|
|
| வரிசை 3: |
வரிசை 3: |
| | ________________________________________________________________________________________________________ | | ________________________________________________________________________________________________________ |
| | | | |
| − | ==== ஆஸ்திரேலியா பெண்கள் உலகம் -–ஒரு பார்வை ==== | + | ==== ஆஸ்திரேலியா பெண்கள் உலகம் -–ஒரு பார்வை ==== |
| | | | |
| | ==== ==== | | ==== ==== |
08:38, 8 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்
எழுதியவர் - திருமதி சீதாலட்சுமி அவர்கள்
________________________________________________________________________________________________________
ஆஸ்திரேலியா பெண்கள் உலகம் -–ஒரு பார்வை
ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு இருந்தேன். எங்கு சென்றாலும் அங்குள்ள சமுதாயத்தினைப் பார்ப்பேன். முதலில் நூலகம் சென்று அந்நாட்டு வரலாறுகளைப் படிப்பேன். பின்னர் சிலருடன் பழகுவதும், அவர்கள் வீடுகளுக்கும் செல்வேன். அந்நாடு பத்திரிகைகளையும் விட்டு வைக்க மாட்டேன். ஓர் ஆய்வாளருக்கு இவை உதவும் கரங்கள்.
என் பேரன் ஒரு செய்தி கொண்டு வந்தான். அந்த செய்தி, எனக்கு வியப்பும் வேதனையும் கொடுத்தது. அவனு டன் படிக்கும் சில மாணவர்களுக்கு தங்கள் தந்தையின் பெயர் தெரியாது. யாராவது கேட்டு விட்டால் தயங் காமல் அவர்கள் சொல்லும் பதில் - “உங்களுக்கு அவர் பெயர் எதற்கு ? நான் மாணவன் என்னையறிய என் பெயர் மட்டும் போதும் “ அவன் தாயார் திருமணம் ஆகாமல் பெற்றிருக்கலாம். அவன் ஒரு விலை மாதின் மகனாகவும் இருக்கலாம்.
’ஆஸ்திரேலியாவின் முதல் வெள்ளை மனிதன் ஒரு விலைமாதின் மகன்’ என்று எழுதப்பட்ட புத்தகம் அங்கு நூலகத்தில் இருக்கின்றது. இது ஒரு சோகக் கதை. அமெரிக்காவிற்கும் பின்னால் உதயமான நாடு. அண்டை வீட்டுத் துயர் தெரிந்திருக்க வேண்டும். மனிதன் ஒவ்வொரு நாட்டிலும் மிருகமாக நடமாடி இருக்கின்றான்; இன்னும் நடமாடிக் கொண்டிருக்கின்றான்.
இன்று சிட்னி என்று பேசப்படும் இடம் ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையாக இருந்தது. பிரிட்டிஷ் காலனியின் ஆதிக்கத்தில் நடந்தது. அவர்கள் நாட்டுக் குற்றவாளிகளை இங்கே இறக்குமதி செய்தனர். பூர்வீகக் குடிகளின் குழந்தைகளைப் பிரித்து அவர்களை விரட்டியது மட்டுமன்று; அவர்கள் செய்த இன்னொரு கொடுமை அழியாக் கறையைக் கொண்டி ருக்கின்றது. இப்பொழுது சிலர் மாற்றிப் பேசுகின் றார்கள். பிரச்சனைகளைப் பார்க்கலாம் . 1788 -1852 இதற்கிடையில் 24000 பெண் கைதிகள் அனுப்பப் பட்டிருக்கின்றார்கள். இது இப்பொழுது அவர்கள் சொல்லும் எண்ணிக்கை. முன்னால் ஏறத்தாழ 70,000 பெண்கள் வந்திருக்கலாம் என்றும் பேசப்பட்டது.
ஆரம்பத்தில் விபச்சாரக் குற்றத்தில் கைதி செய்த வர்களை அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் கைதிக ளுக்கும் எல்லா பணிகளையும் செய்ய அதாவது அவர்கள் உடல் இச்சையை முதற்கொண்டு தீர்த்து வைக்க அனுப்பட்டார்கள் என்று கூறப்பட்டது. வெளி நாட்டுப் பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பிக்கவும் அனுப்பட்ட பெண்கள் குற்றம் புரிந்தவர் என்று மறுத்தனர். அதுமட்டு மன்று; இப்படிப் பத்திரிகையில் எழுதவும் கூடாதும் என்று அறிவித் தனர். எந்தக் காரணம் பற்றி வந்தால் எனன? எத்தனை பேர்களாயிருந்தாலென்ன? வந்தவர்களின் வேலை அதுதான். வீட்டு வேலை செய்யப் போனால் அந்த ஆடவனைத் திருப்தி செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தகப்பன் பெயர் கிடையாது. அந்நாட்டில் எந்த உரிமையும் கிடையாது. அது மட்டு மன்று, அவர்களையோ, அவர்கள் பிள்ளைகளையோ என்ன செய்தாலும், கொன்றால் கூடக் குற்றமில்லை. எத்தனை சம்பவங்கள், எத்தனை கதைகள். எல்லாம் புத்தகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
அந்தப் பெண்களுக்கு , அவர்கள் வாரிசுகளுக்குக் கிடைத்த அவமானம் கொஞ்சமல்ல. முறையான வாழ்வு கிடையாது. பின்னர் திருமணம் செய்த பொழுதும் நிலையாக இல்லை. இதயக் கனல் தகிக்க அவர் முன் னுக்கு வர கடுமையாக உழைத்தனர்; படித்தனர். தொழில் செய்தனர். இன்று அந்தப் பெண்கள் ஆண்களைப் பற்றி கவலைப் படவில்லை.
அவர்களைத் தவிர, சுரங்க வேலைக்காக வந்தவர்கள், போரினால் வந்த அகதிகள் தான் குடிமக்கள். திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் எண்ணிக்கை எல்லாத் தரப்பினர்களிடையேயும் அதிகமாயிற்று. பெண்ணுக்கு வாழ்க்கையில் உத்திரவாதம் இல்லை. ஆணின் சபலத்திற்கும், வன்முறை குணத்திற்கும் பணியவேண்டியதில்லை என்ற உணர்வு வளர ஆரம்பித்தது. இக்குணம் எல்லாத் தரப்பினர்களி்லும் பெரும்பான்மையினரிடம் வளர ஆரம்பித்துவிட்டது. அடிக்கடி விவாகரத்துத் தேடும் ஆணாயிருந்தால் பெண் ஒதுக்க ஆரம்பித்துவிட்டாள். உலகிலே ஆஸ்திரேலியப் பெண்கள் தனித்து வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள். உடலுறவுக்கு ஆணைப் போல் தற்காலிகமாக இச்சையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் வளர ஆரம்பித்துவிட்டது. ஒருவன் காதல் என்று சொன்னால் போதும். அவன் முன்னாள் சரித்திரம் பார்ப்பார்கள். வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுப்பது இப்பொழுது பெண்ணாகிவிட்டாள். இந்த விகிதாசாரமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. கல்வியாலும் உழைப்பாலும் தன்னை உயர்த்திக் கொண்ட பெண் அடி வாங்க, கொடுமைகளைத் தாங்கத் தயாரியில்லை. இந்த எழுச்சி ஆணால் பொறுக்க முடிய வில்லை. இது வரை அவன் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் சுதந்திரம் அவனுக்கு இருந்தது. இப்பொழுது ஆணின்றிப் பெண் வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டவும். அவன் மேலும் மிருகமாகி அடித்தவன், இப்பொழுது கொலை செய்ய ஆரம்பித்து விட்டான். சில ஆய்வுகளில் இந்த வன் முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகின்றது .
ஆண் வாழ்ந்த வாழ்க்கையைப் பெண் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டாள். குழந்தை பெறுவதும் பெறா ததும் அவள் கையில். அரசியலில் ஆஸ்திரேலியப் பெண்கள் மிகவும் முன்னேறி இருக்கின்றார்கள். பெண்களின் துணிவும், உழைப்பும், கல்வி,தொழில், அரசியல் இவைகளில் அவர்களின் முன்னேற்றம் அமெரிக்காவில் கிடையாது .
ஜப்பானில் கணவன் பணியிலிருந்து ஓய்வு பெறும் பொழுது மனைவி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சட்டம் வாங்கிவிட்டார்கள். இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தி ருக்கின்றது . இந்தியாவிலும் மணமின்றிச் சேர்ந்து வாழும் பழக்கம் தொடங்கிவிட்டது. திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது பாபமில்லை என்று கூறுவோரின் எண்ணிக்கையும் கூட ஆரம்பித்துவிட்டது.
திருமணத்திற்கு முன் பெண் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் ஆண்களின் விகிதாசரமும் கூட ஆரம்பித்துவிட்டது. ஆடம்பர வாழ்க்கைக்காகப் பிள்ளைகள் எப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாத பெற்றவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூட ஆரம்பித்திருக்கின்றது.
இன்னும் மாயையில் மனிதர்கள் உட்கார்ந்தி ருக்கின்றார்கள். விலங்காய்த் திரிந்த மனிதன் கண்டு பிடித்த குடும்பம் சிதைய ஆரம்பித்திருக்கின்றது. கூட்டுக் குடும்பம் போயிற்று. சிறிதளவு ஓட்டுறவு இருந்ததும் இப்பொழுது போய்க் கொண்டிருக்கின்றது. இங்கும் பெண், கணவனை வேண்டாம் என்று ஒதுக்க ஆரம்பித்து விட்டாள். கணவனைவிட அதிகச் சம்பளம் பெண் வாங்கினால் அவள் ஒன்று அவனை அலட்சியப் படுத்துகின்றாள், அல்லது விலகி விடுகின்றாள். அய்யா, இது எங்கோ ஒன்று, இரண்டல்ல, பார்த்தினீயச் செடிபோல் பரவிக்கச்கொண்டிருக்கும் மாற்றம். விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக் கின்றோம். இந்தம்மா இதை மிகைப் படுத்தி பேசுகின்றாள் என்று கூறிவிடுவீர்கள்.
நெருப்புப் பொசுங்கும் வாடையை நீங்கள் உணர வில்லையா?