கோவிலூர் ஆதீனம் - அறிமுகம்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:16, 11 டிசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் வணக்கம். தமிழகத்தின் கோவிலூர் ஆதீனம் நிகழ்த்திவரும் சமூக சமயத்தொண்டினை பகிர்ந்து கொள்ளும் சில விழியப் பதிவுகளை அண்மையில் வெளியிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக இவ்வாதீனத்தை அறிமுகப்படுத்தும் தகவல்களின் தொகுப்பாக பல தகவல்களை ஒவ்வொன்றாக இந்த இழையில் பதிந்து வெளியிட உள்ளோம். இப்பதிவுகள் அடங்கிய நூலினை ஆதீனத்தின் திருமடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது ஆதீனகர்த்தரவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கினார்கள். இந்த நூலில் ஆதீனத்தை அறிமுகப்படுத்தும் பெரிய சிறிய கட்டுரைகளும் பதிவுகளும் அடங்கியிருக்கின்றன. வரலாற்றுப் பதிவு என்றும் இதனைக் குறிப்பிடலாம். இக்கட்டுரைகளை மின்தமிழ் வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து இங்கு வெளியிட உள்ளோம். இக்கட்டுரைகளைத் தட்டச்சும் பணியை கீதா சாம்பசிவம் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். முதல் பதிவின் முதல் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது. நவராத்திரி விஷேஷம் தொடங்கும் நன்னாளில் இப்பதிவுகள் தொடங்கப்படுவதை தனி விஷேஷமாகக் கருதுகின்றேன். இப்பதிவுகளில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பான வாசகர்களின் கருத்துக்கள் இவ்விழையில் எதிர்பார்க்கப்படுகின்றன. சுபாஷிணி ட்ரெம்மல் [தமிழ் மரபு அறக்கட்டளை] --Ksubashini (பேச்சு) 08:14, 11 டிசம்பர் 2013 (GMT) |