பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரரின் ஜயந்தி - சில சிந்தனைகள்மரபு விக்கி இருந்துSrirangam V Mohanarangan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:56, 10 ஜூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் எதை எதையோ எழுதிப் போது போக்குகிறோம். உலகமே பயனடையும் உன்னத தத்துவ சித்தாந்தங்களை அருளிய பெரியோர்களை ஏன் அவர்கள் சொந்த ஜயந்தி உற்சவத்தன்றாவது நினைக்கத் தவறுகிறோம்? மகான்களைப் பற்றிச் சிந்திப்பதால் நம் வாழ்க்கை மகத்துவம் பெறுகிறது. உயர்ந்த நிலையைப் பற்றிச் சிறிதாவது நம் மனம் எண்ணிப் பார்க்கிறது. சூனியம் என்ற பாழிருளைக் கடிந்த சூரியன் ஆதிசங்கரர். * ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய (?) ஹரிசரணாஷ்டகம் என்னும் ச்லோகத்தில் சில இடங்கள். ஏதோ பல தெய்வங்களுக்கும் ஸ்தோத்திரங்கள் இயற்றிய கணக்கில் எழுதினார் என்று சொல்ல முடியவில்லை. ஏன் இந்த வரிகளை முக்கியமாகப் போடுகிறார் என்பது யோசிக்க வேண்டியிருக்கிறது. த்யேயம் வதந்தி சிவம் ஏவ ஹி கேசித் அன்யே * ப்ரகரண கிரந்தங்களே அவர் எழுதியது சில அவர் பேரில் வந்தது சில என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். உதாரணமாக விவேகசூடாமணி... சங்கரர் எழுதியதுதான் என்று நினைத்தேன். ஆனால் இல்லை என்கிறார்கள். அது இல்லை முக்கியம். அதாவது ப்ரஹ்ம சூத்திரங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷதங்கள் ஆகிய ப்ரஸ்தான திரயங்களுக்கு (மூன்று முக்கிய ப்ரமாண நூல்களுக்கு) ஸ்ரீஆதிசங்கரர் எழுதிய பாஷ்யங்களும், வாழ்க்கையில் முதலில் அவர் பாஷ்யம் எழுதியதாகக் கூறப்படும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம், அதன் பாஷ்யமும் தெரிவிக்கும் கருத்து முடிவுகள்தாம் ஸ்ரீஆதிசங்கரரின் ஹ்ருதயத்தை உள்ளபடிக் கல்வெட்டாக்கி வைத்திருப்பது என்று நாம் அளவுகோல் வைத்துக்கொள்வது நியாயம். அந்த அளவுகோலின் படி கருத்துகளில் ஒத்திசைவு உள்ள நூல்கள் பொதுவாக ஸ்ரீஆதிசங்கரர் இயற்றியிருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த அளவுகோலுக்கு முற்றிலும் மாறான கருத்துகளும், முரணான கருத்துகளும் உடைய நூல்களை ஸ்ரீஆதிசங்கரர் இயற்றாமல் பின் நூற்றாண்டுகளில் வந்த குருமார்கள் சமுதாய பண்பாட்டு நிலைகளின் கருத்து மாற்றங்கள் காரணமாகத் தாம் எழுதி, அவை அடுத்து வந்தோரால் பொதுவாக சங்கரர் என்ற பேரில் சேர்த்துக் கணக்கிட்டிருக்க வேண்டும் என்று படுகிறது. பாரபட்சமற்ற ஆய்வுகள்தாம் தெளிவை இந்த விஷயத்தில் நல்க வேண்டும் என்று நினைக்கிறேன். * ஸ்ரீ ஆதிசங்கரர் சான்று மிக்கதாகக் கொண்ட புராணம் புராணங்களில் பழமை மிக்கதான ஸ்ரீ விஷ்ணு புராணம். அந்தப் புராணத்தில் விஷ்ணு பக்தன் என்பவன் யார்? என்னும் கேள்விக்குப் பதில் "தன் தர்மத்தில் வழுவாமல் நிற்பவனாய், நண்பன், எதிரி ஆகியோரின் நெறிகளில் விருப்போ வெறுப்போ இன்றிச் சம மதியை உடையவனாய், எள்ளளவும் திருட்டு இல்லாதவனாய், சிறிதும் பிறரைத் துன்புறுத்தாதவனாய், நிலை பெற்ற மனத்தை உடையவனாய் இருப்பவன் எவனோ அவனே விஷ்ணு பக்தன்." (ஸ்ரீ விஷ்ணு புராணம், 3 - 7- 20) * விஷ்ணு புராண ச்லோகத்தின் பொருளில் ஊன்றிக் கவனிக்க வெண்டிய அம்சம் என்னவென்றால் - தன் தர்மத்தில் ஒருவன் ஊன்றி நிலையாக நிற்கும்போதும் நண்பன், எதிரி ஆகியோருடைய நெறிகளில் விருப்பையோ வெறுப்பையோ ஒருவன் கொள்ளக்கூடாது என்பது. அதாவது சமய நெறிகளும் சமரஸவாதமும் என்னும் கட்டுரையில் நான் கூறியிருக்கும் கருத்தான We agree to differ என்னும் பண்பட்ட சம்பாஷ்ணையின் அடிப்படைக்கு ஸ்ரீ ஆதிசங்கரர் காலத்திற்கு முன்பிருந்தே சான்றான புராணமாகிய ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் கருத்து வலு சேர்க்கிறது. * கேடுகள் அனைத்திற்கும் காரணம் எனவே சங்கல்பம் அனைத்தையும் விடுக. வாழும் போதே கைவல்யம் உடல்பிரிந்த பின்னும் கைவல்யம் ஆகும். பேதத்தைக் கொஞ்சம் பார்க்கும் நப்பாசை பெருத்த பயத்தில் கொண்டு முடியும் என்றுரைக்கும் யஜுர் வேதம். (விவேக சூடாமணி) (மொழிபெயர்ப்பு - என்னுடையது) * The ultimate attainment is Advaita Not knowing this, should I suffer More and more in mind, being torpid like the dull-heads Swayed by the ghost of I ? Oh Thee! who are Pure and the Total Whole, Out and out against all blemishes, Limitless, Ever in the self-nature, Never becoming alien to the bliss and power of the intrinsic Self-nature, Thee! who art the One, flourishing in the fructified Grace! -- Tr by myself of Thayumanavar's song. the original -- அத்வைதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய் அகந்தையோடு மத்தமதியினர் போல மனம் கிடப்ப இன்னமின்னம் வருந்துவேனோ? சுத்தபரி பூரணமாய், நின்மலமாய், அகண்டிதமாய்ச் சொரூபானந்தச் சக்திகள் நீங் காதவணம் தன்மயமாய், அருள்பழுத்துத் தழைத்த ஒன்றே! *** |