சில்லி பன்னீர் : சைனீஸ் ஸ்டைல்!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:01, 10 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கி உப்பு - 1/2 டீஸ்பூன்
கிரேவிக்குத் தேவையானவை :
எண்ணெய் - 80 மி.லி.
செய்முறை :- சோள மாவு, மைதா, உப்பு அஜினோமோட்டோ, மிளகாய் தூள், மிளகு தூள், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான பால் கலந்து கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
பன்னீர் துண்டுகளை அந்த மாவில் போட்டு 5 நிமிடம் ஊறவிடவும். அதை எண்ணெயில் மொறு மொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
கிரேவி தயாரிக்க :-
சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் தக்காளி சாஸ் வினிகர், சோயா சாஸ், உப்பு, சக்கரை மற்றும் மிளகு தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். சிகப்பி மிளகாய் விழுது [ மிளகாயை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்]இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும். அடுத்து சோளமாவு கலவையை எடுத்து அதி ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பரிமாறும் பொழுது கிரேவியை திரும்ப சூடாக்கி, பன்னீர் பக்கோடாவை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பாதி அளவிற்கு கெட்டியானவுடன் கீழே இறக்கி வைத்து விடவும். பரிமாறும் கின்னத்தில் போட்டு , பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி அலங்கரிக்கவும்.
பவள சங்கரி திருநாவுக்கரசு தேதி - 10 - 03 - 2011. |
