பாசுர மடல் 004 : ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:49, 28 ஜனவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை ஆழ்வார்கள் தோன்றிய காலத்தில் அவைதிக மதங்களுக்கு மாற்றாக நிறையச் செய்ய வேண்டி இருந்தது. கண்ணனை காட்சிக்கு எளியனாக்கி, புதிய சம்பிரதாயங்களை செய்விக்க வேண்டி இருந்தது வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும் இப்படி ஆழ்வார்களும், நாயன்மார்களும் நாம் பிறந்த ஊர் "புண்ணிய பூமி" என்ற உள்ளத்தெம்பை உருவாக்குகிறார்கள்.சைவ ஆகமங்களெல்லாம் தென் தமிழகத்தில்தான் உருவாகின. இச்சம்பிரதாயங்களெல்லாம்வடக்கே கிடையாது. சைவ, வைணவப் பிரிவு கூட தெற்கே இருப்பது போல் அங்கு இல்லை. காரணம் அவை தோன்றிய இடம் தெற்கு. வடக்கு இல்லை! சிவ வழிபாடு தமிழகத்தில் மிகத் தொன்னைமையானது.திருமால் வழிபாடும் புதிய வழி அன்று. கண்ணன் என்ற கருத்தாக்கமே தெற்கே ஆரம்பித்ததுதான். அதனால்தான் கண்ணன் இன்னும் "கருந்தெய்வமாய்" நிற்கிறான். முதல் ஆழ்வார்கள் காலத்தில் இவை இரண்டும் கொஞ்சிக் குலாவி இருந்தன . தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும் சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும் திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து (மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்) சடைமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்புமாக திருவேங்கடத்தான் இவருக்குத் தெரிகிறான் அப்படியே இருந்தால் தேவலை மீண்டும் பார்க்கும் போது நீண்ட முடியும், கையில் சக்கரமும், பொன்னால் செய்த ஆபரணங்கள் தரித்த திருமாலாகத் தோற்றம் தருகிறான்.. பண்டைத் தெய்வங்களும், மரபுகளும், நம்பிக்கைகளும் கையோடு கைகோர்த்து இளநடை பழகும் காட்சி இப்பாசுரத்தில் அற்புதமாய் வந்து நிற்கின்றன. திருவேங்கடத்தான் இப்படியெனில் தில்லைக் கூத்தன் எப்படி இருக்கிறான் என்கிறீர்கள்? இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய் (பொன்வண்ணத்தந்தாதி-சேரமான் பெருமாள் நாயனார்) இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான் இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து..... நா.கண்ணன்.. Date: Thu, 04 Sep 1997 09:32:20 +0000 |

