தமிழில் அறிவியல் எழுத்துரைகள்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:45, 23 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் அ.அறிவுநம்பி
அறிவியல் செய்திகளைத் தமிழில் எழுதமுடியுமா என்று கேள்விகள் கேட்டவர்கள் பலர். எழுதிக்காட்டினர் பல அறிஞர்கள். அதன்பிறகு "தமிழால் முடியும்" என்பது நிறுவப்பட்டது. அறிவியல் செய்திகளை உள்ளடக்கிய எழுத்துரைகளைத் தமிழில் தரமுடியும் என்பதனை அறிவியல் இதழ்கள் எடுத்துரைக்கின்றன. கட்டுரைகள், நூல்கள், புனைகதைகள் என எல்லாத் தளங்களிலும் தமிழில் அறிவியல் எழுத்துகள் மேலும், மேலும் வளர்ந்து வருகின்றன.எண்ணிக்கை குறைவு என்பது உண்மைதான்.ஆனால், வளரவில்லை என்பது மறுக்கப்பட வேண்டிய செய்தி.தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவாருக்குச் சிக்கல்கள் சிலவுண்டு.மூலமொழியிலிருந்து - இலக்குமொழிக்குச் செய்திகளை இறக்குமதி செய்வதில் தடைகள் காணப்படுகின்றன.
என்ற மூன்று நிலைகளில் இப்பணி இன்று நிகழ்கிறது.
இக்குறை ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மாற்றம்பெறும் எல்லாச் சூழல்களுக்கும் பொருந்தும். பாரதியார் தன் காலத்தில் அவருக்குத் தோன்றிய மொழிபெயர்ப்புக்கு வழிகாட்டினார். துறைவல்லுநர்களைச் "சாஸ்திரிகள்" என்பதும் "ஆக்ஸிஜனை"ப் "பிராணவாயு" என்பதும் அவர் சிந்தனையில் தோன்றிய, தொடக்ககால மொழிபெயர்ப்புகள். அவர் காலத்தைப் பொறுத்தவரை வடமொழி, தமிழ்மொழிச் சொற்களிடையே துல்லியமான வேறுபாடுகள் கருதப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழ் "பாஷை" என எழுதுவார். "பாஷை" என்பது தமிழில்லை என்றாலும் தமிழ்மொழி என எழுதுதல் தேவை என்ற மனப்போக்கு உருவாகாத காலகட்டம் அது. ஆனால் அறிவியல் செய்திகள் தமிழுக்கு, தமிழருக்கு உரியதாக மாற வேண்டுமென்ற அவா அவர்
கலைச் சொல்லாக்கப் பணிகளில் பின்வரும் மூன்று நிலைகளைக் காணமுடியும்.
கூடுதல் உத்தியாகும்.
முதல்நிலை:- உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட, ஒரேபோக்கில் உள்ளவற்றை மாற்ற இயலாது.
ஆல்பா, பீட்டா, காமா போன்ற அறிவியற் சொற்களும் மீட்டர், லிட்டர் போன்ற அளவு முறைப்பெயர்களும் இத்தகையன. ஒலிப்பு முறையில் மாற்றம் செய்ய வாய்ப்புண்டே தவிர, முழுமையாக இவற்றை மறுவடிவாக்க வேண்டியதில்லை.
இரண்டாம் நிலை:- "கார்பன்-டை-ஆக்ûஸடு" என்பதனைக் "கரியமில வாயு" எனவும் "கரிக்காற்று" எனவும் மாற்றுவர். பாரதியார் காலத்தில் "ஆக்ஸிஜனை"ப் பிராணவாயு என்றனர். அது சம்ஸ்கிருதம் என்பதால் "உயிர்க்காற்று" எனப் புதிதாக மாற்றங்காட்டினர். தூய தமிழ் பேசுவோர் "உயிர்வளி" எனக் கொண்டனர். பொதுமக்களுக்கான கட்டுரையில், உயிர்வளியாகவும் அக்காற்று வீசுவது நல்லது.
மூன்றாம் நிலை:- மக்கள் வழக்கினைக் கலைச்சொல்லாக்கப் பகுதியில் முதன்மைப் படுத்துவது நல்லது. "சைக்கிள்" என்ற பெயர் "துவிச்சக்கரவண்டி" என முதலில் மொழியாக்கம் பெற்றது. அது தனித்தமிழில் "ஈருருளி" எனவாகியது. இரண்டையும் பயன்படுத்த மக்கள் முன்வரவில்லை.ஆதலால், இவை எதுவும் நடைமுறையில் இல்லை."மிதிவண்டி" மட்டும் இன்றைய சாலைகளில் ஓடுகிறது.
காப்பர் சல்பேட்டைச் சிற்றூர்க்காரர்கள் "மயில்துத்தம்" என்பர். மயிலுக்கும், அப்பொருளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. மயிலின் கழுத்து வண்ணத்தில் அப்பொருள் உள்ளதால் மயில்துத்தமானது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் பண்டைத் தமிழரின் பொறியியல் திறனைத் தம் ஆய்வுப்பொருளாகக் கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் கொடுமுடி ச.சண்முகர்.
கள ஆய்வுக்காகச் சிற்றூர்களுக்குச் செல்லுகையில் "மோட்டார் பம்ப்" என்பதற்கான அழகான எளிய தமிழ்ச் சொல்லைக் கேட்டறிந்தார். அஃது, "எக்கி" என்பது, மேசையின் மேல் உள்ள பொருள் எட்டவில்லை என்றால் குழந்தை தன் காலின் குதிங்காற்பகுதியை உயர்த்தி அப்பொருளைத் தொட முயலும். கீழிருந்து மேல்நோக்கிய இம்முயற்சியை "ஏன் இப்படி எக்கி எக்கிப் பார்க்கிறாய்?" என நாம் கேட்போம்.எனவே "எக்குதல்" என்பது கீழிருந்து மேல்நோக்கி உயர்த்துதல் என்பதால் மோட்டார் பம்ப்பை "எக்கி" என்றனர்.
இதுபோன்ற மக்கள் வழக்காற்றுச் சொற்கள் தமிழில் மிகுதி.
இவற்றைப் பொதுக்கட்டுரைகள் வரைகுவார் கவனித்து அவ்வண்ணத்திலேயே பயன்படுத்தலாம்.
நான்காம் நிலை:- தன்னுள் இடப்பெற்ற பொருளைக் கெடாதவண்ணம் குறிப்பிட்ட நேரம் வரையில் காக்கும் பொருளை இன்று நாம் "பிளாஸ்க்" என்று கூறுகிறோம். இதனைச் சங்க இலக்கியமும், உரைகளும் பேசும். "சேமக்கலம்" அல்லது "சேமச்செம்பு" என்பது பயன்பாட்டிற்குரியதானது. இதனை மெருகிட்டுக் கூற இயலும். இந்தக் கலசத்தை "இயல்புக்காப்புக் கலம்" என ஓர் அறிவியல் கட்டுரை இயம்புகிறது. தொடர்ந்து பணிபுரிந்தால் இதுபோன்ற நல்ல சொற்கள் உருவாக்கப்படும்.துறைவல்லாரின் கருத்துகளைப் பெற்று எழுத்தாளர்கள் படைப்பது நல்லது.ஒரு பொருளுக்கான இரண்டு, மூன்று சொற்களிருப்பின் பொருத்தமான, தரமான சொல்லைத் தெரிவு
போன்ற மூவகைச் சொற்களில் "கணினி" என்ற சொல் இன்று பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றின் அடிப்படையில் தகுதிநிறைச் சொற்களைத் தேர்வது நலம்.
"லிப்ட்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "மின்தூக்கி" என்ற பெயரமைவு இவ்வழியே பிறந்ததுதான்.
கருத்துப் பரப்பல் என்னும் வேட்கையுடன் நாட்டுப்புறக் கலைகளில் வேளாண்மை, மருத்துவச் செய்திகளை மக்களிடையே கூற ஒரு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்தக் கலைஞர்களுக்கு மருத்துவச் செய்திகள் புதிதானவை.
கலைகளின் ஊடே நோய்க்காரணம், காலம், மருத்துவம் போன்ற செய்திகளைத் தவறுதலாக அக்கலைஞர்கள் கூற ஆரம்பித்தனர்.
"தமிழால் (அறிவியலையும் எடுத்துரைக்க) முடியும்" என்பது உறுதியாக்கப்படும்.
நன்றி:- தினமணி |