இட்லி

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:42, 26 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

இட்லி

செய்யும் முறை 1


இது வரை இட்லி என்னை கைவிட்டதில்லை. நான் எந்த விதமான ஊக்கிகளும் சேர்ப்பதில்லை - சில நேரங்களில் அவை அமிலத்தன்மையை அளிப்பதுண்டு. தமிழர்களின் அற்புதமான இந்த உணவு வகை - கொஞ்சம் பழகினால் நன்றாக வரும். வெந்தயம் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

எதற்கும், செய்முறை இங்கே

  • பச்சரிசி - 1 அளவு
  • புழுங்கலரிசி - 4 அளவு
  • வெந்தயம் - 1/8 அளவு


  1. மேற்கண்டதை ஒன்றாக சேர்த்து நன்றாக அலம்பி, 8 மணி நேரமாவது ஊற வைக்கவும்.
  2. தோலில்லாத முழு உழுந்து - 1 1/2 அளவு - நன்றாக அலம்பி, தனியாக 8 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் தாராளமாக இருக்க வேண்டும்.
  3. முதலில் உளுந்தை போட்டு நன்றாக அறைக்கவும். நன்றாக பொங்கி வர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்க்க வேண்டும்.
  4. மாவை எடுத்து விட்டு, அரிசியை அறைக்கலாம். நிறைய தண்ணீர் விட வேண்டாம். கொஞ்சம் ரவையாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.
  5. தேவையான உப்பைப் போட்டு ஒரு 5 நிமிடங்கள் அறைக்கலாம். நன்றாக சேர்ந்து கொள்ளும்.நன்றாக எல்லவற்றையும் கலந்து, குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். உபயோக்க 8-6 மணி நேரத்துக்கு முன் வெளியில் வைக்க வேண்டும். நன்றாக பூத்து வரும்.இட்லி வார்ப்பதற்கு முன், தேவையான தண்ணீர் விட வேண்டும். கரண்டியில் விட்டுப் பார்த்தால், சுலபமாக விழ வேண்டும். இது மிக முக்கியம். (paint consistency)
  6. மல்லிகைப்பூ இட்லிக்கு நான் உத்தரவாதம். :)தோசையானால், தண்ணீர் இன்னம் சேர்க்க வேண்டும் - (distemper consistency)
  7. தேங்காய் மற்றும் வெங்காய சட்னிகள் + வெங்காய முருங்கை சாம்பார் - ஆஹா!!


- ஸ்வர்ணலக்ஷ்மி lakshmi_ssri@yahoo.com


செய்யும் முறை 2

இட்லி

  • புளுங்கல் அரிசி 800 கிராம் (4 கப்)
  • உளுந்து 200 கிராம் (1 கப்)
  • உப்பு தேவைக்கேற்ப


அரிசியையும் உளுந்தையும் நன்கு கழுவி தனி தனியாக குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து,முதலில் உளுந்தை சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மசிய அரைத்து எடுத்துக்கொண்டு பிறகு அரிசியை உப்பு சேர்த்து சிறிது கொர கொரப்பாக அரைத்து உளுந்துமாவுடன் சேர்த்து ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் சரியான பக்குவத்தில் கரைத்து 6 ல் இருந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து பிறகு இட்லி அவிக்கலாம்.


குறிப்புகள்:

  • நல்ல உளுந்தாக இருந்தால் 4 கப் அரிசிக்கு ¾ கப் சேர்த்தால் போதும்.
  • அரிசி பருப்பை முதல் நாள் இரவு முழுதும் உற வைத்தும் காலையில் அரைக்கலாம்.
  • அரிசி, பருப்பை ஊறவைக்கும் போது நன்கு கழுவி விடுவதால் அரைப்பதற்கு முன் லேசாக அலசினால் போதுமானது. அதிகமாக கழுவும்போது மாவு பொங்கி(புளித்து)வருவது தடுக்கப்படுவதோடு சத்துக்களும் போய்விடும்.


இரண்டு மேஜைக்கரண்டி வெந்தயத்தை எண்ணை விடாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும்பொழுது இட்லிமாவில் சிறிது வெந்தயப் பொடியை கலந்து தோசை சுடும்போது ருசியுடன் வாசனையாகவும் இருக்கும்.

பொதுவாக குக்கர் தட்டாயிருந்தாலும். ஏழுகுழி, ஐந்துகுழி அல்லது இரண்டடுக்கு தட்டாயிருந்தாலும் இட்லி வேகும் நேரம் ஏழு நிமிடம் போதுமானது நன்கு அவிந்து விடும்.அதிக நேரம் அவிக்கப்படும்போது இட்லியின் நிறம் மாறி விடக்கூடும்.


-மீனா


செய்யும் முறை 3

Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>

long grain rice கிடைக்கிறது என்கிறீர்கள். அப்புறம் என்ன கவலை. அதை வெறும் வாணலியில் சூடு வர வறுத்துக் கொண்டு நன்கு அலசிக் களைந்து நீர் ஊற்றி ஊற வைக்கவும். அரிசியின் அளவே உளுந்து போட்டுக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி வெந்தயம் உளுந்தோடு சேர்த்துக் கொண்டு தனித்தனியாக அரைக்கவும். உப்பு சேர்த்துப் புளிக்க வைத்து இட்லியோ, தோசையோ செய்யலாம். யு.எஸ்.ஸில் எங்க பெண்ணிற்கு இட்லி அரிசி கிடைக்காத சமயம் இப்படித் தான் செய்வதாய்ச் சொன்னாள். நானும் அங்கே இருந்தபோது செய்திருக்கிறேன். வித்தியாசமே தெரியாது. சிலர் இந்த லாங் கிரெயின் அரிசியோடு ஒரு கரண்டி அங்கேயே கிடைக்கும் புழுங்கல் அரிசியும் சேர்த்துக் கொள்வதாய்ச் சொன்னார்கள். முயலவும்.


செய்யும் முறை 4

இட்லி

மற்றொருவகை

புளுங்கல் அரிசி கிடைக்கவில்லையென்றால்

  • இரண்டு கப் பச்சரிசி
  • ஒரு கப் உளுந்து
  • கால் தேக்கரண்டி வெந்தயம்(அரிசியுடன் சேர்த்து ஊறவைக்கணும்)
  • இரண்டு மேஜைக்கரண்டி சாதம்
  • உப்பு சிறிதளவு

முதலில் உளுந்தை அரைத்து பிறகு அரிசி வெந்தயத்துடன் சாதம் உப்பு சேர்த்து
(மறக்காமல் கொர கொரப்பாக)அரைத்து எல்லாவற்றையும் (நன்கு)கலந்து 8 மணிநேரம் வைத்து பின் இட்லி அவிக்கணும்.

பூப்போன்ற வெள்ளை நிற இட்லி ரெடி :)


-மீனா rangameena@gmail.com

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=இட்லி&oldid=1072" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 26 ஜனவரி 2010, 21:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,112 முறைகள் அணுகப்பட்டது.