அன்றொருநாள்: மார்ச் 16மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:06, 19 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
எனக்கென்னெமோ தெருவில் நம்ம வீட்டு முகப்பு தான் கம்பீரமாக படுகிறது. அடுத்த வீட்டு இஸ்மாயிலும் தன் வீட்டை பற்றி இப்படி தான் அருமை சாற்றுகிறான். அன்னையின் கூறைப்புடவையை (திருமணப்புடவை) அருமை மகள் போற்றி பாதுகாப்பது போல், தாய்மொழியை போற்றுபவர்கள் அதனுடைய எழுத்துருவை பேணுவது இயல்பே. உடனே கிரந்தம், தேவநாகரி, தமிழ் எழுத்து என்று நான் கோதாவில் இறங்கப்போவதாக நினைத்து, கத்தி தீட்டவேண்டாம். மூன்று எழுத்துரு தளங்களையும் போற்றுபவன் நான். நான் சொல்ல வரும் விஷயம், லிதுவேனியாவில் ‘புத்தகங்களை கள்ளக்கடத்தல் தினம்‘ என்று மார்ச் 16ம் தேதியன்று விழா எடுப்பதின் ‘பிழிந்தெடுத்த மொழி‘ பின்னணி.
‘அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21:தாய்மொழி’ என்ற இழையில், லாட்வியா என்ற நாட்டில், மக்கள் ரெஃபெரண்டம் முறையில், ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டது பற்றி பேசப்பட்டது. தேசாபிமானம், மொழிப்பற்று, கலாச்சார வேர்கள், இறை வணக்கம் போன்றவற்றை, பண்புடன் கையாண்டால் தான், தாய்மொழி வளரும் என்ற கருத்தும் வரலாற்றுப்பாடமாகக் கூறப்பட்டது.
ரஷ்யாவின் மேலாண்மைக்குட்பட்ட சுற்றுவட்டாரங்களில் ஒன்றாகிய லிதுவேனியா, அந்த ஆதிக்கத்தை எதிர்த்து 1863ல் முரண்டு பிடித்தது, மக்களின் தேசாபிமானத்தின் தாக்கத்தினால். ஆணிவேரான மரபை கழித்து, கட்டி காக்கும் ரோமன் கத்தோலிக்க சமயத்தை இழித்து, லிதுவேனியாவை அடக்கி ஆள, ரஷ்யா ஒரு உத்தியை கையாண்டது. அதாவது, 1866 ஆண்டு ஒரு மட்டமான சட்டம் போட்டது: ‘லத்தீன் எழுத்து தடை செய்யப்பட்டுள்ளது. இனி லத்தீன் எழுத்து செல்லுபடி ஆகாது. ரஷ்யா விரும்பும் சிரிலிக் எழுத்துக்களில் தான், இனி லித்துவேனிய மொழி வழங்கும்.’ ஜார் மன்னனின் வாய்மொழி ஆணை: இனி லத்தீன் எழுத்தில் எழுதக்கூடாது. இது சட்டரீதியான தடை இல்லாவிடினும் 1904 வரை, தடை இருந்தது. அதை மீற ஒரே வழி: கள்ளக்கடத்தல். லத்தீன் எழுத்துருவில் லிதுவேனிய மொழியில் எழுதப்பட்ட நூல்களை அவ்வாறு கடத்தி வருபவர்களுக்கு அபராதம், நாடு கடத்தல். ஸைபீரியாவில் கடுங்காவல் எல்லாம் உண்டு. சுட்டுக்கொலையும் நடந்திருக்கிறது.
1867லியே, சமோகிதியாவின் பிஷப் மோடிஜெஸ் வாலான்ஷியஸ் அவர்கள் தான் இந்த சட்டவிரோத இயக்கத்தின் தூண்.1900ம் ஆண்டு காலகட்டத்தில் வருடம் தோறும் முப்பது/நாற்பது ஆயிரம் நூல்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டன. நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும், அவை காணப்பட்டன. எங்கெங்கும் தன்னார்வக்குழுக்கள். லத்தீன் மொழி தடை உதவாக்கறை சட்டம் என்பதை புரிந்து கொண்ட ரஷ்யா, சாக்கு போக்குச் சொல்லி, அதை நீக்கியது, 1904ம் வருடம். அடுத்த வருடமே, ஜுவோஜாஸ் மஸியுலிஸ் ஒரு புத்தகக்கடையை திறந்தார். நூறு வருடங்களுக்கு மேலாக அந்தக்கடை, இன்றும் இயங்கிவருவதாக, விக்கிப்பீடியா கூறுகிறது.
இந்த மாதிரியான சுதந்திர போர்கள் ஸோவியத் ரஷ்யாவுக்கு பிடிக்குமா? அவர்கள் இந்த வரலாற்றை மூடி மறைத்தனர். ஸோவியத் ரஷ்யாவின் மரணத்துக்குப் பிறகு, மார்ச் 16, 1846 அன்று பிறந்த புத்தக கள்ளக்கடத்துனர் ஜுர்கிஸ் பியலினிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக, ஒவ்வொரு வருடமும், மார்ச் 16ம் தேதி ‘புத்தகங்களை கள்ளக்கடத்தல் தினம்‘(Knygnešio diena) கொண்டாடப்படுகிறது. அது சரி. லிதுவேனியாவின் ‘பிழிந்தெடுத்த மொழி’ தகவலால், நமக்கு என்ன ஆதாயம் என்று சிலர் கேட்கலாம். மக்கள் சக்தியை பிரதிபலிக்கும் வரலாறுகளை இந்தியாவின் வருங்கால தலைவர்களாவது அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசாபாசம் தான். வேறு என்ன?
தேவ நாகரி லிபி: क्रमेण गत्वा हेमकूटम्, आसाद्य गन्धर्वराजकुलम्, अवाप्य कन्यान्तःपुरम्,
போஜ்புரி, ஹிந்தி, மராடி, அவதி, பஹாடி, கொங்கணி,
ஸாந்தலி, ஸிந்தி,டோக்ரி, ஷெர்பா
சிறுபான்மையராகிய பார்ஸிகளின் பேசும்‘அவெஸ்தன்’
ஷாமுகி லிபி குருமுகி - குருமொழி http://www.omniglot.com/writing/gurmuki.htm
இன்னம்பூரான் 16 03 2012 http://www.alytus.rvb.lt/vparodos/zodis/pav/knygnesys.jpg
உசாத்துணை: http://www.spaudos.lt/Istorija/Lithuanian_Resistance.en.htm
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:06, 19 மார்ச் 2012 (UTC) |