முதற் பக்கம்மரபு விக்கி இருந்துDev (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:58, 29 டிசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் ஆசார்ய பரம்பரை ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார்.
இந்த மஹாசார்யருடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது மரபு; இவர் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளைவடிவில் தோன்றி,
ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்; குமார வரதாசார்யர் ( 1316-1401AD ) பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது. சில குறிப்புக்கள்பல ஆசார்ய சிரேஷ்டர்கள் வேதநூற் பிராயம் எனப்படும் 100 வயது கடந்து வாழ்ந்துள்ளனர். கூரத்தாழ்வான் உடையவரைக் காட்டிலும் வயதில் பெரியவர்; முன்பு தோன்றி முன்பே மரித்துப் பரமபதத்தில் ஆசார்யனை எதிர்கொள்ளக் காத்திருந்தார். மஹா விரக்தரான கூரேசருக்கு 60 வயது கடந்தபின் குழந்தைகள் பிறந்தனர்; வடக்குத்திருவீதிப்பிள்ளையின் சரி்தமும் இது போன்றதே. உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் வந்த கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன்; அவரிடமே பயின்றவர்; நம்பிள்ளைகள் 2ம் ராஜராஜன், 3ம் குலோத்துங்கன் இவர்களின் காலத்தவராக இருந்திருக்க வேண்டும் பெரியவாச்சான் பிள்ளையும், வடக்குத் திருவீதிப் பிள்ளையும் ஒரே ஆண்டில் அவதரித்தவர்கள். ஸ்வாமி தேசிகன் பரமபதம் சென்ற அடுத்த ஆண்டில் அவதரித்தவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள். பொதுவாகத் துறவியர் இல்லறத்தாருக்குச் சீடராவதில்லை. விதிவிலக்காகத் துறவியான நம்ஜீயர், பராசர பட்டரின் சீடராக இருந்தார்; ப்ரம்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் சீடர். நம் ஜீயரின் ஒன்பதாயிரப்படியும், உடையவரின் ஸ்ரீ பாஷ்யமும் ஒரே அளவு கொண்டவை. . |