"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வரிசை 35: வரிசை 35:

'''''விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர்
தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக்
கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை
முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும்.'''''

'''''விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர்
தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக்
கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை
முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும்.'''''

'''''1480. நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.'''''

'''''1480. நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.'''''
வரிசை 89: வரிசை 89:

'''''கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.'''''

'''''கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.'''''

[[Image:திரிபுரம்.jpg|center]]
திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம். ஸ்கந்தனையும், உமை அம்மையும் பயந்து விலகும் கோலத்தில் சில சிற்பங்களையும், ஓவியங்களையும் காணலாம். இது திருக்குற்றாலச் சித்திர சபையில் பிரம்மாவால் வரையப் பட்டதாக ஐதீகம். ஆனால் இப்போ இந்தச் சித்திர சபை நடராஜரின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு மோசமான பராமரிப்பில் இருக்கிறார் சித்திர சபை நடராஜர்.

[[Image:திரிபுரம்.jpg|center]]
திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம். ஸ்கந்தனையும், உமை அம்மையும் பயந்து விலகும் கோலத்தில் சில சிற்பங்களையும், ஓவியங்களையும் காணலாம். இது திருக்குற்றாலச் சித்திர சபையில் பிரம்மாவால் வரையப் பட்டதாக ஐதீகம். ஆனால் இப்போ இந்தச் சித்திர சபை நடராஜரின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு மோசமான பராமரிப்பில் இருக்கிறார் சித்திர சபை நடராஜர். [[Image:Images.jpgநடரா.jpg|center]]

'''''காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே'''''

'''''காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே'''''

08:57, 12 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

நடராஜா! நடராஜா!!  நர்த்தன சுந்தர நடராஜா!  2

Images.jpgஉமா.jpg

சந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத் தாண்டவத்தில் இருக்கும் "அபஸ்மார புருஷம்" (தன்னை மறந்த நிலை?)என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் "சந்தியா தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் இடது பதம் தூக்கி ஆடும் நடராஜர் மதுரை வெள்ளியம்பலத்தில் மட்டும் வலது பதம் தூக்கி ஆடுவார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அன்னை மீனாக்ஷியைத் திருமணம் செய்து கொண்ட சுந்தரேஸ்வரர், திருமணத்திற்கு வந்திருந்த ரிஷி, முனிவர்களை விருந்துண்ண அழைக்க, வியாக்ரபாதரும், பரஞ்சோதியும் தாங்கள் இருவரும் தினமும் தில்லையம்பலத்து ஆடிய ஈசனின் ஆட்டத்தைக் கண்ட பின்னரே உணவருந்தும் வழக்கம் எனச் சொல்ல, புன்னகை புரிந்த ஈசன் மதுரை மாநகரிலே ஒரு வெள்ளியம்பலத்தை உருவாக்கி அங்கேயே திருநடனம் புரிந்தார். அந்த வடிவிலேயே அர்ச்சாவதாரமாக இருந்து மீனாக்ஷி அம்மன் கோயிலின் வெள்ளியம்பலத்தில் ஈசன் அருள் புரிந்து வந்த ஒரு சமயத்தில், விக்கிரம பாண்டியனுக்குப் பின்னர் ராஜசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனைப் பற்றித்திருவிளையாடல் புராணம் கூறுவதாவது:

கண்ணகன் புவி இராச சேகரன் பொதுக் கடிந்து செங்கோல் ஓச்சி
வண்ண வெண் குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய தனி மன்றுள்
அண்ணால் ஆடிய திரு நடனத்து அன்பினால் ஆடல் நூல் ஒழித்து ஏனை
எண்ணி மூ இரு பத்து முக்கலையும் கற்று இறை முறை செய்யும் நாளில்.

ராஜசேகர பாண்டியன் ஆடல்கலையைத் தவிர மற்ற கலைகளில் நன்கு தேர்ந்தவன். அவன் அவைக்குச் சோழ நாட்டில் இருந்து வந்த ஓர் புலவன், அவனுக்கு பரதம் தெரியாது எனக் கண்டு ஆச்சரியமடைந்து, அப்போது பூம்புகாரில் ஆண்டு கொண்டிருந்த கரிகால் பெருவளத்தானுக்குத் தெரியாததே இல்லை எனப் பெருமிதமாய்ச் சொன்னான்.

பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின்
கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம்
மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று
தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.

இதைக் கேட்ட ராஜசேகர பாண்டியன் மனம் வெதும்பி பரதமும் கற்றுத் தேர்ந்திட வேண்டும் என எண்ணி பரதம் பயிலத்தொடங்கினான்.

ஆடல் நூல் வரம்பு கண்டவர் ஆகி அவ்வழி ஆடாலும் பயின்ற
நாடக நடை தேர் புலவரைத்துருவி நண்ணிய அவர்க்கு எலாம் மகிழ்ச்சி
வீடரும் சிறப்பால் அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப்
பாடல் வண்டாற்றும் தாரினான் பரதப் பனுவலும் கசடு அறப் பயில்வான்.

உரைத்த இக் கூத்துக் கற்கும் போது தன் உடன் பிறப்பில் சால
வருத்த நோய் எய்தி இந்த வருத்த நான் மறையும் தேறா
அருத்தமாய் அறிவாய் வெள்ளி அம்பலத்து ஆடி நின்ற
நிருத்தனார் தமக்கும் உண்டே என்பது நினைவில் கொண்டான்.

இந்தக் கூத்துக் கற்கும்போது தன் உடலின் அனைத்து அங்கங்களுக்கும் ஏற்படும் நோவை உணர்ந்த ராஜசேகர பாண்டியன், "ஆஹா, இதைக் கற்கும் எனக்கு இவ்வளவு நோவு ஏற்பட்டதெனில், இடையறாது ஆடும் ஈசனின் கால்களும் இதை விட அதிகமாய் நோவு எடுக்குமே" என வருந்தினான். ஈசனின் நிலையை எண்ணி, எண்ணித் துயரம் அதிகம் கொண்டான் ராஜசேகர பாண்டியன். இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த மன்னன் அன்றிரவு வெள்ளியம்பலம் சென்றான். தன்னிரு கைகளையும் சிரமேல் கூப்பிக்கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக ஈச்னை வேண்டினான். ஆடிய பாதத்தை ஊன்றி, வலக்காலைத் தூக்கி ஆடும்படியும் அவ்வாறு ஈசன் கால் மாறி ஆடவில்லை எனில் தன் சுரிகை என்னும் வாளை நிலத்தில் ஊன்றி அதன் மேல் வீழ்ந்து தன் உயிரை விடப் போவதாயும் ஈசனிடம் கூறிவிட்டுப் பாண்டியன் வாள் மேல் வீழ்ந்து உயிரை விடத் தயாரானான்.

விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர்
தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக்
கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை
முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும்.

1480. நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.

ஆஹா, என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்? தூக்கிய திருவடியை ஊன்றி, ஊன்றிய திருவடியைத் தூக்கிக்கொண்டு கால்மாற்றி ஆடத்தொடங்கினான் கூத்தபிரான்.

நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.

பெரியாய் சரணம் சிறியாய் சரணம்
கரி ஆகிய அம் கணனே சரணம்
அரியாய் எளியாய் அடி மாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்.

என்று இப்படியே இந்தத் திருநடம் யாரும் காண
நின்று அருள் செய்ய வேண்டும் நிருமலமான வெள்ளி
மன்றவ அடியேன் வெண்டும் வரம் இது என்று தாழ்ந்தான்
அன்று தொட்டு இன்று எம் கோன் அந் நட நிலையாய் நின்றான்.

அதைக்கண்ட ராஜசேகரன் இந்தத் திருநடனம் அனைவரும் காணும் வண்ணம் இப்படியே நின்று அருள் செய்யவேண்டும் என வேண்ட அன்று தொட்டு இன்று வரை வலக்காலைத் தூக்கி ஆடிய நிலையிலேயே ஈசன் காட்சி தருகிறார் மதுரை வெள்ளியம்பலத்தில்.

டிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.

உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.

காளிகா தாண்டவம்: இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

திரிபுரம்.jpg

திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம். ஸ்கந்தனையும், உமை அம்மையும் பயந்து விலகும் கோலத்தில் சில சிற்பங்களையும், ஓவியங்களையும் காணலாம். இது திருக்குற்றாலச் சித்திர சபையில் பிரம்மாவால் வரையப் பட்டதாக ஐதீகம். ஆனால் இப்போ இந்தச் சித்திர சபை நடராஜரின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு மோசமான பராமரிப்பில் இருக்கிறார் சித்திர சபை நடராஜர்.
Images.jpgநடரா.jpg

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே

திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் தனித் தன்மை பெற்று விளங்குகிறது. மற்ற ஊர்த்துவ தாண்டவங்களில் நடராஜரின் வலக்கால் உடம்போடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடுவார். திருவாலங்காட்டிலோ, இடக்கால் பாதத்தைச் செங்குத்தாகத் தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக வரும்படியான அமைப்பில் உள்ளது. காளியின் செருக்கை அடக்க ஆடப்பட்ட ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப் படும். தில்லையிலும் பொன்னம்பலத்தின் எதிரே உள்ள நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவ சிற்பம் தனி சந்நிதியாக உள்ளதைக் காண முடியும். நெற்றிக்கு நேராகத் திலகம் வைக்கும் பாவனையில் காணப்படும். இதை "லலாட திலகா" என்று சொல்வதுண்டு. இன்னும் சிலர் காதில் அணிந்திருந்த குழையைக் கீழே இருந்து இடக்காலால் எடுத்து, காலாலேயே அணிந்ததாகவும் அதைக் கண்ட காளி தன்னால் அப்படிச் செய்ய முடியாது என வெட்கித் தலை குனிந்ததாகவும் சொல்வார்கள்.

காளியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை என்ன தான் பெண்ணாக இருந்தாலும் காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்து ஆட முடியாது அல்லவா? மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி! முடியும் என்றாலும் பெண்களுக்கு என ஒரு எல்லைக் கோடு உண்டு என்பதை அன்னை தானாகவே வகுத்துக் கொண்டாள். பண்பு என்பது எல்லைக் கோட்டைத் தாண்டாது என்பதையும் உணர்த்தினாள். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட பெண்ணின் பெருமையும், அவள் தன்னிலையை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதுமே உணர்த்தப் படுகிறது. சக்தியானவள் ஆக்கும் சக்தியாக வெளிப்படுவதே அன்றி, தன்னையும் தன்னிலையையும் மறந்து அழிக்கும் சக்தியாக மாறக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துவதாய் என் கருத்து.

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.

சம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப் படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப் படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப் படும் கூத்தாகச் சொல்லப் படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை,போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப் படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப் படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய், சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும், இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் ஒரு நாமம் இந்தப்பிரளயகால நடேசனின் கூடவே சாக்ஷியாக நிற்பவள் என்ற அர்த்தத்தில் வரும். "மஹேச்வர, மஹாகல்ப, மஹா தாண்டவ சாக்ஷிணி" என்பதற்கு இதுதான் அர்த்தம்னு நினைக்கிறேன்.

--Geetha Sambasivam 08:52, 12 பெப்ரவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam