"அன்றொரு நாள்: டிசம்பர் 28" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
14:17, 28 டிசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்இன்னம்பூரான்
ஆலமரம் ‘ஓஹோ’ என்று வளர்ந்து விட்டது, உயரத்திலும் சரி, பருமனிலும் சரி. ஏகப்பட்ட கிளைகள், விழுதுகள். சில துளிர் விடுகின்றன. சில பட்டுப்போயின. முதுமையின் வாட்டம் தெரிகிறது. அடேயப்பா! எத்தனை ஊடுருவிகள்! மெய்யும் பொய்யும் கலந்த அசட்டு தித்திப்பு அதன் குட்டிப்பழங்களில். வஸந்த ருதுவில் இலை உதிர்கிறது! 1996லிருந்து அசையா அக்ராசனம் அன்னை ஸோனியாவுக்கு. அந்த அளவுக்கு
‘அதிகார பூர்வமாக’ என்றொரு சொல் உண்டு. ஆம், இன்று தான் இந்திய நேஷனல் காங்கிஸ்ஸின் ‘அதிகார பூர்வமாக’ ஜன்ம தினம். மும்பையில் 28 12 1885 அன்று, வைஸ்ராய் ரிப்பன் பிரபுவின் நண்பரான ஏ.ஓ.ஹ்யூம் என்ற ஆங்கிலேயர் தலைமையில், அவருடன் தாதாபாய் நெளரோஜி, தின்ஷா மேத்தா, உமேஷ் சந்திர பானர்ஜி, (‘இடி முழக்கம்’)ஸுரேந்திரநாத் பானர்ஜி, மன்மோஹன் கோஷ், மஹாதேவ் கோவிந்த ரானடே,
கட்சியில் இரு தரப்பு உருவாகியது, 1907 சூரத் காங்கிரஸ்ஸில். தலைமை: ராஷ்பிஹாரி கோஷ். ~சூடான தரப்பு (திலகர் கட்சி) &மிருதுபாஷிணிகள்(கோகலே கட்சி).‘செருப்புகள் பறந்தன’ என பொருட்பட மஹாகவி பாரதியாரின் கட்டுரை படித்து 70 வருடங்களானாலும், மறக்கவில்லை. அந்த கட்டுரையை எல்லாரும் படிக்கவேண்டும். விக்கிப்பீடீயா மிருதுபாஷிணிகளை மட்டும் படித்தவர்கள் என்று சொல்வதின் மர்மம் எனக்கு புரியவில்லை. பகவத்கீதைக்கு உரை எழுதியவரும், வீரகேசரி இதழாசிரியரும், ‘சுதந்திரம் என் பிறப்புரிமை’ என்று கோஷமிட்ட லோகமான்ய திலகர் நிரக்ஷரகுக்ஷியா என்ன ஓய்?
காந்தி வந்தார், ஐயா, 1915ல். தென்னாஃப்பிரிக்கா வந்திருந்த கோகலே அவர்களின் சட்டைக்கு பொட்டி போட்ட தொண்டன் காந்தியை, இந்தியாவுக்கு இழுத்து வந்து, நாட்டை சுற்றிப்பார்க்க வைத்த உபயம், கோகலே அவர்களது. அதன் பிறகு அக்ராசனம் யார் வகித்தாலும், காந்திஜி வைத்தது சட்டம் ஆயிற்று. 1924ல் அக்ராசனமும் வகித்தார். ஆனால், அவர் கிலாஃபத் இயக்கத்துடன் இணைந்து திசை மாறியதை கண்டு வெகுண்டு, சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, அன்னி பெஸண்ட் ஆகியோர் காங்கிரஸ்ஸிலிருந்து ராஜிநாமா செய்து, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்தனர். இந்த கிலாஃப்த் உறவும் நொடித்துப்போனது. இதையெல்லாம் லாகவமாக காந்திஜி கையாண்டதையும், அவர் நேதாஜியை அரியணையிலிருந்து இறக்கியதையும், மற்றும் பல சுவையான தகவல்களையும் பிறகு தான் சொல்லவேண்டும். இப்போதைக்கு தமிழ்நாட்டில்
‘அதிகார பூர்வத்தை’ விட ‘ஆதிமூலம்’ முக்கியமானது. இந்திய நேஷனல் காங்கிரஸ் உருவாகுவதற்கு முன்பே, பிரம்மோ சமாஜ், ஆர்ய சமாஜ், பிரம்மஞான சபை (தியசாஃபிகல் சொஸைடி, அடையார்) ஆகியவை தேசாபிமானத்தை வளர்த்து வந்தன. இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸின் ஆதிமூலம் பிரம்மஞான சபை என்றும், அதன் அங்கத்தினர்கள் 17 பேர்கள் டிசம்பர் 1884 வருடம் இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸுக்கு வித்திட்டனர் என்ற கருத்து உலவுதை, திரு.வி.க. அவர்களை பற்றிய ‘அன்றொரு நாள்’ கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அத்தருணம், திருமயிலை முனிபுங்கவர் ‘ஸர்’ உதறிய சுப்ரமண்ய ஐயரை பற்றியும், அவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு மடலெழுதி, மாண்பு மிகு இந்திய சர்க்காரை மடலேற்றியதை பற்றி எழுதியிருந்தேன். இந்த ‘ஆதிமூலக்குழுவின்’ தலைவர் அவர் எனலாம். கணேஷ் வாசுதேவ் ஜோஷி அவர்களையும் மறக்கலாகாது.
1875லிருந்தே விடுதலை விழிப்புணர்ச்சி தலையெடுத்தது. 1876ம் வருட தர்பாரிலேயே, துல்லிய கதராடை அணிந்திருந்த கணேஷ் வாசுதேவ் ஜோஷி அவர்கள், ‘மஹாராணியிடம் நாங்கள் கேட்பது எல்லாம், உங்களுடைய பிரிட்டீஷ் மக்களுக்கு இருக்கும் அரசியல்/சமூக அந்தஸ்து இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதே...’.என்று கேட்டது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ‘இடிமுழக்கம்’ ஸுரேந்திரநாத்
இன்னம்பூரான் 28 12 2011 http://www.xtimeline.com/__UserPic_Large/3785/ELT20071211063344989743... [image: ELT200712110633449897435.JPG]
உசாத்துணை: Bevir,M.(2003) Theosophy and the Origins of the Indian National Congress in
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:17, 28 டிசம்பர் 2011 (UTC) |