அன்றொருநாள்: மார்ச் 4மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:23, 12 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
The final paragraph of Lincoln's First Inaugural Address
ஒரு டைம்லைனை, தன் கூற்றுக்கு சாக்ஷியாக, அவர் கூப்பிடும் நேர்த்தியை பாருங்கள். “...அரசியல் சாஸனத்திற்கு முந்தியது நமது ஐக்யம் -1774. பழம் கனிந்தது, 1776ம் வருட சுதந்திர பிரகடனத்தினால். கனிந்த பழமும் நழுவி பாலில் விழுந்தது போல், 1778ல் பதிமூன்று மாநிலங்களும், நிரந்தர ஐக்யத்திற்கு அடி கோலின. அந்த நிரந்தர ஐக்யம் வழுவமைதியுடன் இயங்க வேண்டும் என்று 1787ல், சாஸனப்பதிவு ஆயிற்று.” கையோடு கையாக, எந்த மாநிலமும் ஐக்யத்திலிருந்து விலகமுடியாது என்ற எச்சரிக்கை. விலக நினைப்பதே நாட்டின் மேலாண்மையை குலைக்கும்; அதை தடுத்தாட்கொள்வது தான், என் பணி என்று ஒரு போடு போட்டார். அது கேட்டு, எதிர்ப்பாளர்களின் முகம் சிவக்கும் முன், சமாதான புறா: “...ஜனாதிபதிக்கு ஆளுமை கொடுத்தது மக்கள்...அவனுடைய கடமை அரசை உருப்படியாக நடத்துவது...என் தேசவாசிகளே. நிதானித்து யோசியுங்கள். நேரம் எடுத்துக்கொள்வதால், நட்டமில்லை...உள்நாட்டுப்போரை தவிர்ப்பது உங்கள் கையில். அரசு தாக்காது. ஆனால், நான் அரசை போற்றி, பாதுகாப்பதாகத்தான் சத்தியபிரமாணம் செய்கிறேன்...உரை முடிய போகிறது. நமக்குள் பகையில்லை. கருத்து வேற்றுமையின் வலிமையை விட, நம் பரஸ்பர அன்பு திடமானது. முடிந்து போன போர்கள், உயிரை தியாகம் செய்த தேசாபிமானிகள் ஆகிய சேதனங்கள், நம்மை ஆசீர்வதிக்கின்றன. நம் இயல்பே தேவதைகளின் இருப்பிடம் அல்லவா!” எளிதில் மொழியாக்கத்திற்கு வளைந்து கொடுக்காத இலக்கிய கோர்வை, இது. என்னுடைய மொழியாக்கம் சிறப்புற அமையவில்லை; ஆனால், கருத்தைத் தெரிவிக்கிறது என்று நினைக்கிறேன். லிங்கனின் முழு உரையை படித்து விடுங்கள், உசாத்துணையிலிருந்து. இன்னம்பூரான் 04 03 2012 http://lancasteronline.com/blogs/flashbacklancaster/wp-content/uploads/2009/01/cleveland1893.jpg
http://www.bartleby.com/124/pres31.html
|