பாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் 3

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:11, 18 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


டாக்டர் ஜெயஸ்ரீ நீலகண்டன், நியூசிலாந்து, அளித்தது


பொருளடக்கம்

பாடல் 1

குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சு குத்தடி ஜைலக்கா
பந்தலிலே பாவக்கா தொங்குதடி டோலாக்கு
அக்கா வந்தா பாத்துக்கோ பணம் குடுத்தா வாங்கிக்கோ
சில்லறைய மாதிக்கோ சிலுக்கு பைல போட்டுக்கோ கிலு கிலுன்னு ஆட்டிக்கோ


சாரதா சுப்பிரமணியன் மேலும் அளிப்பது:


பாடல் 2

கும்ப்கோணமே கோணம்
குரவன் நட்டதே சோளம்
ராம்ன்விட்டதே பாணம்
அது எங்கேபோச்சோ காணோம்


பாடல் 3

ஜாடிக்கு மூடி
சதுருக்கு ஜோடி
பாம்புக்கு மகுடி
பறந்து வா ஒடி
ஏட்டிக்கு போட்டி
வேட்டைக்கு ஈட்டி
கட்டிக்க வேட்டி
கதை சொல்ல பாட்டி

பாடல் 4

வாசிக்க ஏடு
வசித்திட வீடு
பாலுக்கு மாடு
பண்ணாதே கேடு

பாடல் 5

அதோ பார் மைனா
*ஆஸ்பத்திரி கொய்னா
எங்க அப்பாபேர் நைனா
நான் போறேன் சைனா (கொய்னா என்பது அந்தகாலத்தில் மலேரியா சுரத்திற்குக் கொடுக்கும் C.A.Q. எனும் மருந்து ஆகும்)

பாடல் 6

ஒத்தக்கை சித்தப்பா
ரெட்டைக்கை சித்தப்பா
வட்டமாய் சுத்தப்பா
தட்டாமாலை தாமரைப்பூ
சுத்தி சுத்தி சுண்ணாம்பு  ( சுண்ணாம்புக் காளவாயில் சுண்ணத்தை அரைக்கும் போது பாடும் பாடல்)


பாடல் 7

தங்கக்குடமே தாராவே *தட்டான் கடைக்கு போகாதே

தட்டான் உன்னை உருக்கிடுவன் அடித்து மாலையாய் போட்டிடுவான் *


பாடல் 8

சப்பமூக்கு ஸரோஜா எப்பக்கல்யாணம்
பங்குனி மாதம் பத்தாந்தேதி பருப்புக் கல்யாணம்


--Geetha Sambasivam 08:11, 18 மே 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam