பிரமன் தானாகி மகார வர்க்க மந்திரங்களை அதிட்டித்து அவ்வுயிர்கட்குத் துணையாக நிற்பன். பிறகு நீர்வுலக புக்கு அங்கு நாரணன் ஆகி தசாவதாரங்களும் எடுத்து நகார வர்க்க மந்திரங்களை அதிட்டித்து அவற்றிற்கு ஆதாரமாக நிற்பன். உலகின் பசுமை வளத்திற்கு மூலம் இந்த நாரணன் தான். When we examine such metaphysical excursions it becomes clear that the primordial source for everything phenomenal is what is called MathiyoLi: the energy flowing out from the MOON, the primordial form MOTHER which is actually BEING-as-WOMAN. The fluid energy that flows solidifies and becomes the earths all over the universe and BEING becomes Brahma to regulate this world with makaram-type of mantras. Then comes the WORLD of Waters where he assumes the Form of Vishnu and rules over with the help of nakaram-type of mantras. These disclosures also reveal to us how one and same BEING becomes so many different archetypal forms or deities. இதன் பிறகு அனலுலகு புக்கு, உருத்திர வடிவெடுத்து அவ்வுலகத்து சராசரங்கட்கு அகலாத துணையாக நின்று , அழிப்பினைச் செய்யும் சிகார வர்க்க மந்திரங்களை அதிட்டித்து நிற்பன். இறுகிக் கல்லாகக் கூடியவை உருத்திரனின் கனல் பட்டு நெகிழ்கிறது என்ற குறிப்பும் கருத தக்கது. The world of intense Heat and Fire is that of Rudra who rules it with sikaaram-type of mantras and always working to melt and make fluid whatever that seeks to solidify and become rock-like, rigid and frigid. பிறகு வாயு உலகு புக்கு அங்கு மகேசுரன் வடிவெடுத்து அவ்வுலகத்து உயிர்கட்கெல்லாம் ஆதாரமாக நின்று வகார வர்க்க மந்திரங்களை அதிட்டித்து நிற்பன். பிறகு வானுலகு புக்கு அங்கு சதாசிவமூர்த்தியாய் எழுந்து, யகார வர்க்க மந்திரங்களை ஆட்சி செய்து அவ்வுலகத்து உயிர்பயிர்கட்கு ஆதாரமாக நின்று அருளுவன் என்பதாம். To Makeswara with vakaram-type of mantras belong the world of WIND, that power that introduces MOVEMENT as such. Then the immobile world of PURE SPACE, the matrix for the manifestations of all where stands the mighty and distant and aloof Sathasiva as its lord with yakaaram-type of mantras. என்றும் கூறப்பட்டுள்ளது. மதியொளியிலிருந்து பொங்கியெழும் அமிர்தமே, நாதத்துடன் கலந்து படிப்படியாக ஆணவங் கழன்ற மேலான வேட்கைகளாக எழும் என்றும் அதற்குத் தக இருக்கின்ற உலகுகளும் அமையும் என்றும் பொருள் படும்
இனி அடுத்து இவ்வாறான அகத்தெழு ஞானக் காட்சிகளின் வழி, சஞ்சார சமாதி என்று சித்தர்கள் கூறும் சமாதி நிலையடைந்து, மறையுலகெலாந் திரிந்து காணாத மறைகளைக் கண்டு சிவ கூத்து தரிசனம் பெற்று மகிழ, அதனால் ஆகும் நன்மைகளை எடுத்து விளக்குகின்றார் ஆசிரியர். 7.6 அகத்தில் அருட்சுடர் அழகாவெரிய அகலாது When within the inner space the Light of Grace burns beautifully without diminishing ever, the physical body that contains that inner space shines like resplendent Gold (displaying excellent health).
By the expression " Light of Grace burning Undiminished" is meant the seeing of the metaphysical realties, realities BEYOND the reach of the ordinary senses. This inner light, illuminates the mantra world and through that the Real DANCE of Siva, how the drama of life is fabricated and the existential reality constituted. As this inner odyssey is continued and more and more of the Metaphysical IGNORANCE destroyed, the poisonous dirt (that breeds death etc) disappear just as darkness in the face of brilliant light. And as this INNER LIGHT becomes more and more radiant, so does the physical body -- it begins glow like gold showing excellent health. Further the ambrosia begins to ooze and flow endlessly in the body making it diamond in strength and vitality. So would say many Siddhas, and Kakapusundar is one of them. Some relevant verses below. இவ்வாறு பல சித்தர்கள் கூறியிருக்கின்றனர். காட்டாக காகபுசுண்டர் தன் "ஞானம் நூறு" என்ற நூலின் கீழ்கண்டவாறு: When the ordinary mind fuses and becomes one with soul and spreads throughout the vast universe without any mental inhibitions, the soul attains moksa. One can then travel the length and breath of the vast metaphysical world on the horseback of the mantras and in which journey all the evil karmas will disappear. Transforming my gross and physical mind, subtle and metaphysical, and having noted all my imperfections and deficiencies I reached the foundation of the Universe where resides the vast Cauldron of Coiled Power with the triangle as its yantra. வானென்ற அண்டமதிற் சென்று புக்கு
சிறைபட்டு ஓர் குறுகிய வட்டத்திற்குள் தன்னைத் தானே பூட்டிக்கொண்டு அல்லல்படும் ஆன்மா மலமாசுக்கள் நிரம்ப உடையதென்பதின் மரணாவத்தைகள் அதனை எளிதில் தாக்கும். இதற்கு மருந்தாக சிவஞானகற்பம்தான் விளங்கமுடியும் என்கின்றார் இந்த காகபுசுண்டர். ஞானவிழி தரும் ஞானக்காட்சிகளைக் கண்டு கண்டு உவக்கும் வகையில் ஞானச்சிந்தனைகளாகிய நெடுந்தேரில் ஏறி ஞானவுலாவாகிய மந்திரவுலகு சஞ்சாரம் செய்ய, அதனால் உள்ளொளி வளர்ந்து வளர்ந்து அஞ்ஞான இருளை விரட்ட அதனால் ஏற்படும் அகத்தெளிவுகளால் பஞ்சமா பாதகங்களின் சுவடுகள் தொடர்ந்து ஆழுள்ளத்தில் இருந்து வருத்தாது போகுமாம்! மனம் குறுகிய கோட்பாடுகளைக் கடந்து விரிந்து விரிந்து சென்று அனைத்தொடும் அந்நியமின்றி நிற்கும் வகையில் பூரணமாகி அண்டவுச்சியாகிய ஆயிரவிதழ் தாமரைத் தலத்தை அடைந்து, ஞானத்தெளிவாகிய சிவஞானப் பேறு பெற முக்கோண நிலையாகும். இஇவ்வாறு எல்லா பாதகங்களையும் போக்கும் சிவஞானத்தில் மெய்ஞானத்தில் முற்றிலும் அடங்கும்போது, மதி வடிவிலே மனோன்மணி தோன்றி, தித்திக்கும் பாலாக அமுதத்தை ஊட்டி ஊட்டி தேகம் வச்சிரத்தேகமாக சுடரச் செய்வாளாம். The anma suffers the death bringing experiences only because it imprisons itself in narrow prejudices that allow only a restricted and cloistered mental space. The remedy for this malady is SivanjaanakaRpam, so says Kakapusundar as do so many other Siddhas. A person must venture into the metaphysical world with transductive perceptions as the vehicle and explore the mantra universe where lie all the secrets. As illumination after illuminations are gained, all the narrow prejudices disappear and along with it the evil karmic deposits that remain lodged in the deeper self. Expanding the mind to its limits and when a person stands one-with the entire universe without seeing anything alien, it gets to witness the very foundation of Life, the Thousand Petalled Lotus of mystic vision. At that point not only Civanjaanam glows supremely radiant but also the cauldron of KuNdalini appears as the Metaphysical MOON, feeding the anma with the ambrosia of supreme bliss. இங்கு சிவகங்கை தோன்றும் என்ற குறிப்பும் அதனுள் மூழ்கி எழும்போது திருநாமம் சார்த்தல் நடக்கும் என்ற குறிப்பும் கருதத் தக்கது. இந்த திருநாமத்தை வைணவர்கள் "திருமண்' என்று அழைப்பார்கள். சிவனின் திருநீறு சிவதீக்கைகள் செய்து உள்ளத்தை சுத்தமாக்கி தூய்தாக்க, திருமண்ணோ தணிக்கை செய்து குண்டலினியை தொடர்ந்து ஊட்டி ஓர் ஆன்மா சத்திமானாக எழச் செய்கிறது. சிவகங்கையின் அதிபதி நாரணன்! சிவஞானம் அகத்தைச் சுத்தமாக்கும் வகையில் சுடர, அதுவே திருமாலின் கருணையை ஈட்டி, தேகம் வச்சிரத் தேகமாக அளப்பரும் குண்டலினி சக்தியோடு திகழச் செய்கிறது. It is interesting that Kakapusunder links the ritual act of drawing the three forked vertical lines on the forehead, the symbolic act of the VaishNavas with immersing in the Sivakangkai and emerging revitalized. It appears that while the sacred ashes of Saivism purifies the soul, the sacred earth "maN" of the VaishNavas replenishes the anma with Sakthi, with KuNdalini. இப்படிப்பட்ட மேலான நிலை சதாசிவ நிட்டை எனும் ஓர் நிட்டை வகையால் யாவரும் அடையலாம் என்கின்றார், நம் பரிபூரண அகத்தியர் தன் பரிபூரணம் 1200 எனும் நூலில். Such a way of purifiying self and gaining the revitalizing energy, getting life itself renewed is said to be attained by CathaaCivat Tiyaanam by Akattiyar in his ParipuuraNam 1200. ஆமப்பா சதாசிவத்தின் தியானங்கேளு Practicing the PiraNayama, inhaling exhaling in accordance with mantras "yang” and "nang" one should stand firm without breathing at the sight of Metaphysical Moon that oozes the libidinal energy. And transforming it into brilliant Light that purifies the soul, ManonmaNi amidst her Pure Libidinous Energy will disclose the presence of Cataaciva, BEING as immanent and transcendent. Within the transductiive perceptions afforded by Bindu, you can see the union of Cataaciva and his consort ManonmaNi who stand as the ten fold mystic sounds and hidden lights. When you see the LIGHT shining forth brilliantly, you should stand firm in its contemplation and deep meditation. If you do that and stand absolutely firm in it, BEING would appear as the GURU who would redeem you. When one stands in full agreement with BEING and inhale exhale with the intention to purify one self to become fit for the blessings of BEING, ManonmaNi, the BEING-as-WOMAN would bless the soul by feeding it with Pure Kuண்dalini that enables the witnessing of Cataaciva Himself , BEING-as- TRANCENDENT-and- IMMANENT. When the ordinary sexual desires that result in species regeneration are ascended and hence the possessive kind of worldly desires along with it, there is another kind of enjoyment of sexuality that results not in procreation but life renewal, the regaining of the youthful vitality that was lost in the earthly toils. இப்படிப்பட்ட சதாசிவ நிட்டையில் தீர்க்கமுடன் அசையாது நிற்கும்போதே சதாசிவனும் மனோன்மணியும் இரண்டறக் கலந்து பேரொளி இரவிமதியாக அகத்திலே வெடித்து அருட்பெருஞ்சோதி தரிசனம் தந்து எஞ்சி இருக்கின்ற திரோதகத்தையும் நீக்கி சிவஞானம் சுடரச் செய்வர் என்பதாம். இந்தக் காட்சியைக் கண்டு மகிழும் ஆன்மாவின் தேகமும் இதனால் பொன்னாக , கயிலாய தேகாமாக , கற்பூர தேகமாக சுடரத் தொடங்கும் என்றவாறு. நோய்நொடி யாதுமில்லாது வச்சிரத் தேகமாக அது விளங்கும் என்றவாறு. பேணிப்பார் அவர் அடியில் தெண்டம்பண்ணி Those who respect BEING and mentally prays with sincere LOVE, the WOMAN-of-WISDOM will feed that person with ambrosia. And when you imbibe that ambrosia your body becomes that of Pure Gold. In general your body becomes highly resilient, something that can never grow old, something that replenishes itself with Energy so that it is eternally youthful பொய்வழி போக்கி மெய்யாகிய சிவயோகத்தைப் பேண, அதற்கேற்ற மானத பூசைகளைச் செய்து ஞானவிழி திறக்கப்பெற்று ஆழ்தரிசனங்களை மகிழ்ந்து கற்றளிகள் பெயர்ந்து காணாத மறைகளைக் கண்டு அகத்திலே ஞானச்சுடர் ஏற்றி வைக்க, வாணியாகிய மனோன்மணி மகிழ்ந்து; அந்த சிவஞானச் செலவினை பிழையின்றி செவ்வே அவன் தொடர அதுகண்டு, பான்மொழியாகிய சிவஞானவல்லியாகிய அவள் அமுர்தம் ஈந்து தேகத்தை வலுவாக்கி அந்தச் செலவினைத் தொடர்ந்து செய்ய உதவுவள் என்பதாம். அந்த அமுதரசத்தைப் பெற்று ஒருவன் உண்டானென்றால், ஆணிப்பொன் தேகமாக அவன் தேகம் சுடரும் என்பதாம். அமுர்தரச தேகமாவது பலவாறு உழைத்து இஇருந்த சக்தியெல்லாம் இழந்திட மீண்டும் அதனை மனோன்மணியால் அருளப்பெற்று பழைய வலுவினை மீண்டும் பெறவல்ல தேகமாகும் When one sojourns along the WAY without any deviations, gaining visions after visions that drive way the metaphysical ignorance and thereby LIGHTS UP the psychological Inner World, the WOMAN , the WOMAN of WISDOM, of Supreme Illuminations will feed such selves with ambrosia, the amutu, that would assist in their metaphysical journey by providing a body that never grows old and falls down with exhaustion.
7.7 niRaivodu varummee neeriya teecuru When the self is saturated with enough of the libidinous energy ,
The normal human body has within it, as part of its psychic heritage, the poisonous traces of the Mummalam because of which it decays and meets with death. This mummalam remains with the soul , with body like verdigris in copper. The copper can be purified only in the intense fire that burns off all the dirt. In an analogous manner soul too has to be thrown into intense heat of distresses of all kinds , the tTiikkai to purify it. The purified selves gain entry into TiruCiRRampalam, the realm of Pure Consciousness and at which point the body of the individuals will shine forth like gold. வாறே சிவாய நமச்சி வாயநம சிவாயநம சிவாயநம என்று செபித்து, இந்த அஞ்செழுத் துண்மையை புரிந்துகொண்டு, இறைவன் இவ்வுலகில் ஆடும் பஞ்சகிருத்தியங்களை மெய்யாக அறிந்து உலகத்தில் வளர்கின்ற பெருங்கூத்தினை கண்டுகண்டு மேலேறினால், களிம்புகளோடு கூடிய செம்பாகிய உடம்பு, அது நீக்கிய பொன்னாக மிளிரும் என்றவாறு. இதனால் முத்திபேறு கிட்ட, சம்சாரத் தளையிலிருந்து விடுதி கிடைக்கும் என்பதுவுமாம். இவ்வாறு எல்லா உயிர்களையும் வேதித்து சுத்தமாக்கி பொன்னம்பலம் புகுவிக்கவே, திருவம்பலமாகிய இப்பேருலகும் அதில் கிடக்கின்ற சிற்பரமாகிய ஞானவுலகத்தினையும் இறைவன் படைத்துள்ளான் என்றவாறு. 7.7b உலகத்து மாந்தர்கள் வெவ்வேறு வழிகளில் சென்றாலும் ஆழத்தில் சிவஞானத்தெளிவினைத் தான் தேடிச் செல்கிறார்கள். இவ்வாறான பேறு பெற்றவர்கள் எஞ்சியிருக்கும் உலக வாழ்க்கையிலும் தூய்மையான பல இன்பங்களை, வேட்கைகளை எல்லாம் நிறைவித்துப் போக்கும் இன்பங்களை தூய்த்து கட்டெல்லாம் போக்கி பரிபூரணமானதொரு மனநிறைவினை அடைவர் என்றுங் கூறுகின்றார் நம் திருமூலர். சொல்லு மொருகூட்டிற் புக்குச் சுகிக்கலாம் One can attain the various Siddhies where the bodily differences are overcome, the experiences of another body can be made that of one's own; இவ்வாறு திருக்கூத்து தரிசனம் பெற்று நடராச பெருமானது பொற்பாதங்களைக் கண்டு கண்டு மகிழ, அழியாத ஆனந்த சிவ நடனத்தைக் கண்டு கண்டு தெளிய, யாண்டும் அழியாத நித்திய உண்மைகளாகிய சிவஞானத்தை உண்டு உண்டு உணர்விற் சிறக்க, தன்னை மதிக்கும் புத்திரர்களாக சீடர்களாக பலர் தோன்றுவர். இதனால் பாரம்பரியமாகச் செல்லும் ஓர் சந்தானம் தோன்றி தன் வழி வந்த உண்மைகள் காலத்தால் அழியாத நிலையில் படர்வதைக் தந்து யாண்டும் அழியாது நிற்கவேண்டும் என்றோர் வேட்கையும் போக்கப்படும் என்றவாறு. இயல்பாகவே பலரால் மதிக்கப்பட வேண்டும் என்ற வேட்கையும் இதன்வழி போக்கப்படும் என்றவாறு. The metaphysical life described by Tirmular here is a life of Natural Metaphysics, a form of life where there is NO NEGATING the natural but rather plunging into the depths and witnessing them. It is in such a Way of Life, called Canmaarkkam, where the inherent ignorance is dispelled and the anma made Pure. This inner purity is that bestows not only mental healthy but also physical health where the body becomes transmuted into the golden. The metaphysical journeys of this sort are alchemical in their effect upon the body, it transmute the copper into gold. On top of that it allows the enjoyment of all worldly happiness so that there is SATURATION of all desires and which is a precondition for the soul to emerge fully satiated and desireless. It is the enjoyment to the full all the joys of worldly life that can free the soul from desires. 7.7c இவ்வாறே இன்னும் பல சிவஞானிகளும் சித்தர்பெருமக்களும் கூறியிருக்கின்றனர். காட்டாக போகர் தம் எழுதிய ஏழுகாண்டம் எனும் பெருந்நூலின் முதற் காண்டத்தில் இவ்வாறு கூறுகின்றார். So have also said many Civanjanies and Siddhas. Pokar who wrote the massive Ezu Kaandam says as follows in his First KaaNdam. காணாத மார்க்கம் எல்லாம் காணும் நேராய்க் When you mediate keeping your gaze upon the tip of your nose and then ascending, you will be able see directly the metaphysical routes that have not been seen by you before. Without discarding the fleshy body as useless look deep into it especially the spinal region where you will witness the metaphysical depths that actually belong to you. Practicing the ever-straight KuNdalini Yoga, gaze intensively into the Depths with the energy provided by it and you will see the twelve divisions of Bindu over there. And if your persist without withdrawing from such attempts and see the center of it all, not only your limbs will become that of Siva Himself but you will also witness the Rudra as a Radiant Reality with a brightness of millions of suns together. கேளுநீ மூலத்திற்கு மட்டும் வகாரத்தைக் With using the mantra vakaaram for regressing into Muulam, the Original Ground of all, breathe in deeply without letting go the mantra cikaaram. If you persist inhaling exhaling thus you will be able to see BEING-as-the Bull inside the Pure KuNdalini Power. Now if you continue in that vision Nanti, BEING-as-the Bull, will decent upon you and in fact converse with you and instruct you. With this not only you can enjoy Civanjanam but also the eightfold Siddhies or Powers. And to unite with them keep the mantra makaaram with your breath and bind your vision with that. நாட்டியே மூலத்தைத் தாண்டிப்பின் Practicing KuNdalini Yoga without wavering you must transcend the Muulam, the Original Ground and accessing the realms of Brahma, be one with Him. Here disengaging from the mantra akaaram, and with keeping the mantra cikaaram of Pure Radiance, breathe more deeply within. If you succeed in this you will be able to free yourself from existential repetition and all because you have seen directly Brahma, the God of all creations. Now next go past this realm of Brahma and accessing that of VishNu, stay put there. மருவியே அகாரத்தை உட்பூரித்து Here in the realms of VishNu, inhaling the mantra akaaram, practice ardently the breathing in of the mantra cikaaram that provides the immense inner Radiance. Once you succeed in this all the five marks of old age will disappear and you will recover your youthful vitality whereby you will be again a sixteen year old youth. Now going beyond even this realm of VishNu let you consciousness be in the realms of Rudra inhaling again the cikaaram of immense brilliance. Then you will see that your body becomes resplendent gold. In these very rare verses Pokar outlines the practice of KuNdalini Yoga whereby the natural alchemical processes can be made to work on the body and with that conquer old age and premature death. It appears that youthful vitality is recoverable provided we take the appropriate metaphysical journeys, ad which involve accessing the worlds of Brahma and then VishNu and then that Siva.
In the above verses Pookar in fact describes the metaphysical journey of the anma from Mulataram Swatisdanam MaNipuurakam to Anakatam in that access assimilate and transcend the realms of Brahma (Swatisdanam), then access assimilate and transcend the realms of VishNu (MaNipuurakam) and then access and remain in Anakatam, the realms of Rudra and where all the obstacles towards regaining youthful vitality are burnt off and the anma made pure. But this is not the end of the journey - there are even higher states to be attained and enjoyed and which are described below. இதுவரை விளக்கிய ஞானயாத்திரை ஆன்மா மூலாதாரத்திலிருந்து தொடங்கி பிரமனின் சுவாதிட்டானம் அடைதல், பின் கழன்று திருமாலின் மனிபூரகம் அடைதல் பின் கழன்று உருத்திர சிவனின் அநாகதம் அடைதலைப் பற்றிய விளக்கங்களாகும். அகத்து கிடக்கும் எல்லா மலமாசுக்களும் இங்கேயே தீய்த்து இல்லாதுப் போக்கப்பட ஆன்மா சுத்தமாகி இளமை வீரியத்தை மீண்டும் மகிழும் பேற்றினை இங்குதான் அடையத் தொடங்குகின்றது. இனி அதன் தொடர்ச்சி. சித்தியாம் உருத்திரந்தன் பதியைத் தாண்டித் Having accessed and lived in the realms of Rudra, now you must transcend it and enter the clear and resplendent realms of Mahesan and there you must breathe retaining the mantra vakaaram and inhale within the mantra cikaaram. Not only will you recover your youthful vitality but also gain the clearest understanding of self whereby your anma will be under your control as the fruit nelli in your palms. And when you practice Civayoga here, you will be able to cause the inward flow of all living regenerating medicines or alchemical stuff. சுறுக்கான மகேசுரன் தன் பதியைத் தாண்டிச் Now transcending the brief realms of Makeswara, gain darsanas of the enveloping Cataaciva establishing yourself firmly in the yoga of breath control and with the mantra cikaaram that does not negate the world. If you look deeply then you will be able to enjoy all the great Siddhies or psychic powers including that of traveling free in space (as species of out of body experiences) Now if you, without relaxing in the Yoga of breath control, concentrate on the Divine Feet of ManonmaNi, the Half of Cataaciva and who installs LOVE supreme, you will be able to enjoy Civanjanam that removes alienation from your heart and whereby you will to have the true fragrance of self நீயான குருபதத்தில் நின்றா யானால் If you stand firm with this supreme self-understanding well established and hence as the genuine Guru, the everlasting Civayoga will begin to regulate your breathing. The Mother, the Full Integral Whole will provide all the darsanas. This is the way of mantras vakaaram and cikaaram that will ensure that you will live up to a hundred years. Now you gaze further with this true object well entrenched in your thoughts, you will attain great Siddhies in your mind. All evil stuff will be removed and removing all the poisonous stuff within as well, the Integral Whole will become a reality within you.
The above verses of Pookar explain the essences of KuNdalini Yoga, which is the metaphysical journey of the anma in which it moves along the Cuzi Munai Nadi, the psychotropisms constituted both by Natam and Bindu where they act jointly and without ever separating out. This is also called the Way of the Spinal Cord. When one practices the Cataaciva Niddai where the eyes remain focused upon the tip of the nose, and through the transductive perceptions the hidden metaphysical realms or the world of the mantras are accessed, NEW metaphysical possibilities also become intuitable with increasing clarity. In such a journey BEING also appears in Radiant Reality and with a brilliance of millions of suns together. When one keeps well this brilliance that is the mantra syllable cikaaram, practice the Yoga of breath control, inhaling exhaling and retaining this cikaaram, and thereby attain more and more of metaphysical illuminations, the BEING-as-BULL (Nanti) would appear within the KuNdalini Sakti, and transforming the anma into Cakalar and so forth, would instruct the anma on Civanjanam. இவ்வாறு போதிக்கப்படும் சிவஞானத்தை மயங்கா முறை அறிந்து தெளிய தானேயாய் இறையருளின் கற்றளிப் பெயர்ச்சிகள் அல்லது ஆதாரத் தலங்களின் புடை பெயர்ச்சிகள் மெய்யாகும். மூலாதரத்தில் சித்தி புத்திகளை ஆட்சி செய்யும் விநாயகப் பெருமான் அருளால் கலைஞானம் நூலறிவு போன்றவற்றில் விருப்பினைத் தேற்றும் பிரமலோகமாகிய சுவாதிட்டானம் புகுந்து அறியவேண்டிய கலைஞானங்களை செவ்வே அறிய, அதன் பின் திருமால் தலமாகிய மணிபூரகம் புகும் வாய்ப்பு தானே உண்டாகும். அங்கு திருமால் அருளாக திருபாற்கடலில் மூழ்கி குளிக்க, அளப்பரும் குண்டலினி சக்தி வந்து உதவ, அறிதுயில் வழியாக ஞானத் திருட்டியின் இன்னும் அறியாத பல மறைநிலங்கள் காணவரும். இனி இங்கு யோகநித்திரையாகிய அறிதுயில் வழியாக கற்க வேண்டியதைக் கற்று அமையும் சுகபோகங்களை எல்லாம் செவ்வே அனுபவித்துச் செல்ல, உருத்திரன் உருத்திரி ஆட்சி செய்யும் அநாகதக் கற்றளி வந்தமையும். இங்கு தான் இறைவன் ஆன்மாவின் அகத்தே அக்னிப் பிழம்ப்பாக எழுந்து உருத்திரத் தாண்டவம் ஆடி இருக்கின்ற அழுக்குகளை எல்லாம் சுட்டெரித்து சாம்பலாக்கிப் போக்கி தூய்தாக்குவன். இவ்வாறு வந்தமையின் தூய்மையின் காரணமாக ஆன்மாவும் மூப்பின் சுவடுகளை எல்லாம் இழந்து இளமைப் பொலிவோடு மீண்டும் எழும். உடம்பும் சிகாரத்தின் காரணமாக சிவப்போடி பொன்னாகச் சுடரும். Now when an anma allows itself to be thus illuminated, there will be shifts in the existential realms from the lower to higher and all because of the Grace of BEING. In the first existential realms, the Muulatara Cakra, we have Vinayaka with Siddhies and Buddies on gaining which the anma enters the Realm of Brahma, the Swatisdanam and because of which a deep desire for scriptural and related understanding develops. The success here opens up the realms of VishNu, the MaNipuurakam and where the transductive perception or Yoga Nidra, seeing though dreams and related experiences, become possible. There is bathing in the Ocean of Milk that provides the necessary Psychic Energy for such cognitively demanding experiences. Then comes Anakatam, the realms of Rudra and Rudri and where through an intense burning, the anmas are purified of all filth and dirt and made absolutely pure. This psychic purity also makes it possible the regaining of youthful vitality. The body, on account of the prevalence of the golden mantra-syllable cikaaram, also shines forth as golden. இன்னும் தொடர்ந்து சிகாரத்தை மறவாது உள்ளே இழுத்து இருத்தி மெலே செல்ல அடுத்த கற்றளியாகிய விசுத்தித் தலம் புகுந்து ஆன்மா மகேஸ்வரன் மகேஸ்வரி ஆட்சிக்கு ஆளாகும். இங்கு இத்தெய்வங்கள் உந்த ஆன்மாக்கள் குன்றா இளமைவீறுடன் பல அளப்பரும் ஞானசாதனைகள் புரிந்து எஞ்சியிருக்கின்ற வேட்கைகளையும் போக்கி இன்னும் சுத்தமாகும். அநாகத்தில் ஆணவமலம் போக்கப்பட, இங்கு எஞ்சி நிற்பதாகிய திரோதகமும் போகப்படத் தொடங்க ஆன்மாவிற்கு மறைப்பு என்று யாதுமில்லாது சுத்தப்படிகம் போல் நிமலப் பொருளாகச் சுடரத் தொடங்கும். ஏக்கங்களையெல்லாம் போக்கி பரிபூரண நிறைவு தரும் மேலானத் தலமும் இதுவாகும். தேகத்தை வச்சிரத் தேகமாக்கும் குளிகைகள் சுரக்கும் இடமும் இதுவேயாகும். When the anma progresses further inhaling the radiance providing mantra-syllable cikaaram, it accesses the metaphysical realms of Vicutti where resides Makeswara with Maheswari. Here with the youthful vitality regained, the anma will execute extraordinary feats and with that also satiating deep desires and getting rid of them with that. While in Anakatam, the Malam was removed, here the Transcendental Concealment, the Tirotakam is begun to be destroyed and with that the understanding made more transparent and pure with very little that is concealed or hidden. The anma also becomes an Integral Whole in virtue of the extraordinary actions it effects. This is also the location where the alchemical stuff that transforms the body into something diamond-like, begin to flow into the body. இதனைக் கடந்து மேலான குருபதியாகிய ஆக்ஞா தலம் வந்தடைய, சதாசிவ மூர்த்தி மனோன்மணியோடு வெளிப்பட்டு, திரோதகமெல்லாம் போக்கி மெய்ஞானமாகிய சிவஞானமே ஞானமாக சுடரச் செய்து, அதன்வழி சகல தரிசனங்களும் கிடைக்கச் செய்து, எல்லா மறைப்பினையும் மனமாயைகளையும் போக்கி, பரிசுத்தமாகி வீடுபேறு நல்குவர் என்பதாம் Now transcending even this and accessing the Aknja Cakra, one will witness Cataaciva with His consort ManonmaNi who will remove the remaining concealments so that the whole of consciousness becomes Civanjanam or Cutta Caitanyam and nothing else. There begins to be Absolute Understanding and because of which nothing remains mystical or bewildering. At this point the anma also begins to enjoy Moksa. The Seventh Tantra concluded
|