பாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள்மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:23, 9 ஜூலை 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
தொகுப்புநண்பர் சந்தானம் என்பவர் அந்தக் காலத்து(பாட்டிகாலத்து)க் குழந்தைப் பாடல்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும், இது ஒவ்வொரு நகருக்கும் மாறுபடும் என்றும் தான் தஞ்சை/மதுரைப் பக்கம் என்பதால் அந்தப் பக்கத்துப் பாடல்கள் சிலவற்றைச் சொல்ல முடியும் என்றும் சொல்லி இருந்தார். அவர் மனைவி திருநெல்வேலியாம். அவங்க அந்தப் பக்கத்துப் பாடல்களைக் கொடுப்பார் என்றார். உடனே எனக்கு நினைவில் வந்த பாடல்.
பாடல் 1
கொழு கொழு கன்னே
ஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள். இது சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லப் பட்டது. ஒரு சில குழுமங்களில் இது விவாதிக்கப் பட்டது. இன்னொண்ணு எலியைப் பற்றிய வர்ணனை. ஒரு கதையாகச் சொல்லப் படும். அதிலே எலிக்குக் கால்கள், கண்கள், வால் உள்ளன என்பதை ஒரு பாட்டாகச் சொல்வாங்க.
பாடல் 2அம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது. ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது. வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் "கொழுக்கட்டை எங்கே?" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.
அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி? அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி? அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி?
பாடல் 3பட்டம் பறக்குது,
பாடல் 4ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது
பாடல் 5
என ஆரம்பித்து பூக்களின் பெயர்கள் வரிசையாக வரும்.
பூப்பறிக்க வருகிறோம் இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள் கை கோர்த்திருக்கும் இருவரும் என்ன பூவைப் பறிக்கிறீர்? இனி ஒவ்வொரு பூவாக வரும் சாமந்திப் பூவைப் பறிக்கிறோம், சாமந்திப் பூவைப் பறிக்கிறோம்.
திரு சந்தானம் கொடுத்த பாடல்களும் மற்றும் சிலர் கொடுத்த பாடல்களும் அடுத்த பதிவில் காணலாம். அவங்க அவங்க நினைவில் இருக்கும் பாடல்களை அளிக்கலாம். இவை அவரவர் பெயர், ஊரோடுமரபு விக்கியில் சேர்க்கப் பட்டுச் சுட்டியை அளிப்போம். நிரந்தரமாய் அங்கே பதிவாகி இருக்கும்.
--Geetha Sambasivam 08:39, 17 மே 2012 (UTC) |