கோவிலூர் ஆதீனகர்த்தர்கள்

எந்நாட்டவர்க்கும் இறைவனாம் தென்னாடுடைய சிவபெருமான் அருள்மிகு உமையோடு அமர்ந்து அருள் காக்கும் ஆலயங்கள் ஆயிரமாயிரம் இருப்பினும் சிவபெருமான் தன் நாடு எனக் கொண்டது தென்பாண்டி நாடே!

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீரசேகர பாண்டியன் ஈசனிடம் ஏற்பட்ட ஈடில்லா நேசத்தின் காரணமாக சிவனுக்கு ஸ்தலம் அமைக்க எண்ணி, "ராஜ கட்க பரமேசுவரர்" என்னும் கொற்றவாளீசுவரர் திருநெல்லையப்பன் சமேதராக காரைக்குடிக்கு மேற்கே கோவிலூரில் அமைத்தார்.

இத்திருத்தலம் கிழக்கே திருப்பெருந்துறையும் தெற்கே திருக்கானப்பேரும், மேற்கே திருப்பத்தூரும் வடக்கே திருமெய்யரும் ஆன பாடல் பெற்ற திருத்தலங்கள் சூழ அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க புராணப் பெருமையுடன் விளங்கும் இப்புனிதப்பதி, "ஶ்ரீவல்லபம்", "சமிவன க்ஷேத்திரம்", "வன்னிவனம்", என்னும் சிறப்புப் பெயர்களூடன் "கழனிவாயில்", "ரசத் பெருந்தெரு" "வீரபாண்டியபுரம்", "மருகேந்தீரபுரம்", என்னும் வேறு பெயர்களாலும் புகழ்ந்து பல ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது. இவ்வூரில் மதுப்பிரிய முனிவர் என்னும் மகான் தவம் செய்த காரணத்தால் இவ்வூர்க்குளத்துக்கு மதுபுஷ்கரணி என்றும் இவ்வூரில் ஓடும் நதிக்குத் தேனாறு என்றும் வேறு பெயர்களும் உண்டு. இத்தெய்வீகத் திருத்தலத்தை திரிசிரபுரம் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கோவிலூர்ப் புராணம் என தெள்ளு தமிழில் புகழ்ந்து தலபுராணம் பாடியுள்ளார்.

இன்றைக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி நகரத்தார் வழியில் தோன்றிய முத்திராமலிங்கம் தன் பெற்றோருடன் நாகப்பட்டினம் அருகில் உள்ள சிக்கலில் வசித்து வந்தார். தன் தந்தையுடன் ஒருநாள் அருகிலுள்ள சிற்றூரான பொருள் வைத்த சேரிக்குச் சென்றார். அவ்வூரில் நெசவுத் தொழிலை ஜீவனத் தொழிலாகக் கொண்டு ஶ்ரீ உகந்தலிங்க சுவாமிகள் திருவள்ளுவரைப்போல நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை மூன்று பங்குகளாகப் பிரித்து முதல் பகுதியை மறுநாள் நெய்வதற்கு நூல் வாங்கவும், இரண்டாம் பகுதியை வீட்டுச் செலவுக்கும், மூன்றாம் பகுதியை அடியார்களுக்கு அமுது அளிக்கவும் பயன்படுத்தி வந்தார். வேதாந்த நூல்களைக் கற்பித்துப் பலருக்கும் வேதாந்த ஞான உபதேசகராகவும் விளங்கினார். இவர் சிருங்கேரி மடத்தின் அருளாளர்களை குருஸ்தானமாகக் கொண்டு ஞான மார்க்கத்தை உபதேசித்து வந்தார்.

முத்திராமலிங்கத்துக்கு ஶ்ரீ உகந்தலிங்க ஸ்வாமிகளிடம் அளவிடமுடியாத பக்தியும், பாசமும் ஏற்பட்டது. அன்று முதல் அவரும் ஒரு மாணவராகப் பாடம் கேட்டு வந்தார். ஒரு சமயம் வடநாட்டு சாது இவரைச் சந்தித்தபொழுது இவரிடம் உள்ள தெய்வீக உள்ளுணர்வை உணர்ந்து "இவன் உலகத்துக்கே உபதேசிக்கப் பிறந்தவன்" என வாழ்த்தி அனுப்பினார். அன்று முதல் முத்திராமலிங்கத்தை எல்லோரும் "ஆண்டவர்" என அழைக்கத் தொடங்கினார்கள். வேதாந்த ஞான நூல்களான "நாநாஜீவ வாதக்கட்டளை", "கீதாசாரத் தாலாட்டு", "சசிவன்ன போதம்", "மஹாராஜத் துறவு", "அஞ்ஞைவதைப் பரணி", "வேதாந்த சூடாமணி" , "விவேக சூடாமணி," "பஞ்சதசி", "கைவல்ய நவநீதம்", "ஈசுவர கீதை", பகவத்கீதை", "ப்ரம்ம கீதை" "ஞான வாசிட்டம்", எனும் பதினாறு நூல்களாகும். இந்தப் பதினாறாவது நூலான ஞான வாசிட்டத்துடன் பாடம் பூர்த்தி செய்வது முறை. வசிட்ட முனிவர் ஶ்ரீ ராமபிரானுக்கு உபதேசித்த வேத நூலின் சாரமே இப்பதினாறாவது நூலாகும்.

ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகள் தன் குருநாதரைப் போலவே சிருங்கேரி ஆதிசங்கராச்சாரியாரின் மரபில் வந்த அருளாளர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி வந்தார். ஞான மார்க்கத்தில் ஈடுபட மனப்பக்குவத் தகுதி தேவை எனவும், வேதாந்தத்தில் பூர்ணத்துவம் பெற மதம், குலம், ஜாதி, சம்பிரதாயங்கள் தடையில்லை என்றும், பக்தியே முக்திக்கு வழி எனவும் உபதேசித்தார். கோவிலூரில் வேதாந்த பாடத்தை நிறுவியர் ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகளேயாகும். வேதாந்த வடமொழி நூல்கள் அனைத்தையும் எல்லோரும் எளிதாகப் படித்துப் பக்குவம் பெறத் தமிழிலேயே மொழி மாற்றம் செய்து எளிய தமிழில் பாடங்களைச் சொல்லும் முறையையும் ஏற்படுத்தினார். வேதாந்த மடங்களை நிறுவி சாதுக்கள் எவ்வித விசாரமுமின்றி வேதாந்த பாடம் கற்க ஏற்பாடு செய்தார்.

ஒரு சமயம் ஶ்ரீ ஆண்டவர் சுவாமிகள் திருநெல்லை அம்மன் சமேத கொற்றவாளீசுவரர் கோவிலுக்குத் தரிசனம் செய்யச் சென்றார். அங்கு செம்பூரான் கல்லினால் கட்டப்பட்ட அக்கோவில் சுவர்கள் சேதமடைந்து மேல் கீற்றுக் கூரையும் காற்றினால் சரிந்து கிடந்ததைக் கண்ணுற்றார். மிகவும் மனம் கலங்கிய நிலையில் எவ்வாறேனும் இவ்வாலயத்தைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ய முடிவு செய்தார். ஶ்ரீமத் ஆண்டவனின் எண்ணம் நிறைவேற நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தாராளமாகப்பொருள் உதவி செய்தனர். ஶ்ரீமத் ஆண்டவரின் திருக்கரத்தால் வரையப் பெற்று அடிகோலப் பெற்றதான இத்திருக்கோவில் அடுத்து வந்த ஶ்ரீலஶ்ரீ சிதம்பர ஞான தேசிகராலும், திருக்களர் ஆண்டவர் என போற்றப்படும் ஶ்ரீலஶ்ரீ வீரசேகர ஞான தேசிகராலும், ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிகராலும் திருப்பணி செய்யப்பட்டு, குடநீராட்டு விழா நடத்தி, சீரும் சிறப்பும், வனப்பும் மிக்க ஒப்புயர்வு பெற்ற பெரும் திருக்கோவிலாக எல்லா அங்க அமைப்புகளுடன் நிறை செய்து, சுற்றுவீதிகள், திருக்குளம், மையமண்டபம் நுழைவாயில், ரதக் கூடங்கள், வளைவுடன் கூடிய ரதமேருகள் அனைத்தையும் நிறுவிப் புதுப்பித்து, வேத பாடசாலை, குடியிருப்புகள் ஆகிய நற்பணிகளையும் நகரத்தார் பலரும் பொருள் உதவி செய்யச் செவ்வனே செய்து முடித்தார்கள். அரசர்கள் காலத்து கோவில் திருப்பணிகளுக்குப் பின்பு முதல் முதலாகக் கோவில் திருப்பணி செய்தவர் ஆண்டவரே. நாட்டுக்கோட்டை நகரத்தார்களைக் கோவில் திருப்பணியில் முழுமையாக ஈடுபடச் செய்த பெருமை ஶ்ரீமத் ஆண்டவர் சுவாமிகளையே சாரும். கோவிலூர் மடத்தில் ஶ்ரீ குட்டைய சுவாமிகள் ஶ்ரீ ஆண்டவரின் சிஷ்யராக விளங்கினார். அவர் தேவகோட்டை நகரத்தார் வழியில் ஐந்து வீட்டார் என்னும் குடும்பத்தில் பிறந்தவர். ஶ்ரீ ஆண்டவர் இவரை சிவரகசியம் என்னும் நூலில் 25 மூர்த்தம் வைப்பது சிவப்பணி எனக் கூறி மதுரைக்கு அனுப்பி வைத்தார். அதை ஶ்ரீ குட்டைய சுவாமிகள் சிறப்பாக நிறைவேற்றி வைத்தார்கள்.

இவர் ஶ்ரீ மீனாட்சி அம்மனுக்கு நாள் தோறும் நிகழும் அர்த்தசாமக் கட்டளையில் மூக்குத்தி மாலை அனுப்பிக் கட்டளை நிறைவேற்றி வைப்பது வழக்கம். இவ்வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது மடாதிபதியாக தேவகோட்டை ஶ்ரீலஶ்ரீ அருணாசல ஞான தேசிகர் பரிபாலனம் செய்தார்கள். மடத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த அவர் ஒன்றரை ஆண்டு காலத்துக்குப் பின் தன் உடன்பிறந்த தம்பி கருணாநிதி என வழங்கும் ஶ்ரீலஶ்ரீ சிதம்பர ஞான தேசிகரிடம் ஒபடைத்தார். இவர் ஶ்ரீமத் ஆண்டவர் விட்டுச் சென்ற ஆன்மிகப் பணிகளைத் திறம்படச் செய்து சிதம்பரம்--ஈஸ்வரன் கோவில், மதுரையில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனின் கும்பாபிஷேஹம், கோவிலூரில் திருக்குளமும், மையமண்டபமும் அமைத்தார்கள். லட்சணாவிருத்தி, பிரும்ம நாமாவளி, குரு ஸ்துதி குசுமாஞ்சலி, என்ற நூல்களையும் வெளியிட்டார்கள். மடத்துக்கு விளை நிலங்கள், தென்னை தோப்புகள் வாங்கி விஸ்தரித்தார். இவரிடம் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் வேதாந்த பாடம் பயின்றார்கள். 96 ஊர் நகரத்தார்களின் கூட்டம் நடைபெறப் பெரும் கல்யாண மண்டபத்தைக் கோவிலூரில் நிறுவினார்கள்.

இவருக்குப் பின் நான்காவது மடாதிபதியாகக் காரைக்குடி ஶ்ரீலஶ்ரீ ராமசாமி ஞானதேசிகர் பட்டத்துக்கு வந்தார். சுமார் ஏழு ஆண்டுகள் இவர் அருளாட்சி செய்தார். கோவிலூரில் ஶ்ரீ ஆண்டவர் கோவிலைச் சுற்றி மதில் சுவர் கட்டி, அஷ்டலட்சுமி மண்டபமும் மடத்துக்கு உணவு படைக்கும் கூடமும் கட்டினார்கள்.

ஐந்தாவது மடாதிபதியான திருக்களர் ஆண்டவர் எனப் பெயர் பெற்ற ஶ்ரீலஶ்ரீ வீரசேகர ஞான தேசிகர் அவர்கள் தஞ்சை ஜில்லா மன்னார்குடியை அடுத்துத் திருக்களரில் அமிர்தவல்லி சமேத பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலையும், வேதாந்த மடம், பிரும்ம சபை, நெற்களஞ்சியம், மலர்மிகு நந்தவனம், பசுமடம் ஆகிய திருப்பணிகளைச் செய்தார்.

1908-ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஶ்ரீ சச்சிதானந்த சிவ அபிநய நரசிம்ம பாரதி முன்னிலையில் திருநெல்லை அம்மன் சமேத கொற்றவாளீசுவரர் குட நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தார்கள். சிருங்கேரியில் சாரதாம்பாள் கோவிலையும் கருங்கற்களால் நிர்மாணித்து இத்திருப்பணிச் செலவும் முழுவதும் கோவிலூர் மடத்தின் மூலமாகவே செலவு செய்தார்கள். இன்றும் சாரதாம்பாள் கோவிலும் திருநெல்லையம்மன் ஆலயமும் ஒரே மாதிரித் தோற்ற அமைப்பில் உள்ளதைக் காணலாம். திருக்களரில் பஞ்ச மூர்த்திகளுக்கு ஐந்து தேர்கள் செய்து வைத்தார்கள். இவருக்கு ராஜரிஷி என்ற பட்டமும் உண்டு. சிருங்கேரி பீடத்திற்கும் கோவிலூர் மடத்துக்கும் இவர் காலத்தில் மிக்க நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

(தொடரும்)

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:39, 16 பெப்ரவரி 2014 (GMT)