பரந்தாமனுக்குப் பல்லாண்டுமரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:27, 12 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
இங்(கு)எம் ம்னத்தில் இடம்பிடித்தாய் திருமார்பில்
தங்கத் திருமகளும் தானிருக்க அன்றந்தத்
துங்க வ்ரைசுமந்த தோளுடையாய் ப்ல்லாண்டு.
2. கதிரா யிரம்போல்க் காணும் வ்யிரமுடி எதிரே சுடர்காட்டும் ஏழுமலைக்(கு) அதிபதியே
பதியில் சிற்ந்ததிருப் பதிஉறைவாய் நின்ன்டியே
கதியாய் நினைக்கின்றோம் காத்தருள்வாய் ப்ல்லாண்டு.
3. தாயாம் அலர்மேலு தானுறையும் ம்லர்மார்பா வாயால் உனைப்பாடி வ்ழிவ்ழியாய்த் தொழுதெழுந்தோம்
மாயா திரும்லைவாழ் ம்லையப்பா நின்னடிகள்
ஓயாமல் சிந்தித்தோம் உத்தமனே ப்ல்லாண்டு.
4. கரியோடு பரிமாவும் காலாளும் தேர்ப்படையும் உரியானைப் பாண்டவ்ர்பால் உள்வ்ர்மம் உடையானைத்
துரியனைத் தான்வெல்லத் துலங்குபரித் தேரோட்டி
வரிவில் விசயனையே வாழ்வித்தாய் பல்லாண்டு.
5. கயல்திகழும் ம்லைச்சுனையில் காலையிலே நீராடி வயற்கம்லம் போல்விளங்கும் வண்ணவிழி அருள்நோக்கால்
துயரகற்ற வேண்டுமெனத் தொழுது பணியுமெங்கள்
மயலகற்றி அருள்புரிவாய் ம்லையப்பா பல்லாண்டு.
6. சங்கேந்து கையுடையாய் சக்கரமும் தானுடையாய் மங்கையலர் மேலு ம்கிழ்ந்துறையும் ம்ர்புடையாய்
கொங்குண் ம்லர்வண்டு கோவிந்தா என்றழைக்கும்
தங்கத் திருமுடியாய் தளிரடிக்கே ப்ல்லாண்டு.
7. ஏதங்கள் போக்கி எமையாளும் வேங்கடவா போதார் கமலப் பொகுட்டுறையும் திருமகட்கு
நாதா திருமலைக்கு நாயகனே நின்னுடைய
பாதம் கதியென்று பணிந்திட்டோம் ப்ல்லாண்டு.
8. சங்கமுடன் ஆழிஒரு சாரங்க வில்லெடுத்தோய் பொங்கெழில்சேர் தாமரைபோல் பூத்தவிழிக் க்ம்லங்கள்
எங்கள்வினை போயகல் எழுகட்ல்போல் அருள்சுரக்கப்
பங்கயத்தாள் பற்றிட்டோம் பரந்தாமா பல்லாண்டு
9. படர்அலைகள் மேலிருக்கும் பாம்பணைமேல் கிடந்தானைத் தடங்கடலுள் தான்பாய்ந்து தனிமறைகள் காத்தானை
மடங்கலாய் இரணியன்தன் மார்பகலம் கீண்டானை
வடவாலில் இருந்தானை வ்ணங்கிடுவோம் பல்லாண்டு.
10. கார்பொலியும் திருமலைமேல் கால்மெலாம் இருந்தானை நீர்பொலியும் பாற்கடலே நிலைஎனக்கண் வளர்ந்தானைத்
தார்மாலை சூடிவரும் தாமரைக்கண் திருமாலைப்
பார்வாழப் பாடிடுவோம் பரந்தாமா பல்லாண்டு.
11. நீலமா முகிலனைய நிறத்தானே நெய்விரவு
கோலக் குழ்ற்கோதை கொண்டிலகு மார்புடையாய்
ஆலிலைமேல் கண்வளரும் அமுதவாய்ப் பரம்பொருளே
நாலுமறை வேங்கடவா நாயகனே பல்லாண்டு.
12. செங்கமலம் போலச் சிவந்தவாய் இதழுடையாய்
மங்கலப்பொன் ம்ணிமாலை மார்பிலங்கு மாயவ்னே
எங்கள் குலத்தரசே ஏழேழ் தலைமுறைக்கும்
இங்குனககுச் ச்ரணங்கள் இனியவனே பல்லாண்டு.
13. ஆயர்குலத்(து) அணிவிளக்கே அகிலமுழு தாள்பவனே
காயாம்பூ நிறமுடைய கார்வ்ண்ணா உச்சிமலை
தோயும் முகிலுக்கும் துணையான வேங்கட்வா
மாயவனே எழிற்சோலை மலையழகா பல்லாண்டு.
14. நீராழி உடையுடுத்த நிலப்பெண்ணாள் தினம்மருவும்
பேராளா எங்கள் பெருமானே பாண்டவர்க்குத்
தேரோட்டி உலகுய்யத் திருவருளைச் செய்தவனே
ஓராழி கையுடைய உத்தமனே பல்லாண்டு.
15. போரானைத் தோலுரித்த பூந்துழாய் மார்பனே
நாராயணா திருமலையின் நாயகனே செந்திருவாழ்
சீரார் மணிமார்பா செழுங்ககமலத் தாளுடையாய்
ஏராரும் சோலை இருந்தருள்வாய் பல்லாண்டு.
16. சாரங்க வில்லுடையாய் சக்கரமாம் படையுடையாய்
போரரங்கம் புழுதிபடப் பொற்றேர் செலுத்திய்வா
தாரம்கொள் இராவணனைத் த்ரைமேல் கிடத்தியவா
பேர்ரங்கம் கிடந்திட்ட பெரியவனே பல்லாண்டு.
17. கற்பகக்கா தானுடைய காவ்ல்னை அந்நாளில்
பொற்பழித்த தானவரைப் புறங்கண்ட சேவகனே
வெற்பெடுத்த இராவணனை வென்றழித்த நாயகனே
மற்போர்செய் தோளுடைய மாதவனே பல்லாண்டு.
18. முப்பொழுதும் தவறாமல் முனிவரெலாம் தான்வ்ணங்கும்
மெப்பொருளே திருமலைவாழ் மேலவனே நின்மலர்த்தாள்
எப்பொழுதும் துதிக்கின்ற எமைக்காக்கும் ஏழுமலை
அப்பாஉன் பொன்னடிக்கே ஆயிரமாம் பல்லாண்டு.
19. வடமலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
அடலமரர தானவர்கள் ஆழிகடை வேளையிலே
சுடரும்பொற் குடத்தமுதைப் பங்கிடவே சோதியென
மடவரலாய் வந்ததிரு மலையப்பா பல்லாண்டு.
20. தன்னேரில் பாரதப்போர் தான்நடக்கும் காலத்தில்
மின்னேர்வில் விசயனுக்கு மேலான கீதையுரை
சொன்னவனே அவனுக்குச் சோதிமிகு பேருருவம்
தன்னையே காட்டிவைத்த தக்க்வ்னே பல்லாண்டு.
21. பார்விழுங்கும் கடலுக்குள் பன்றியாய்த் தான்பாய்ந்து
போரவுணன் திறலடக்கிப் பூமியினைத் தன்னுடைய
ஓர்ம்ருப்பில் தானேந்தி உலகாண்ட வேங்கடவா
சீர்திகழும் திருமலைவாழ் செல்வனே பல்லாண்டு.
22. மன்னுபுகழ்த் திருவரங்க மாமணியே பாய்ந்துவரும்
பொன்னிநதி அடிதழுவும் பூவடியாய் அலர்மேலு
மின்னிடையாள் நாயகனே மேலைநாள் குன்றெடுதத்
இன்னமுதே க்ண்ணா எழிற்சுடரே பல்லாண்டு.
23. மாமறையும் முனிவரரும் ம்ற்றுமுள்ள் தேவர்களும்
பாம்ரரும் வ்ந்துபணி பரந்தாமா கோபியர்கள்
தாமயங்கக் குழலூதித் த்ண்ணருளைச் செய்தவனே
கோமகனே வேங்கடவா கும்பிட்டோம் பல்லாண்டு.
24. கானிடையே பசுமேய்த்த கரியமா முகிலனையாய்
வானமரர் தொழுதேத்த வ்ண்டரவம் செய்யல்ங்கல்
தானணிந்த மாலவனே மாமலராள் நாயகனே
தேனுடைய் மல்ர்ச்சோலைத் திருமாலே பல்லாண்டு.
25. காரார் திருமேனிக் காகுத்தன் எனத்தோன்றிப்
போராரும் நெடுவேற் புகழிலங்கை இராவ்ண்னைத்
தேரோடும் முடியோடும் திருநிலத்தே தான்கிடத்தி
ஏராரும் அம்ரரைஈ(டு) ஏற்றியவா பல்லாண்டு.
26. சித்திரப்புள் ஏறிவரும் சீரங்கா பணிவார்க்கே
முத்திதரும் கருநீல முகில்வண்ணா உலகளந்த
வித்தகனே சனகன்து வில்லறுத்த நாயகனே
தத்துபுகழ் வேங்கடவா தளிரடிக்கே பல்லாண்டு.
27. திக்குநிறை அரக்கர்குழாம் தெருண்டோட அத்திரங்கள்
மிக்கபெரு மாரியென மேல்விடுத்த சேவகனே
தக்கபுகழ் வைதேகி தான்ம்ணந்த ம்ணவாளா
செக்கர்வான் என்ச்சிவந்த சேவடிக்கே பல்லாண்டு.
28. வம்புலாம் நற்கூந்தல் வாட்கண்ணாள் அல்ர்மேலு
கொம்பனாள் த்ன்மேனி கூடியவா கூரியநல்
அம்பனைய க்ண்ணாள் அழகுபத் மாவதியாம்
செம்பொன்னாள் தனைமணந்த சேவகனே பல்லாண்டு.
29. ஆதிப்பிரான் நம்மாழ்வார்க்(கு) அன்றருள்செய் மால்வண்ணச்
சோதிப்பிரான் திருக்குருகூர்ச் சுடரிலங்கு வ்ல்லியாள்
கோதைப்பிரான் வ்ந்தீண்டு குடிகுடியாய் ஆட்செய்வார்
சாதிப்பிரான் வேங்கடவா சாதித்தோம் பல்லாண்டு.
30. நாடுவார்க்(கு) அருள்கின்ற ந்ம்பியுன் பாதமலர்
சூடுவார் ந்லம்பெறுவார் சொல்மாலை புனைந்தேத்திப்
பாடுவார் பதம்பெறுவார் பக்தியால் திருமலையைத்
தேடுவார் தமைக்காக்கும் திருப்பதியே பல்லாண்டு..
31. வில்லாண்ட தோள்இராமன் வித்தகனாம் அனுமனெனும்
சொல்லாண்ட சுந்தரன்கீழ்ச் சூழ்ந்திருக்க வலிமைமிகு
கலலாண்ட தோளுடையாய் காகுத்தா உன்க்கிங்கே
பல்லாண்டு முகில்தோயும் திருமலையா பல்லாண்டு.
32. கோகுலத்தில் அந்நாளில் குடிமக்கள் இல்புகுந்து
பாகனைய மொழிபேசும் பாவையராம் ஆய்ச்சியர்சேர்
மாகுடத்துப் பால்தயிரும் மற்றிருந்த வெண்ணெயையும்
மோகமுட்ன் அருந்தியவா முழுமுதலே பல்லாண்டு.
33. பங்கயங்கள் வாய்நெகிழப் படர்ந்தருவி தாம்முழஙகச்
செங்கயல்கள் துள்ளிவிழச் சிறுவண்டு ப்றந்துவ்ர
எங்கும் அழகுபொலி இயற்கைவளத் திருப்பதியில்
மங்கல்மாய் இருந்தருளும் ம்லையப்பா பல்லாண்டு
34. சங்கொருகை. ஏந்தியவா சக்கரமும் ஏந்தியவா
மங்கையாம் அல்ர்மேலு ம்கிழந்துறையும் திருமாரபா
தி ங்கள்போல் திருமுகத்தில் தேசுடைட வே ங்க்க்டவா
பொங்குபுகழ்த் திருமலைவாழ் புண்ணியனே பல்லாண்டு.
35. கரிய்முகில் மால்வண்ணா கஞ்சன் அனுப்பிவைத்த
கரியழியப் போர்செய்த காயாம்பூ மேனியனே
பெருகிவரும் பேரின்பப் பெருவாழ்வு தரவந்த
திருமலைவாழ் வேங்கடவா தெண்ட்னிட்டேன் பல்லாண்டு.
36. வண்டாடும் சோலை வளைந்தாடும் செடிகொடிகள்
மண்டூகம் பாய்சுனைகள் மாலடிகள் தொடுகற்கள்
கொண்டதொரு திருமலைவாழ் கோவிந்தா கோபாலா
பண்டரக்கன் தலைஎடுத்த் பரந்தாமா பல்லாண்டு.
37. மதகளிற்றின் கொம்பொசித்து மல்லரையும் சாய்ப்பித்து
நதிபொன்னி கால்வருட நமையாள்க் க்ண்வள்ர்வாய்
எதிராச மாமுனிவர் ஏந்துபுகழ்த் திருவரங்கா
கதியான வேங்கடவா கற்ப்க்மே பல்லாண்டு.
38. பஞசடியாள் ந்ப்பின்னை பார்த்திடஏழ் எருதடக்கி
நஞ்ரவச் சிரசின்மேல் ந்டனங்கள் ஆடியவா
வெஞ்சிறையில் பிறந்த்வனே வெவ்வினைகள் தானகல
நெஞ்சிடையில் செம்பொருளாய் நிற்பவனே பல்லாண்டு.
39. மொய்வண்டு முகைவிரித்து முகிழ்த்ததேன் தனையருந்தி
மெய்மறந்து தவம்கிடக்கும் மேலான திருப்பதியில்
கையாழி ஏந்தியவா கமலக்கண் நாயகனே
அய்யா ம்லையப்பா அரங்க்னே பல்லாண்டு.
40. கடல்மல்லைத் தலசயனம் கச்சியொடு திருவெக்கா
குடந்தையொடு விண்ணகரம் கோலமிகு திருநறையூர்
படர்வைகைத் திருக்கூடல் பாடகம் திருத்தண்கா
குடிகொண்டு திருமலைவாழ் கோவிந்தா பல்லாண்டு.
41. திருவிடந்தை கரம்பனூர் திருநாகை கண்ணபுரம் திருவல்லிக் கேணியொடு திருக்கடிகை திருக்கோழி
திருவில்லி புத்தூர் திருமோகூர் திருமெய்யம்
திருவனந்தை வாழ்முகிலே திருப்பதியே பல்லாண்டு.
42. ஊரகம் திருச்சேறை ஓங்குபுகழ்த் திருவழுந்தூர்
நீரகம் சிறுபுலியூர் திருநந்தி விண்ணகரம்
காரகம் கள்வனூர் திருக்காழி விண்ணகரம்
சீரகமாய்க் கொண்டதொரு செங்கண்மால் பல்லாண்டு.
43. செப்பனைய மார்புடைய சிற்றிடைசேர் ஆய்ச்கியரகள்
எப்பொழுதும் சூழ்ந்திருக்க இனியகுழல் ஊதியவா
முப்போதும் வானமரர் முன்வ்ணங்கும் முதற்பொருளே
உப்பிலியாய் ம்லையப்பா உன்னடிக்கே பல்லாண்டு.
44. உலவுதிரைப் பாற்கடலுள் உரகமிசைக் க்ண்வள்ர்வாய்
பொலிவுடைய திருமேனிப் பூமகளுன் கால்வருடத்
தலைமுடிகள் ஆயிரத்தால் த்ரணிதனைத் தாங்குகின்ற்
நலமிக்க சேடனுக்கு நாயகமே பல்லாண்டு.
45. போர்ப்பூமி தானதிரப் பொற்றேரை நடத்தியவா
தேர்பூத்த மாமுகிலே திருத்துழாய் நெடுமாலே
பார்காக்கப் போர்தொடுத்த பாண்ட்வர்க்கு மைத்துனனே
சீர்பூத்த திருமகளைச் சேரந்தவ்னே பல்லாண்டு.
46. மின்னியலும் பொன்மடவார் மேதகுநல் ஆய்ச்சியர்க்ள்
பொன்னாடை தனைக்கவ்ர்ந்த புண்ணியனே மழைகண்ணா
பின்னதோர் அரியாகிப் பேரசுரன் மார்பிடந்த
ம்ன்னாதென் திருவரங்கா ம்லையப்பா பல்லாண்டு
47. மன்னுமொரு குற்ள்வடிவாய் . மாவலியைச் செற்றவனே
அன்னவயல் திருவாலி அமர்ந்துள்ள பெருமாளே
முன்னீர்க் கடல்கடந்த முகில்வண்ணா உன்பெருமை
என்னே எனப்புகல என்னுயிரே பல்லாண்டு.
48. பூம்றைகள் தானார்த்துப் புகழ்பாடக் க்ண்வளரும்
தாம்ரையாள் நாயகனே தாளால் உலகளந்த
மாமுகிலே மழைவ்ண்ணா மணிக்க்யிற்றால் க்ட்டுண்ட
தாமோ த்ரனே தனிப்பொருளே பல்லாண்டு.
49. தென்னன் பொதிய்மலைத் தேசுடைய சந்தனங்கள்
மன்னும் திருமேனி திருமால் இருஞ்சோலை
உன்னி உறையும் உறங்காத க்ண்ணுடையாய்
இன்னமுத்ப் பாற்க்ட்லின் இருநிதியே பல்லாண்டு.
50. சீருண்ட் திருமேனிச் செவ்வாயான் அன்றந்த்ப்
பாருண்டு தாய்காணப் பார்காட்டி ஆட்கொண்டான்
நீருண்ட முகில்னைய நெடுமேனித் திருமாலே
தாருண்ட திருத்துழாய் தாங்கியவா பல்லாண்டு.
61. செவ்வாய்க் குழல்கேட்ட சிற்றிடைநல் ஆய்ச்சியர்கள்
அவ்வாய்ச் சுவைகண்ட் அழகுடைய வெண்சங்கை
எவ்வாறு இருந்ததென் எண்ணியொரு வினாக்கேட்ட்
கொவ்வையிதழ் ஆண்டாளைக் கூடியவா பல்லாண்டு.
62. தாதெல்லாம் த்ரைமலிய்த் தண்தரைமேல் நீர்நிறையக்
கோதிலாக் குயிலினங்கள் குழல்போல் இசைபொழிய
மாதரசி ந்ப்பின்னை ம்னத்துக்(கு) உகந்தவ்னே
போதராய் எம்மிட்த்தே பூவண்ணா பல்லாண்டு.
63. விண்ணாகிக் காற்றாய் விளங்கும் அனலாகி
மண்ணாகி எங்கும் ம்லிபுனலாய் ஆனவ்னே
உண்ணேரும் ஆவியாய் உகந்திருக்கும் பெருமானே
கண்ணே திருமலைவாழ் க்ற்பகமே பல்லாண்டு.
64. வண்டாடும் சோலை வடவேங் கடத்தானே
உண்டாய்நீ மண்ணென்று கோபித்த உன்தாயும்
கண்டாள் உலக்னைத்தும் காட்டுவாய் உன்தென்று
கொண்டாடித் தொழுது நித்ம் கும்பிட்டோம் பல்லாண்டு.
65. அவம்புரிந்து வலியிழந்த அரக்கர்கோன் த்ன்னுடைய்
தவமஅழித்து நிறைவாணாள் த்னையழித்து வைத்தபிரான்
பவமகலச் ச்ரணமலர்ப் பாதங்கள் காட்டுவாய்
உவணத்தாய் வேங்கடவா உத்தம்னே பல்லாண்டு
66. காலால் சகடத்தின். கட்டழித்த பெருமானே
வாலால் அன்ல்வைத்த வ்லியமகனாம் அனும்ன்
பாலருளைச் சுரந்திட்ட் பரந்தாமா மாவலியைக்
காலால் அமிழ்த்தியவா க்ருமணியே பல்லாண்டு
67. சங்குடையாய் கையிலொரு சாரங்க வில்லுடையாய்
க்ங்கைகமழ் திருவ்டியாய் க்ருடனாம் கொடியுடையாய்
அங்குடையாய் உன்முடிமேல் அரவிருக்க ம்ங்கையொரு
பங்குடையான் மைத்துனனுன் பரமபதம் பல்லாண்டு.
68. செஞ்சோதித் தாமரைபோல் சிவந்திருக்கும் திருவடியை
நசூதும் பாம்பணைமேல் நங்கைதிரு கால்வருட
ம்ஞ்சூதும் ந்ன்ம்ழைபோல் ம்கிழ்ந்தருளைப் பொழிந்துவரும்
எஞ்சோதி வேங்கடவா ஏழுமலை பல்லாண்டு
69. க்ண்ணனே நெடுமாலே க்விங்குருகூர்ச் சடகோபன்
அண்ணலே த்மிழ்மாலை ஆயிரமாய்ப் பாடிவைத்த்
பண்ணாரும் பாட்லுக்குப் ப்ரம்பத்ம் அருளியவா
தண்ணார் கருமேனித் தாம்ரையே பல்லாண்டு.
70. மாமலராள் நப்பின்னை ம்ணவாளா திருவ்டியாம்
பூமலரைத் தலையேற்றுப் போற்றினோம் நின்னுடைய
நாம்ங்கள் ஓத் ந்லம்லளிக்கும். .பெருமானே
கோமுதலாய்க் கொண்டிட்ட கோபாலா பல்லாண்டு.
71. பாகனைய சொல்லாள் பரிவுடைய யசோதை
வாகாய்த் தழுவியுனை வளர்த்தநாள் அசுரருக்கே
ஆகுலங்கள் வேளைதொறும் அருளியவா அற்றைநாள்
கோகுலத்தைத் தன்னிடமாய்க் கொண்டவனே பல்லாண்டு.
72. மாறுபகை நூற்றுவரை மாமனொடு அசுரர்களை
நீறுபடச் செய்தவனே நிலங்கீண்ட பெருமானே
ஆறுதலைச் சிவனாரின் அன்பான மைத்துனனே
ஏறுபுகழ்த் திருப்பதிவாழ் இனியவனே பல்லாண்டு.
73. மாயத்தால் ஆய்ச்சியரை மயக்கியவா பாண்டவரைத்
தாயத்தால் வென்றவ்ர்கள் தானழிய்த் தேர்நடத்தி
வேய்ன்ன தோழி வியன்நங்ககை பாஞ்சாலி
தூய குழல்முடிக்கத் துணையானாய் பல்லாண்டு.
74. வார்புனல்சேர் அருவிநீர் வ்ழிந்தோடச் சூரிய்னார்
தேரேறி வ்லங்கொண்ட் திருப்பதிவாழ் பெருமானே
சீர்பூத்த தாமரையாம் சேவடிகள் காப்பதெனப்
பேர்பாடி வணங்குகிறோம் பீடுடையாய் பல்லாண்டு.
75. சேலாரும் க்ண்ணாள்ந்ற் சீதைக்காய் மான்பின்னே
காலோய ஓடியஎம் காகுத்தா ம்ண்பொதிந்த்
ஞாலத்தை அன்றாண்ட நாய்கன்நீ காப்பென்றே
ஓலமிட்டோம் திருப்பதியாம் ஊருடையாய் பல்லாண்டு.
76. திருவாலி நாட்ன் திருமங்கை ம்ன்னன்சொல்
திருமொழிக்கு மயங்கியவா திருவாழி சங்கமுடன்
அருளாழிக் க்டலாகி அல்ர்மேலுத் தாயாரை
ஒருமார்பில் வைத்திட்ட உடைய்வனே பல்லாண்டு.
77 பூரத்தில் உதித்தாளை புகழ்பாவை நூலோதிக்
காரொத்த மேனிதிருக் க்ண்ணனையே அடை ந்தாளைத்
தார்சூட்டித் தந்தவளைத் த்ன்னிடத்தில் கொண்டவனே
பேர்ரங்கம் உடைய்தொரு. பெரியவனே பல்லாண்டு.
78. தேன்மலர்சேர் காவிரிசூழ் தென்னரங்கா பக்திகொண்ட்
பான்மையினால் யதிராஜர் பரவிடவே அருளிய்வா
மேன்மையால் நின்ன்டியை மேலாக் எண்ணியவர்
வானாடு பெற்வைத்த வ்ள்ளலே பல்லாண்டு.
79. பூந்துழாய் மார்புடைய் புண்ணியனே பொன்னாழி
ஏ ந்துகரம் உடையவனே இனியபத் மாவதியின்
பூந்துகில்மேல் மனம்வைத்த போரேறே ம்லையப்பா
நா த்கவாள் ஏந்தியந்ல் நாயகனே பல்லாண்டு.
80. தீதுடைய் கெளரவுர்கள் தீரமிக்க பாண்டவரைச்
சூதாலே வென்ற்வரைச் சூழ்ச்சியால் கான்போக்க்த்
தூதாய் நடந்தவர்க்குத் துணையான வேங்கடவா
பாத்மலர் தலைவைத்துப் பணிகின்றோம் பல்லாண்டு.
81. கொல்வித்த பூதகியைக் கொல்வித்தாய் தூதுநீ
சொலலவந்த போதன்று சூழ்ச்சிபல செய்தார்க்கே
நல்லவழி காட்டநீ நல்லபெரு வடிவெடுத்தாய்
மல்லார்தோள் திருமலைவாழ் ம்லையப்பா பல்லாண்டு.
82. வானளந்த காலுடையாய் வார்கடல்போல் நிறமுடையாய்
கானளந்த நறுந்துளவக் கவின்ம்ணக்கும தோளுடையாய்
மீனளந்த க்ண்ணுடையாள் மேலான அலர்மேலு
தானிருக்கும் மார்பனே தாயனையாய் பல்லாண்டு.
83. அவரவர்க்கே உரியதனை அளந்தளிக்கும் பெருமானே
எவர்வரினும் அவர்பக்தி இங்குண்மை ஆனாலோ
உவப்புடனே அவர்மன்த்தின் உட்பொருளாய் இருபபவனே
தவமிக்க திருப்பதிவாழ் தனித்தேவே பல்லாண்டு.
84. திருக்கோட்டி யூர்நம்பி திகழ்யமுனைத் துறைவனார்
திருக்கோட்;டும் பெரும்புதூர்த் திருமகனர் எதிராசர்
அருட்கோவில் கொண்டிருக்கும் அழகதனைக் காணவைத்தாய்
உருககாட்டி வேங்கடத்தில் உறைபவனே பல்லாண்டு.
85. மதிஇரவி உடுக்களுடன் மற்றுமுள்ள கோளகளுக்கும்
அதிபதிநீ அல்லாண்ட மேனியனே அழகுபத்மா
வதிபதிநீ அசோதை வளர்ம்தலாய் பரமபதப்
பதிபுரக்கும் திருமலையே பரந்தாமா பல்லாண்டு.
86. அதிர்கின்ற கடல்வண்ணா அசோதை மடியிருந்து
மதுரமுலை அமுதுண்டு மருதொசித்த பெருமானே
உதரத்தில் நான்முகனைத் தாமரைமேல் உதிக்கவைத்த
கதிர்முடிசேர் வேங்கடவா கருமுகிலே பல்லாண்டு.
87. பங்கயங்கள் வாய்நெகிழ்ந்து பனித்துளிபோல் தேனசொரியக்
கொங்குண்ணும் வண்டின்ங்கள் குடித்துன்றன் புகழ்பாட
மங்கை அலர்மேலு ம்கிழ்ந்தணைக்கும ம்ணவாளா
சங்கேந்தும் வேங்கடவா சககரமால் பல்லாண்டு.
88. கொத்தார் குழல்பின்னை கோவலனே என்றுன்னை
எத்தாலும் சேவித்தாள் இதயத்தில் உனைவைத்தாள்
நத்தார் புனலரவில் நடனமிட்ட நாரணனே
வித்தாய் இருக்கின்ற வேங்கடவா பல்லாண்டு.
89. செங்கைத் தலத்தாலே சிறீதரா நீயன்று
துங்கப் பரிபொருந்தும் தூய்தொரு தேர்நடத்தி
மங்கையாள் பாஞ்சாலி மனச்சபதம் நிறைவேற்றி
எங்களையும் காத்துவரும் ஏழுமலை பல்லாண்டு.
90. இரவனைய நிற்முடையாய் ஏறேழும் தழுவியவா
அரவ்ணையாய் கோபாலா அரசுரர்களின் கூற்றுவனே
உரவுடைய தோளாய் உததியிலே கண்வளரும்
கரவ்றியா வேங்கடவா கைகுவித்தோம் பல்லாண்டு.
91 படஅரவில். துயில்கொள்ளும் பாற்கடலாய் சீனிவாசா
மடவரலாம் பாஞ்சாலி மானத்தைக் காத்தவனே
உடையவரும் ஆழ்வாரும் உவந்துபணி வேங்கடத்தை
இடமாக உடையவனே ஈடில்லாய் பல்லாண்டு.
92. இனியவனே திருமகளுக்(கு) ஏற்றதுணை ஆனவனே
கனிசபரி தரவுண்ட காகுத்தா கைவில்லி
உனைவெல்ல வ்ருமவுணர் உயிர்வாங்கி வீடளித்த
பனித்துளவ முடியுடையாய் வேங்கடவா பல்லாண்டு.
93. ஏர்வளரும் சோலை இருந்தழ்கு செய்துவரப்
பார்வளரும் மாந்தர் பலர்வந்து ப்ணியுமொரு
சீர்கொண்ட வேங்கடவா சிலைமலர்ந்த தோளுடையாய்
கார்;கொண்ட மேனிக் கடவுள்மால் பல்லாண்டு.
94. திருநெடுமாற்(கு) அடிமையெந்த் தினம்ப்ணியும் அடியார்கள்
கருமாலே ம்ணிவண்ணா கடல்கடைந்த மாயவனே
பெருமாளே மோகினியாய்ப் பேரமுதம் பங்கிட்ட்
திருமாலே வேங்கட்வா தெண்டனிட்டோம் பல்லாண்டு.
95. புள்ளின்வாய் கீண்டோனே பூத்ங்க்ள் ஐந்தானாய்
கள்ள்ச் சகடத்தைக் காலால் உதைத்தழித்தாய்
வெள்ளம்போல் வ்ருகமவுண்ர் வீயநீ அம்பெய்தாய்
உள்ளத்தில் வேங்கடவா ஒளியானாய் பல்லாண்டு.
96. கோதை ம்ணவாளா கோவலனாய்ப் பிறந்தவனே
சீதை திருக்கேள்வா சிறையெடுத்த இராவணனை
வாதையுற்ற தேவர்களை வாழவைத்த் நாயகனே
தீதக்ற்றும் வேங்கடவா தேன்த்மிழால் பல்லாண்டு
97. முடியார் திருமலையின். முத்ற்பொருளே முன்பணியும்
அடியார் படுதுயரம் அழித்தருளும் பெருமானே
செடியான வல்வினைகள் சேர்த்தழிக்கும் உயர்கருடக்
கொடியானே வேங்கடவா நெடுமாலே பல்லாண்டு.
98. தீதுரைத்த கெள்ரவ்ர்கள் தீமைசெயப் பாண்டவர்க்காய்த்
தூதுரைத்த கேசவனே துளவநறுந் தாருடையாய்
மாதுரைத்த சொல்லுக்காய் மாநகரம் நீங்கியவா
தீதறுக்கும் வேங்க்டவா திருமலையே பல்லாண்டு.
99. கோட்டானைக் கொம்பொடித்தாய் குதிரையினை அடக்கிவைத்தாய்
தாட்டா ம்ரையாலே காளிங்கன் த்லைமிதித்தாய்
மாட்டாத் இராவணனை ம்ண்ணிலே விழச்செய்தாய்
தேட்டாளா வேங்கடவா திருமலையே பல்லாண்டு.
100. வில்லாண்ட தோளாய் வியந்துளவத் தாருடையாய்
எல்லாண்ட மேனி இனியதிரு வேங்கடவா
கல்லாண்ட மனத்தைக் க்ரைத்துநீ காத்தருள்க
சொல்லாண்ட செந்தமிழால் சொல்லிவைத்தேன் பல்லாண்டு.
நிறைவுற்து - காப்பியக் க்விஞர். நா.மீன்வன் பங்கயத்தாள் பற்றிட்டோம் பரந்தாமா பல்லாண்டு --Ksubashini (பேச்சு) 15:27, 12 அக்டோபர் 2013 (CDT) |