ஹொங்கொங்மரபு விக்கி இருந்துHK Arun (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 26 பெப்ரவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ஹொங்கொங் அல்லது ஹாங்காங் (Hong Kong) சீனமக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றொன்று மக்காவ் ஆகும். இந்த நாட்டை 1997ம் ஆண்டு பிரித்தானியர் சீனாவுக்கு கையளித்தனர். இருப்பினும் பிரித்தானியச் சட்டங்கள் தொடர்ந்து 1997 முதல் 2047 வரை இருக்கவேண்டும் எனும் சினோ-பிரிட்டிசு உடன்படிக்கையின் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஹொங்கொங் தனக்கெனெ தனித்துவமான சட்டத்திட்டங்கள், பொருளாதாரம், நாணயம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. உலகில் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது அதிக புழக்கம் உள்ள நாணயமாக ஹொங்கொங் டொலர் உள்ளது. ஆசியா நாடுகளிலேயே அதிக வளர்ச்சியுள்ள நான்கு நாடுகளில் ஹொங்கொங்கும் ஒன்றாகும். |