15:28, 5 ஆகஸ்ட் 2011 இல் நிலவும் திருத்தம்
<span id="fck_dom_range_temp_1312558024640_796" />திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த இல்லம் மிகவும் சிதிலமடைந்து, பராமரிப்பின்றிக் கிடந்தது. இங்கு நினைவு இல்லம் கட்ட வேண்டும் என தமிழ்
ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, 9.6.2004ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ரூ.23 இலட்சத்தில் நினைவு இல்லம் கட்ட உத்தரவிட்டார். இந்தப் பணி காலதாமதமாகவே தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகள்
கழித்து 2008ல் அவரது நினைவு நாளான ஏப்ரல் 28ம் தேதிக்கு முதல் நாள் திறக்கப்பட்டது.
இந்த இல்லத்தில் உ.வே.சா.வின் மார்பளவு வெண்கலச் சிலை, அவர் பயன்படுத்திய ஓலைச்சுவடிகள், பிற பொருள்கள், அவர் பதிப்பித்த நூல்கள் ஆகியன கண்ணாடிப் பேழையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த இல்லத்தின் முதல் தளத்தில் நூலகத் துறை சார்பில், ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகம் தினந்தோறும் காலை 9 முதல் நண்பகல் 12 வரையிலும், பிற்பகல் 4 முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.
இந்த நினைவு இல்லத்தை செய்தி மக்கள் தொடர்புத் துறை பராமரித்து வருகிறது.
குறிப்பு: இச்செய்தியின் சிறு பகுதி மட்டுமே இங்கு தகவலுக்காக இணைக்கபப்ட்டுள்ளது.
எஸ்.கல்யாணசுந்தரம்
நன்றி:- தினமணி