"சில கர்நாடக சமையல்கள்!" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
02:18, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்ஒரு கர்நாடக சமையல்: கடுகோரை: அரைக்க: புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை. தாளிக்க: கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப் ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும். அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும். இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.
--Geetha Sambasivam 02:18, 10 நவம்பர் 2011 (UTC)
Category:சமையல் |