"இறைவனைக்காண்போம்--கூட்டுப்புழுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
("<div>வண்ணாத்திப்பூச்சி, வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

12:39, 29 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

வண்ணாத்திப்பூச்சி, விட்டில்கள், பட்டு இழையை நமக்களித்திடும் பட்டுப் பூச்சி இவற்றின் வாழ்க்கையில் கூட்டுப் புழுப் பருவம் என்று ஒரு பருவம் உண்டு.  இந்த பருவத்தில் தாய்ப் பூச்சி இட்ட பல முட்டைகளில் இருந்து புழுக்களாய் வெளி வந்து, இரவு பகல் என வித்தியாசம் பாராது இலையைத் தின்று கொழுத்து, தன்னைச் சுற்றிலும் ஒரு கூட்டினைக் கட்டிக் கொண்டு, அதனுள் ஆழ் நித்திரைக்குச் சென்று விடும் அப் புழுக்கள். 
 
பின் அவை விழித்திடும் போது உரு மாற்றம் அடைந்து இறகுள் முளைத்த பறந்திடும் பூச்சிகளாய் வெளி வரும்.  இந்த வகை கூட்டுப் புழுக்கள் அவற்றின் கூட்டினுள் இருக்கும் போது உணவேதும் உண்பதில்லை.
 
ஆனால் மற்றொரு வகை கூட்டுப் புழு தன் கூட்டினை முற்றிலுமாய் மூடிக் கொண்டு உறங்குவதில்லை.  அவை தன் வீட்டைச் சுமந்த படியே மெல்ல நகர்ந்து இரை தேடி உண்டிடும்.  இவ்வகைப் புழுக்கள் இரை உண்டு கொழுத்திடக் கொழுத்திட தங்கள் கூட்டின் அளவினையும் பெரிது படுத்திக் கொள்ளும்.
 
இந்த வகைப் புழுக்களை ஆங்கிலத்தில் “கேஸ் மாத் லார்வா” (Case moth larva) என்று அழைப்பார்கள்.  அவற்றில் இரு வகைகளை இந்தியாவில் நான் கண்டிருக்கிறேன்.
 
இந்த வகைப் புழு சிறு குச்சித் துண்டுகளை தன்னைச் சுற்றி ஒரு குழாய் போல் அமைத்து, தன் உடலில் இருந்து சுரக்கும் ஒரு பிசினினால் ஒட்டித் தன் வீட்டைக் கட்டிக் கொள்ளும். 
 
புழு வளர வளர வீட்டின் அளவு போதாது என்பதால் விட்டின் ‘சுவற்றினை’ வெட்டி இன்னும் சில குச்சிகளைச் சேர்த்தது ஒட்டி தன் ‘வீட்டின்” அளவினை பெரிது படுத்திக் கொள்ளும்.
 
இப்படிக் கட்டிக் கொள்ளும் விட்டில் என்ன விசேஷம் என்றால், சுவராய் அமைந்திடும் குச்சிகள் பருமனில் ஒரே அளவு கொண்டதாகவும், நீளத்தில் ஒன்று மற்றொன்றை விட சற்று அதிக நீளம் கொண்டதாகவும் இருக்கும்.  இதோ பாருங்கள் வீட்டைச் சுமக்கும் கூட்டுப் புழு ஒன்றினை.
 விட்டில்” இருந்து தன் உடலை சற்றே வெளியில் துருத்தி, முன்னங் கால்களால் கொடி மரம் இவற்றின் கிளைகளைப் பற்றி நகர்ந்து இலைகளைத் தின்றிடும் உணவாய் இவ்வகைப் புழுக்கள்.
 
மற்றொரு வகைப் புழு மயிர் துண்டுகள், மிக மெல்லிய குச்சித் துண்டுகள், இலைச் சரகுத் துண்டுகள் எனப் பலவற்றை ஒட்டித் தன் விட்டினை அமைத்திடும்.  இதோ அந்தப் புழுவைப் பாருங்கள்.
 
எங்கள் விட்டு வெளிப் புரச் சுவற்றில் கண்ட புழு இது.  படம் பிடித்தது அவினாஷ் என்னும் எனது பேரன் ஒருவன்.)
 
இயற்கையில் கண்டு களித்திட எத்தனைக் காட்சிகளை நமக்களித்திடுறான் இறைவன்!
 
நடராஜன் கல்பட்டு
<div
--Geetha Sambasivam (பேச்சு) 12:39, 29 செப்டெம்பர் 2015 (GMT)
</div>

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam