தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-8(முற்றும்)மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:16, 28 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 20 தமிழ் இலக்கிய வகைகள்= சுமேருத் தமிழ் உட்பட-8 முனைவர் கி.லோகநாதன் 2012
சித்தர் அல்லது தவயோக இலக்கியங்கள் 37.0 சுமேருத் தமிழில் ‘சித்து’ என்ற சொல் ஓதுதல் என்ற கருத்தில் பயில்கின்றது. மந்திரங்களை ஓதி பிணி தீர்த்தல் ஓர் பெருங்கலையாகவே இருந்திருக்கின்றது, இது தொடர்பாக Udug Hul (உடுக்கு கொல்) Er Semma (ஏர் செம்பு< செம்பு வரி?) என்பன போன்ற மந்திர நூற்கள் பேரளவில் சுமேருத் தமிழில் இருக்கின்றன. கீழ் வரும் வரிகள் சித்து எனும் சொல்லின் பொருளை விளக்குவதாக இருக்கின்றது. சூல்கியின் முதரீபியம்( Hymn B) 5. nam-tur-ra ga-e gin-nam im nu-mu-sar துர்ரநம் ஙாயே அங்ஙின்னம் இயம் நா மோ சாற்று 16. nam-dub-sar-ra ki nam-ku-zu-ba lu im-mi-DU.DU துப்புசாற்றுநம் கீழ் நன்கு சூப ஆளு DU.DUஇம்மின் 17. zi-zi-i ga-ga sid-nig-sid-de / zag im-mi-til-til விழிவிழீஇ கார்கார் சித்து நிக சித்து சாகை தீர்தீர்யிம்மின் 18 dinger Nidaba sig-ga Nidaba-ke திங்கள் நிடபை, சிக்க நிடபைக்கே 19. gestu-gizzal-la su dagal-la ma-ni-in-dug கஸ்த்து கீச்சல்ல செய் தகல்ல தூக்குமன்னின் இங்கு வரி 17-இல் ‘சித்து நிக சித்து’ என்று ‘ஓத்து மிக நல்ல ஓத்து” என்றவாறு ஓர் ‘இல் துப்பு’ ஆகிய பள்ளியில் போதிக்கப்பட்ட பாடங்கள் சுட்டப்படுகின்றன. ‘கத்து கீச்சல்’(< gestu-gizzal) என்ற சொல்லும் கீச்சல் குரலில் கத்தி ஓதுதல் என்ற பொருளையேத் தருவதைக் காண்க. ஆகுபெயராக இங்கு அறிவுகட்கு பல்வேறு பாடங்கட்கு உரியதாக பயன்படுகின்றது. ஆக சித்து என்பது ஓதுதல் என்றும் சித்தர்கள் இவ்வாறு மந்திரங்களை ஓதியும் இன்னும் பல வகையிலும் பிணி தீர்க்கின்ற வைத்தியர்கள் என்றும் பொருள் படுகின்றது. இவர்கள் பலவகையான தவயோகங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் கீழ் வரும் வரிகள் காட்டுகின்றன. 37.1 திருமாலின் அறிதுயிலும் ஊழல் உறக்கமும் கீழ்வரும் வரிகளில் ‘ஊழல் கொக்கோ’ என்றவாறு அதாவது ‘பொய் உறக்கம்’ என்றவாறு கடைச் சங்க இலக்கியத்தில் ‘அறிதுயில்’ என்றும் வர்ணிக்க்ப்படும் கருத்தோடு ஒத்து வருகின்றது. இதுவே யோக நித்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. உறங்கிக் கொண்டே ஞானக் கனவுகள் கண்டவாறு உலகங்களை எல்லாம் கண்டவாறு திருமால் படுக்கையில், பாம்பணையில் கிடப்பதால் இது பொய் உறக்கம் என்பதொடு பல்வேறு உலகங்களை அறிகின்ற துயிலும் ஆகின்றது. இப்படிப்பட்ட ஞானப் பார்வையே யோகப் பயிற்சியால் மலங்கள் வாட்டி விஞ்ஞான காட்சி சிவஞானக் காட்சி போன்றவற்றை மகிழ்தல் என்று அருணதியார் தமது சிவஞான சித்தியாரில் கூறகின்றார். ‘ A ab-ba Hu-luh-a: Oh Angry Sea” (Raphael Kutscher 1975) எனும் நூலிருந்து சில வரிகள் கீழே 5. a-a (d) mu-ul-lil sipa sag-gig-a ( Father Enlil , Shepherd of the Black-headed) ஐயா (தெய்) மோ உள்ளீல் சிவ சான் கி(ரி)ங்க 6. a-a (d) mu-ul-lil i-bi-du ni-te-na ( Father Enlil, the one inspecting for Himself) ஐயா (தெ)மோ உள்ளீல் இமையிடு நீ தானே 7. a-a (d) mu-ul-lil am erin di-di ( Father Enlil, the Warrior Who Leads the Troops) ஐயா (தெய்) மோ உள்ளீல் அமா அரண் தித்தீ 8. a-a (d) mu-ul-lil u-lul-la ku-ku ( Father enlil, Who Feigns Sleep ( lit. Who Sleeps a False Sleep) ஐயா (தெய்) மோ உள்ளீல் ஊழல்ல கொக்கோ இங்கு தெய்வம் மோ உள்ளீல் கருப்பர்களை ( சான் கைக்க) காக்கும் தெய்வம் என ‘சிப> சிவ” என்று கூறபப்டுவதைக் காண்க. இதிலிருந்தே இறைவனை காத்தருள்பவன் என்னும் பொருளில் ‘சிவன்’ என்றும் கூறபட்டிருக்கலாம் என்பதையும் காண்க. யோகம் தொடர்பாக ஓர் குறிப்பு வரி 6-இல் வருகின்றது. இங்கு ‘ibi, iGi’ என்றெல்லாம் வருவது ‘இமை’ என்ற சொல்லே யாகும். ‘ibi-du ni-te-na” என்பதை ‘இமை-இடு நீ தானே’ என்று கொண்டால் தானே உலகாக எழுந்து தன்னையேத் தான் காணுவதே அறிதுயில் என்றவாறு ஓர் விளக்கம் வருவதையும் காண்க. மேலும் வரி 8-இல் வரும் ‘ஊழல்ல கொக்கோ’ என்பது பொய் உறக்கம் ஆகும். இங்கு கொக்கோ’ என்ற சொல் வழக்கிழந்து விட்டாலும் ‘காமப் புணர்ச்சி’ என்ற கருத்தில் வரும் கொக்கோகம்’ என்ற அரிய சொல்லில் இன்னும் விளங்குகின்றது. அறிந்து கொண்டே பலவற்றைப் பார்த்துக்கொண்டே உறங்குவதால் ‘அறிதுயில்’ ஆகிய இது பொய் உறக்கம் ஆகிறது. 37.2 பரிபாடலில் அறிதுயில் பரிபாடலிலும் புறநானூறு போன்ற பிற கடைச் சங்க இலக்கியங்களிலும் திருமாலின் அறிதுயில் பற்றியும் இதனோடு தொடர்புடைய சிவபெருமானின் நுதல்விழி நாட்டம் பற்றியும் பல குறிப்புக்கள் உண்டு, கீழே பரிபாடல் 13-லிருந்து சில வரிகள் 25 -- 30 காலமும் விசும்பும் காற்றொடு கனலும் தன்னுரு உறழும் பாற்கடல் நாப்பண் மின்னவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த கவை நா அருந்தலைக் காண்பின் சேக்கைத் துளவஞ் சூடிய அறிதுயிலோனும் மறமிகு மலியொலி மாறடு தானையால் இங்கு ‘மாறடு தானையால்” என்ற குறிப்பும் மேலே வரி 7-இல் வருதைக் காண்க. இந்த சொல்லிலும் பொருளிலும் வரும் ஒற்றுமைக் கூறுகள் நிச்சயமாக ஓர் வரலாற்றுத் தொடர்பினை காட்டுவதாகவேத் தெரிகின்றது. 38.0
சுமேருத் தமிழில் யோகாசனங்கள்
மிக அரிய ஓர் குறிப்பாக அதே நூலிருந்து கீழே ஓர் வரி: A19 (p.94) 2 கூவ் ஜு ஊர்-அ பாயினே மல்ல சீ மாயென் இங்கு மிக உறுதியாக ஓர் ஆசனம் விளக்கப்படுகின்றது. கழுத்தை வளைத்து கீழேக் கொண்டு வந்து தொடைகளுக்கு நடுவில் வைத்து சிறந்த ஓர் வீரனாக மல்லனாக திகழ்வதால் திருமால் பெரிதும் போற்றப்படுவதாக இங்கு கூறப்படுவதைக் காண்க. மேலும் இது பாதங்களை உயர்த்தி கழுத்திற்கு பின்னால் இருத்தல் என்னும் ஆசனமாகவும் இருக்கலாம். இங்கு ‘கூவ்’ என்ற சொல்லேத் திரிந்து ‘கவுள்’ என்றாகி இருக்கவேண்டும். கூவுதல் அதாவது பேசுதல் சொல்லுதல் ஆகியவற்றுக்கு இடமாக இருக்கும் தொண்டைப் பகுதியே, கழுத்தே ‘கூவ்’ என்ற சொல்லால் ஆகுபெயராக கழுத்தையும் குறிக்க அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. ‘ஊர்’ என்ற சொல் தொடைகளைக் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படும் ஓர் அரிய சொல்லாகும். 39.0 தொல்காப்பியத்தில் தவயோகம் மருத்துவமும் மருத்துவ நூற்கள் பல இல்லாமல் கடைச் சங்கம் இயங்கி இருக்க முடியாது. இப்படிப்பட பல நூற்கள் இருந்திருகவேண்டும் ஆனால் எத்தனையோ நூற்களைப் போல இவற்றையும் நாம் இழந்திருக்க வேண்டும். ஆனால் நல்வாய்ப்பாக தொல்காப்பியத்தில் மறைமுகமாக சில குறிப்புக்கள் உண்டு. அங்கு வாகைத் திணை எனும் புறத்திணையில் : 15. வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைக் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப எனக் கூறி அங்கு ‘மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியினாற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்’ என்றும் மேலோர் பற்றிய ஓர் விளக்கமும் வருகின்றது. இந்த அறிவர் எதிர்வு நிகழ்வு இறப்பு எனும் மூவகை காலமும் உணர்ந்த திரிகால ஞானிகள் என்ற கருத்தை முன்மொழிந்து பின் அப்படி இருக்க முடியாது என்று மறுத்து வேறொரு பொருள் கூறுகின்றார் இளம்பூரணர். இங்கு திரிகால ஞானியாக விளங்குதல் ‘மகிமா’ எனும் சித்தி பெற்ற சித்தர்கள் என்று திருமூலர் கூறுவதைக் காண்க. ‘தாபதர்’ என்பதற்கு பலவகையான தவங்கள் செய்து ஞானம் தேடுபவர்கள் என்று பொருள் கொண்டு ஆகவே ஓர் வகையான யோகிகள் அல்லது சித்தர்கள் என்று கொளத்தகும். 39.1 மேலும் மந்திரங்களை அறிந்தவர்களாக தொல்காப்பியம் பல உயர்ந்த மாந்தர்களைக் கூறுகின்றது. செய்யுளியலில் 171 நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப என்று கூறி மெய்ஞானத்தை மக்களும் உணரும் வகையில் ஒருவாறு மொழிபடுத்த அவையே ‘மந்திரம்’ என்படும் என்கின்றார். இப்படிப்பட்ட நிறைமொழி மாந்தர் மெய்ஞானத்தையே தேடித் திரியும் பல தவங்களைப் பயிலும் பெரும் தவசிகளாக யோகிகளாக சித்தர்களாக இருந்திருக்கக் கூடும் என்பதைக் காண்க. பிற்காலத்தில் திருமூலரின் ‘திருமந்திரம்’ போன்ற பெரும் சித்தர் நூற்கள் தோன்றுவதற்கு இவையே பெரிதும் உதவி இருக்கலாம். தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 21 40.0 திருமந்திரத்தில் தவயோகங்கள். இதுவரை புழக்கத்தில் உள்ள தவயோக இலக்கியங்களில் மிக விரிவானதும் ஆழமானதும் நுட்பமானதும் சதாசிவ ஆகமம் என்றே திருமுலரால் அழைக்கப்பட்டதுமான ‘திருமந்திரம்’ எனும் பெருநூல் தான். அதன் சிறப்பினைக் கருதி முன்னோர்கள் அதனை பத்தாம் திருமுறையாக தொகுத்தும் உள்ளனர். ‘யோகம்’ என்று வரும்போது ஏறக்குறைய சம காலத்தவராக மன்று தொழுத பதஞ்சலி என்று அழைக்கப்ப்டும் ஓர் பதஞ்சலியால் இயற்றப்பட்ட ‘யோக சூத்திரங்கள்’ எனும் நூலே பெரிதாகப் பயிலப்படுகின்றது எனினும், திருமந்திரம் மூவாயிரம் அதனை விட இன்னும் விரிவாக பலவகையான பண்டைய யோகக் கலைகளை மிகச் சிறப்பாக விரித்துச் செல்கின்றது. மிகவும் விரிவாக மந்திராயணம் எனும் துறையை 600 பாடல்களுக்கும் மேல் பாடி அக்கரசக்கரங்கள் பலவற்றை வேறு யாரும் விளக்கா வகையில் விளக்கிச் செல்கின்றார் நம் திருமூலர். மேலும் ‘திருமந்திரமாலை 300’ எனும் நூலில் அட்டகருமங்கள் என்ப்படும் வசியம் மோகணம் ஆகருடம் தம்பனம் போன்ற புத்திகளை மிக விரிவாக விளக்குகின்றார், அதற்கு திரு ந. சிவப்பிரகாச தேசிகர் என்பார் எழுதிய பேருறையும் உண்டு. 40.1 திருமூலரின் காலம் எறக்குறைய கி.பி 6ஆம் நூற்றாண்டு எனத் தெரிகின்றது. சங்கம் மருவிய காலத்திற்கும் செல்லலாம். அதற்குப் பின் சித்தர் இலக்கையங்களாக நமக்குக் கிடைப்பவை பெரும்பாலும் கி,பி. 10ஆம் நூற்றண்டிற்கு பிறகு எழுந்தவையே யாகும். இவற்றில் பெரும்புகழோடு திகழ்வனவாக ‘சிவாக்கியம் 1000’ பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் சித்தர் பட்டினத்தார் பாடல்கள் என்றும் பிறகு 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு போகர் ஏழுகாண்டம், கோரக்கர் நமநாசத் திரவுகோல் என்றும் யாரோவோர் அகத்தியர் பெயரில் ‘பரிபாஷை 400’ ‘சௌமிய சாகரம்’ ‘பரிபூரணம் 2000’ ‘அமுத கலைக்ஞானம்’ என்றெல்லாம் பல நூற்கள் உள்ளன. மேலும் திருமூலர் அங்குமிங்கும் சிறிதளவே விளக்கும் நாதாந்தம் எனும் மந்திராயணம் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை மிக விரிவாக 97 பாடல்களில் விளக்குவதாக அநேகமாக 16ஆம் நூற்றாணடு சித்தர் திருவள்லுவர் எழுதிய ‘நாதாந்தத் திறவுகோல்’ என்ற நூலும் உண்டு அவரே எழுதிய இன்னும் பல வைத்திய நூற்களும் உண்டு. அக்காலத்தில் தோன்றியிருகக் கூடிய ஔவைக் குறள் என்ற சித்தர் அவ்வையாரால் எழுத்தப்பட்ட நல்லவொரு நூலும் உண்டு. 40.2 இந்த சித்தர் பாரம்பரியத்தில் தனிச் சிறப்பு பெற்று விளங்குவது ஆறு ஆதாரக் கொள்கை யாகும். மானிடர்களின் பக்குவ முதிர்ச்சியை பரிணாம வளர்ச்சியை திருமூலர் முதற் கொண்டு சித்தர்கள் மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை சகஸ்ரத் தலம் என்றவாறு அலசிச் செல்ல சிவஞானிகள் தசகாரியம் என்றவாறு தத்துவக் காட்சிகள் வழியாக அளந்து செல்வர். இந்த ஆறு ஆதாரக் கொள்கை மிகப் பழைய ஒன்று என்றும் பெருமேடுகள் (pyramids) கட்டி தெய்வங்களைத் தொழுது வந்த பண்டைய எகிப்தியர்கள் நூபியர்கள் சுமேரியர்கள் போன்றோர் ஆறு அடுக்கு அல்லது ஏழு அடுக்கு பெருமேடுகளைக் கட்டியதற்கு அடிப்படையாக இருந்தது இந்த ஆறாதாரக் கொளகையே என்றும் தெரிகின்றது. கடைச் சங்கத் தமிழர்களின் ஏழு திணைகள் எனும் கோட்பாடு இதன் திரிபாக இருக்கலாம். 40.3 இந்தப் பழம் பெருங்கோட்பாடு சித்தர் பெருமக்களால் மறக்கப்டாதிருப்பதொடு பல்வேறு வளர்ச்சிகளையும் கண்டுள்ளது. திருமூலர் தமது நான்காம் தந்திரத்தில் பலவகையான சக்கரங்களை பற்றி விளக்குகின்றார், போகர் தமது பெரும் நூலாகிய ஏழு காண்டத்தின் முதற் காண்டத்தில் ஏறக்குறைய 300 பாடல்களில் இதனை விரிக்கின்றார். இதேப் போன்று பட்டினத்தார் போன்ற இன்னும் பல சித்தர்கள். கீழே போகரின் சில பாடல்கள்.
மூலாதாரம் 11. காணவே மூலம் அஃது அண்டம் போலச்
43. துதிசெய்த மூலத்தைத் தாண்டி அப்பால்
இவ்வாறே போகர் ஏனைய ஆதார சக்கரங்களையும் விளக்கிச் செல்கின்றார். 41.0 திருமூலரின் யோகக் கலைகள்
திருமூலர் சிவயோகம் என்றும் அட்டாங்கயோகம் என்றும் கூறப்படும் யோகக்கலையோடு, சந்திர யோகம் அட்டமாசித்திகள் கேசரியோகம் பரியங்க யோகம் என்றெல்லாம் பலவகையான யோகக் கலைகளை விளக்கிச் செல்கின்றார். பிற்காலத்தில் இன்னும் சில யோகக் கலைகள் வளர்க்கப்பட்டுள்ளன எனினும், இன்றளவு மிகச் சிறப்பாக விளங்குவது திருமூலர் தமது மூன்றாம் தந்திரத்திலும் ஏனைய தந்திரங்களில் அங்குமிங்குமாக விளக்கும் யோகக் கலைகளே யாகும். இங்கு சிலவே மிகச் சுருக்கமாக விளக்கப்படும்.
41.1 சிவயோகம் அல்லது அட்டாங்க யோகம் திருமூலர் விளக்கும் அட்டாங்க யோகம் மிக விரிவாக திருமந்திரம் மூன்றாம் தந்திரத்தில் காணக் கிடக்கின்றது. இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகரம் தாரணை தியானம் சமாதி எனும் எட்டு உறுப்புக்களைக் கொண்டதுவாக இப்பழங்கலை இருக்க இது அட்டாங்க யோகம் என்படுகின்றது. இவற்றை ஆழக் கற்று தெளிந்து உடகிடக்கைகளை சூத்திர வடிவில் சுருக்கி ஓர் நூலாகவேத் தந்துள்ளேன். அதிலிருந்து சில சூத்திரங்கள் கீழே:
சூத்திரம் 1 சித்த மாயோகம் சரீர சித்தி உபாயம். சூத்திரம் 2: உடம்பாகிய பிண்டத்தில், இராசி மண்டலங்கள் சந்திர சூரியர்கள் கோள்கள் என்றவாறு ஓர் மாபெரும் அண்டமே இருக்கின்றது சூத்திரம் 3: மாயா இயந்திரத் தனுவாகிய இவ்வுடம்பில் எல்லா தெய்வங்களும் குடி கொண்டு இருக்கின்றன சூத்திரம் 4 சரியா கிரியா பாதங்களுக்குப் பின்னும் ஞான பாதத்திற்கு முன்னும் யோக பாதம் வரும். சூத்திரம் 5 இனி இந்த யோகக் கலைகள் அட்டாங்க யோகம் கேசரி யோகம் பரியங்க யோகம் சந்திர யோகம் பிரணவ யோகம் என்றும் இன்னும் பலவாறும் இவற்றோடு ஒட்டிய பல துறைகளாகவும் வரும் சூத்திரம் 6: அட்டாங்க யோகமாவது இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகாரம் தியானம் தாரணை சமாதி என்னும் எட்டு உறுப்புக்களை உடைய ஓர் கலை யாகும். இவ்வாறு செல்கின்றது சிவயோகத்தைப் பற்றிய திருமூலர் விளக்கங்கள். 41.2 அட்டமாசித்திகளும் பரவுளவியலும்(Parapsychology) இதுவரை அறிஞர்களால் சரிவர புரிந்துகொள்ளாத ஓர் துறையாக இந்த அட்டமாசித்திகள் பகுதி விளங்குகின்றது. இவை அணிமா இலகிமா கரிமா மகிமா பிராத்தி பிரகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்று பகரப்பட்டாலும் உண்மையில் இவை உடம்பெடுத்தால் வருகின்ற கால இடக்கட்டுகளோடு வருகின்ற சுட்டுணர்வுகளைக் கடந்து இந்த கட்டுகள் யாதும் இல்லாத முறையில் அறிந்து மகிழ்வது என்றே திருமூலர் கூறுகின்றார், இதனால் இத்துறை ஐரோப்பியர்கள் வளர்த்து வரும் Extra Sensory Perceptions எனப்படும் புலக் கடப்பு காட்சிகள் ஆகும். காட்டாக மகிமா எனும் சித்தியை விளக்க புகுகையில் அதனை காலக்கட்டின்றி முக்காலமும் உணர்வது என்றே திருமூலர் விளக்குகின்றார். இத்துறையையும் ஆய்ந்து அதன் உட்கிடக்கைகளை சூத்திரவடிவில் சுருக்கமாகத் தந்துள்ளேன். அதிலிருந்து ஒன்று கீழே: சூத்திரம் 11 பரு உடலிலிருந்து கழன்று பராசத்தியோடு ஒன்றித்து பக்கம் தூரம் என்பன போன்ற வெளியுறவுகளைக் கடக்கத் தரும் அணிமா இலகிமா சித்திகளைப் பெற்ற பின் ஓர் சித்தன், தொடர்ந்து பரசிவனைக் கண்டு ஒன்றித்து நிற்க, காலத்தை கடக்கத் தரும் மகிமா சித்தியைப் பெற்று திரிகால ஞானி யாவான். 669 மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாளுடன் தற்பொருள் ஆகிய தத்துவம் கூடிட கைப்பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டில் மைப்பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே உரை: உடலை விட்டு பிரிந்து மெய்ஞானம் விளைவிக்கும் வகையில் உலகெல்லாம் பரந்து கிடக்கின்ற மெய்ப்பொருளை எல்லாம் பரகாட்சியின் காண உதவும் பராசத்தியுடன், ‘அது’ என்றே அறியப்படும் பரசிவனுடன் காணும் பேறு கிட்ட, ஓர் ஆண்டு காலத்தில், இதுவரை தோன்றாது இருளிலேயே கிடந்த மகிமா என்னும் சித்தி அதாவது நினைத்தபடி காலக் கட்டின்றி பரந்து விரிந்து உயரும் திறன் வந்தமையும் என்றவாறு. குறிப்பு: அணுவாகி எங்கும் நுழைதல், இலகுவாகி எங்கும் செல்லல் என்பவற்றோடு பரந்து விரிந்து உயர்ந்து திரிகால உணர்வோடு நிற்றல் மகிமா என்படுகின்றது. 670 ஆகின்ற கால் ஒளியாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவதும் இல்லையால் மேனின்ற காலங்கள் வெளியுற நின்றன தாழ்கின்ற காலங்கள் தன்வழி ஆகுமே உரை: உடலை விட்டு பிரிந்து பராசத்தியுடன் ஒன்றித்து நின்று பரசிவன் கலந்திடத் தோன்றும் நீண்ட பெருஞ்சோதியைக் கணட பின், ஆன்மா காலக் கடப்பு செய்ய வல்லதின், கழிகின்ற காலம் வருகின்ற காலம் என்றவாறு இல்லாது திரிகால உணர்வுகள் வந்தமைதின். பலவற்றை உண்டாக்கி நிலைப்பித்து அழிக்கும் போக்கொடு தான் போகாது ஆன்மா தன்வழி நின்று அனைத்தையும் அறியும் 671 தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந் தன்வழி யாகத் தழைத்திடும் வையகந் தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம் தன்வழித் தன்னரு ளாகிநின் றானே உரை: இவ்வாறு உலகப் போக்கில் போகாது திரிகால உணர்வுடன் நின்று தழைத்திட எஞ்சியுள்ள ஞானத் தெளிவுகள் வந்தமையும். இந்த உலகமும் தன்வழி செல்லும் வகையில் நின்றிடும். இனி இந்த மகிமா சித்தியின் காரணமாக தன்வழியாக வாழ்ந்து சிறக்கின்ற உயிர்களெல்லாம், தன்னருளால் வாழும் வகையில் இறைவனைப் போன்று இச்சித்தன் நிற்பான். குறிப்பு: மகிமா சித்தி கைவந்த சித்தன் இன்னும் உலகியல் வாழ்க்கையில் பட்டுழலும் ஆன்மாக்களுக்கு நல்வழி காட்டி தன் அருளால் வாழும்படி செய்வன் என்பதாம். 41.3 சந்திர யோகம் எனும் ஆழ்வுளவியல் இந்தத் துறை ஐரோப்பியர்களால் அதுவும் குறிப்பாக ப்ராய்ட் (Freund) , யுங் (C.G. Jung) போன்ற மனோமருத்துவம் சார்ந்த ஆழ்வுளவியல் துறையின் ஓர் நல் வடிவமாகும். இத்துறை சமீப காலத்தில் தான் ஐரோபியர்களிடையே வளர்ந்திருக்க, தமிழர்கள் நடுவில் மிகப் பழங்காலத்திலேயே நங்கு வளர்ந்துவிட்ட ஓர் துறையாகும். திருமூலரே இதனைப் பற்றி பண்டே எழுதி நமக்கு அறிவித்த பெருஞ் சித்தரும் ஆகும். கீழே சில பாடல்கள். முதல் பாடலிலேயே சந்திரயோகம் உண்மையில் ஆழ்வுளவியல் என்பதை நலமே விளக்குகின்றது. காண்க: 844 எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்தும் கலையே போல் ஏறி இறங்குமாம் துய்யது சூக்கத்துத் தூலத்து காயமே உரை: காயமாகிய உயிர்கட்கு அமையும் உடம்பு காண வரும் வகையில் வெளிபட்டு நிற்கும் தூலம் என்றும் காண வாராது மறையாக நிற்கும் சூக்குமம் என்றும் இருவகைப் படும். இங்கு சூக்கும உடம்பில் குண்டலினி சத்தி சந்திரன் வடிவில் தோன்றி பின் தூலத்தில் வெளிப்பட்டு நிற்கும். மேலும் புறத்துச் சந்திரன் ஏறி இறங்குவது போல, இந்த அகச் சந்திரனும் சூக்குமம் தூலம் என்றவாறு ஏறி இறங்கும். இதனால் தூலம் சூக்குமம் எனப்படும் இருவகை உடம்பும் தூய்மை உற்று இளமைப் பொலிவோடு மின்னும். இங்கு சூக்கும தேகத்தை Unconscious என்றும் தூலதேகத்தை Conscious என்றும் கொள்ள வருவதைக் காண்க. குண்டல்னி சத்தி நாத விந்துக்களில் தாக்கத்தால் சந்திரன் சூரியன் தாரகை பாம்பு என்றெல்லாம் வடிவெடுத்து சூக்கும தேகத்தில் தோன்றி தூல தேகத்திற்கு வந்து பல நன்மைகளைச் செய்து பின் மறையும் என்றெல்லாம் திருமூலர் கூறுகின்றார், மறையுணர்வில்(Unconascious) மந்திரதேகத்தில் பூரணமதியாக குண்டலினி சத்தியை இருத்துவதே இந்த சந்திரயோகம் எனும் ஆழ்வுளத்துறையின் அடிப்படை நோக்கம் என்றும் இவ்வாறு செய்தால் இளமைப் பொலிவோடு நெடுங்காலம் நோய்நொடிகளின்றி நலமே வாழலாம் என்றும் திருமூலர் பல இடங்களில் கூறிச் செல்கின்றார், 867 தண்மதி பானு உச்சிச் சரி பூமியே சென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்த பின் தண்மதி வீழ்வு அளவில் கணம் இன்றே Meaning: If one ascends the various Cakras through developing and gaining in metaphysical illuminations, and reaches the Sahasra Talam where roams the Inner Sun and Moon, and through noting how they install the various kinds of intentions and through that create the Time consciousness in terms of the future the present and the past, one can have the Full Moon deep within the Unconscious. Then there will be a continuous flow of Ambrosia or the Amutu which will help the recovery of youthful vitality. ஒருவன் மெய்ஞானம் வளர்த்து வளர்த்து ஆதார சக்கரங்களை கடந்து குண்டலினி சத்தி சந்திரனாக சூரியனாக வெல்லாம் சரியும் ஆயிரவிதழ் தாமரைத் தலமாகிய சகஸ்ராரம் அடைய அங்கு காலவுணர்வின் சூக்குமத்தை அறிய வருவான். இதனால் சந்திரனை பூரண மதியாக அகத்தே இருத்த வல்லவனும் ஆவான் இதனால் உடல் நலத்தையும் மனநலத்தையும் தரும் அமுதக் கசிவு விடாது தொடர அது இளமை மீட்சிகுக்கும் வித்தாகும் 42.0 திருமூலரின் திருமந்திரத்தில் இப்படி இன்னும் பல அரிய ஆழ்வுள அறிவியல் துறைகள் உண்டு. ஐரோப்பியச் சிந்தனைகளோடு ஒப்பிட்டு பார்த்தாலே ஒழிய இக்கலைகளை அடையாளங் கண்டு அவற்றை பிழையின்றி புரிந்துகொண்டு மேலும் வளர்க்க முடியாது போம். இவ்வகையில் அடியேன் தருத் தேர்வு போன்ற தேர்வுகளை ஆய்வுக் கருவிகளாக பயன்படுத்தி வளர்த்துள்ள ‘ஆகமவுளவியல்” எனும் துறையின் கட்டுரைகளையும் நூற்களையும் கற்றுத் தெளிக சித்தர் அல்லது தவயோக இலக்கியங்கள் முற்றும் ஐந்தாம் படலம் முற்றும் முதற் காண்டம் முற்றும் |