அன்றொரு நாள்:ஜூலை 13மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:47, 13 ஜூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம் கல்வி அறிவை வளர்க்கும். என்ன புதிசா மஹாவாக்யம் சொல்லிவிட்டீர்கள், புல்லட்டீன் போர்டில் போடுவதற்கு? ஒரு தாரதம்யம் வேண்டாம்? என்றெல்லாம் எள்ளி நகையாடுகிறீர்களா? அது உங்கள் உரிமை. எனினும், யான் சொல்லத்துணிவது யாதெனில், ‘கல்வி அறிவை வளர்க்கும்.’ என்று ஏகோபித்த அபிப்ராயமாக பகர்ந்துவிட்டு, கல்வியை மட்டம் தட்டுவதில் -அதாவது, அதை வளரவிடாமல், ‘மொழி வெறி’ என்ற த்வம்சுக்கட்டையால் மட்டம் தட்டி, மார் தட்டிக்கொள்கிறார்களே சமூக மார்க்கபந்துக்கள், அது நல்லது அன்று, என்பதே. சான்றாக, இன்றைய தேதியில், 1869 நடந்த நிகழ்வு ஒன்று. அவர் ஒரு சிவப்பழம். ஆசாரசீலர். சைவ சமய/ தத்துவ விசாரனையிலும், போதனையிலும், சைவ சம்பிரதாயங்களை கண்ணின் மணியென போற்றியவருமான அந்த சான்றோனின் தமிழ்பற்று, தமிழறிவு, தமிழ் ஞானம், தமிழ் படைப்பாற்றல் கரை கடந்தது. மூலநூல்களை பரிசோதித்து, ஒப்புமை ஆராய்ந்து, களையெடுத்து, பதிப்பாசிரியாக பேரும், புகழும் படைத்த அன்னாரின் மாணவர் ஶ்ரீல ஶ்ரீ.நா. கதிரைவேற்பிள்ளை அவர்களும், அவரது சீடரும், என்னுடைய மானசீக குருநாதருமான தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், அன்னாரின் வழியை பின்பற்றியதும், நம் கொடுப்பினை. பேசப்படுவது, ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் (18 12 1822 - 05 12 1879) என்பது வெளிப்படை. அவரை பற்றி முழு விவரமும் அறிய, நமது தமிழ் மரபு அறக்கட்டளை பதிவு செய்துள்ள கட்டுரையை சுட்டியிருக்கிறேன். அந்த கலோனிய காலத்து கட்டாயங்கள், வழக்கங்கள், நடைமுறைகளை புரிந்து கொண்டால், நாவலரின் விவிலிய மொழிபெயர்ப்பு பற்றியும், அவரது ‘சைவதூஷணபரிகாரம்’ போன்ற நூல்களின் தாக்கமும் புரிந்து கொள்வது எளிது. அவரது ‘போலியருட்பா மறுப்பு‘ என்ற நூலை பற்றி பேசும் இடமிது இல்லை. நான் சொல்ல வருவது நான்கு விஷயங்கள், ‘கல்வி அறிவை வளர்க்கும்.’ என்றுணர்ந்து ்ஶ்ரீல ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்கள் இயங்கிய விதம்: அவரது 60 நூல்களில் பாலபாடம் என்ற நான்கு தொகுப்புக்கள் நம்மை வியக்கவைக்கின்றன, எளிமையான, பளிங்கு நீர் போன்ற திண்ணைப்பள்ளிக்கூட தமிழ். சமச்சீர் கல்வி சர்ச்சையாளர்களே. சற்றே, அவற்றை பார்க்கவாவது பாருங்கள்.
கென்னெத் டைனன், விமரிசகர் & எழுத்தாளர் (1927 -1980)
இன்னம்பூரான் 13 07 2011
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=354&Itemid=467 http://ta.wikipedia.org/wiki/ஆறுமுக_நாவலர்
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:47, 13 ஜூலை 2011 (UTC) |