|
|
| வரிசை 1: |
வரிசை 1: |
| − |
| |
| | | | |
| − | 1. வங்கக் கடல்வ்ண்ணா வ்ல்வினைகள் தாங்கமாற்றி
| |
| − | இங்(கு)எம் ம்னத்தில் இடம்பிடித்தாய் திருமார்பில்
| |
| − | தங்கத் திருமகளும் தானிருக்க அன்றந்தத்
| |
| − | துங்க வ்ரைசுமந்த தோளுடையாய் ப்ல்லாண்டு.
| |
| − |
| |
| − | 2. கதிரா யிரம்போல்க் காணும் வ்யிரமுடி
| |
| − | எதிரே சுடர்காட்டும் ஏழுமலைக்(கு) அதிபதியே
| |
| − | பதியில் சிற்ந்ததிருப் பதிஉறைவாய் நின்ன்டியே
| |
| − | கதியாய் நினைக்கின்றோம் காத்தருள்வாய் ப்ல்லாண்டு.
| |
| − |
| |
| − | 3. தாயாம் அலர்மேலு தானுறையும் ம்லர்மார்பா
| |
| − | வாயால் உனைப்பாடி வ்ழிவ்ழியாய்த் தொழுதெழுந்தோம்
| |
| − | மாயா திரும்லைவாழ் ம்லையப்பா நின்னடிகள்
| |
| − | ஓயாமல் சிந்தித்தோம் உத்தமனே ப்ல்லாண்டு.
| |
| − |
| |
| − | 4. கரியோடு பரிமாவும் காலாளும் தேர்ப்படையும்
| |
| − | உரியானைப் பாண்டவ்ர்பால் உள்வ்ர்மம் உடையானைத்
| |
| − | துரியனைத் தான்வெல்லத் துலங்குபரித் தேரோட்டி
| |
| − | வரிவில் விசயனையே வாழ்வித்தாய் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 5. கயல்திகழும் ம்லைச்சுனையில் காலையிலே நீராடி
| |
| − | வயற்கம்லம் போல்விளங்கும் வண்ணவிழி அருள்நோக்கால்
| |
| − | துயரகற்ற வேண்டுமெனத் தொழுது பணியுமெங்கள்
| |
| − | மயலகற்றி அருள்புரிவாய் ம்லையப்பா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 6. சங்கேந்து கையுடையாய் சக்கரமும் தானுடையாய்
| |
| − | மங்கையலர் மேலு ம்கிழ்ந்துறையும் ம்ர்புடையாய்
| |
| − | கொங்குண் ம்லர்வண்டு கோவிந்தா என்றழைக்கும்
| |
| − | தங்கத் திருமுடியாய் தளிரடிக்கே ப்ல்லாண்டு.
| |
| − |
| |
| − | 7. ஏதங்கள் போக்கி எமையாளும் வேங்கடவா
| |
| − | போதார் கமலப் பொகுட்டுறையும் திருமகட்கு
| |
| − | நாதா திருமலைக்கு நாயகனே நின்னுடைய
| |
| − | பாதம் கதியென்று பணிந்திட்டோம் ப்ல்லாண்டு.
| |
| − |
| |
| − | 8. சங்கமுடன் ஆழிஒரு சாரங்க வில்லெடுத்தோய்
| |
| − | பொங்கெழில்சேர் தாமரைபோல் பூத்தவிழிக் க்ம்லங்கள்
| |
| − | எங்கள்வினை போயகல் எழுகட்ல்போல் அருள்சுரக்கப்
| |
| − | பங்கயத்தாள் பற்றிட்டோம் பரந்தாமா பல்லாண்டு
| |
| − |
| |
| − | 9. படர்அலைகள் மேலிருக்கும் பாம்பணைமேல் கிடந்தானைத்
| |
| − | தடங்கடலுள் தான்பாய்ந்து தனிமறைகள் காத்தானை
| |
| − | மடங்கலாய் இரணியன்தன் மார்பகலம் கீண்டானை
| |
| − | வடவாலில் இருந்தானை வ்ணங்கிடுவோம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 10. கார்பொலியும் திருமலைமேல் கால்மெலாம் இருந்தானை
| |
| − | நீர்பொலியும் பாற்கடலே நிலைஎனக்கண் வளர்ந்தானைத்
| |
| − | தார்மாலை சூடிவரும் தாமரைக்கண் திருமாலைப்
| |
| − | பார்வாழப் பாடிடுவோம் பரந்தாமா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 11. நீலமா முகிலனைய நிறத்தானே நெய்விரவு
| |
| − | கோலக் குழ்ற்கோதை கொண்டிலகு மார்புடையாய்
| |
| − | ஆலிலைமேல் கண்வளரும் அமுதவாய்ப் பரம்பொருளே
| |
| − | நாலுமறை வேங்கடவா நாயகனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 12. செங்கமலம் போலச் சிவந்தவாய் இதழுடையாய்
| |
| − | மங்கலப்பொன் ம்ணிமாலை மார்பிலங்கு மாயவ்னே
| |
| − | எங்கள் குலத்தரசே ஏழேழ் தலைமுறைக்கும்
| |
| − | இங்குனககுச் ச்ரணங்கள் இனியவனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 13. ஆயர்குலத்(து) அணிவிளக்கே அகிலமுழு தாள்பவனே
| |
| − | காயாம்பூ நிறமுடைய கார்வ்ண்ணா உச்சிமலை
| |
| − | தோயும் முகிலுக்கும் துணையான வேங்கட்வா
| |
| − | மாயவனே எழிற்சோலை மலையழகா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 14. நீராழி உடையுடுத்த நிலப்பெண்ணாள் தினம்மருவும்
| |
| − | பேராளா எங்கள் பெருமானே பாண்டவர்க்குத்
| |
| − | தேரோட்டி உலகுய்யத் திருவருளைச் செய்தவனே
| |
| − | ஓராழி கையுடைய உத்தமனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 15. போரானைத் தோலுரித்த பூந்துழாய் மார்பனே
| |
| − | நாராயணா திருமலையின் நாயகனே செந்திருவாழ்
| |
| − | சீரார் மணிமார்பா செழுங்ககமலத் தாளுடையாய்
| |
| − | ஏராரும் சோலை இருந்தருள்வாய் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 16. சாரங்க வில்லுடையாய் சக்கரமாம் படையுடையாய்
| |
| − | போரரங்கம் புழுதிபடப் பொற்றேர் செலுத்திய்வா
| |
| − | தாரம்கொள் இராவணனைத் த்ரைமேல் கிடத்தியவா
| |
| − | பேர்ரங்கம் கிடந்திட்ட பெரியவனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 17. கற்பகக்கா தானுடைய காவ்ல்னை அந்நாளில்
| |
| − | பொற்பழித்த தானவரைப் புறங்கண்ட சேவகனே
| |
| − | வெற்பெடுத்த இராவணனை வென்றழித்த நாயகனே
| |
| − | மற்போர்செய் தோளுடைய மாதவனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 18. முப்பொழுதும் தவறாமல் முனிவரெலாம் தான்வ்ணங்கும்
| |
| − | மெப்பொருளே திருமலைவாழ் மேலவனே நின்மலர்த்தாள்
| |
| − | எப்பொழுதும் துதிக்கின்ற எமைக்காக்கும் ஏழுமலை
| |
| − | அப்பாஉன் பொன்னடிக்கே ஆயிரமாம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 19. வடமலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
| |
| − | அடலமரர தானவர்கள் ஆழிகடை வேளையிலே
| |
| − | சுடரும்பொற் குடத்தமுதைப் பங்கிடவே சோதியென
| |
| − | மடவரலாய் வந்ததிரு மலையப்பா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 20. தன்னேரில் பாரதப்போர் தான்நடக்கும் காலத்தில்
| |
| − | மின்னேர்வில் விசயனுக்கு மேலான கீதையுரை
| |
| − | சொன்னவனே அவனுக்குச் சோதிமிகு பேருருவம்
| |
| − | தன்னையே காட்டிவைத்த தக்க்வ்னே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 21. பார்விழுங்கும் கடலுக்குள் பன்றியாய்த் தான்பாய்ந்து
| |
| − | போரவுணன் திறலடக்கிப் பூமியினைத் தன்னுடைய
| |
| − | ஓர்ம்ருப்பில் தானேந்தி உலகாண்ட வேங்கடவா
| |
| − | சீர்திகழும் திருமலைவாழ் செல்வனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 22. மன்னுபுகழ்த் திருவரங்க மாமணியே பாய்ந்துவரும்
| |
| − | பொன்னிநதி அடிதழுவும் பூவடியாய் அலர்மேலு
| |
| − | மின்னிடையாள் நாயகனே மேலைநாள் குன்றெடுதத்
| |
| − | இன்னமுதே க்ண்ணா எழிற்சுடரே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 23. மாமறையும் முனிவரரும் ம்ற்றுமுள்ள் தேவர்களும்
| |
| − | பாம்ரரும் வ்ந்துபணி பரந்தாமா கோபியர்கள்
| |
| − | தாமயங்கக் குழலூதித் த்ண்ணருளைச் செய்தவனே
| |
| − | கோமகனே வேங்கடவா கும்பிட்டோம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 24. கானிடையே பசுமேய்த்த கரியமா முகிலனையாய்
| |
| − | வானமரர் தொழுதேத்த வ்ண்டரவம் செய்யல்ங்கல்
| |
| − | தானணிந்த மாலவனே மாமலராள் நாயகனே
| |
| − | தேனுடைய் மல்ர்ச்சோலைத் திருமாலே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 25. காரார் திருமேனிக் காகுத்தன் எனத்தோன்றிப்
| |
| − | போராரும் நெடுவேற் புகழிலங்கை இராவ்ண்னைத்
| |
| − | தேரோடும் முடியோடும் திருநிலத்தே தான்கிடத்தி
| |
| − | ஏராரும் அம்ரரைஈ(டு) ஏற்றியவா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 26. சித்திரப்புள் ஏறிவரும் சீரங்கா பணிவார்க்கே
| |
| − | முத்திதரும் கருநீல முகில்வண்ணா உலகளந்த
| |
| − | வித்தகனே சனகன்து வில்லறுத்த நாயகனே
| |
| − | தத்துபுகழ் வேங்கடவா தளிரடிக்கே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 27. திக்குநிறை அரக்கர்குழாம் தெருண்டோட அத்திரங்கள்
| |
| − | மிக்கபெரு மாரியென மேல்விடுத்த சேவகனே
| |
| − | தக்கபுகழ் வைதேகி தான்ம்ணந்த ம்ணவாளா
| |
| − | செக்கர்வான் என்ச்சிவந்த சேவடிக்கே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 28. வம்புலாம் நற்கூந்தல் வாட்கண்ணாள் அல்ர்மேலு
| |
| − | கொம்பனாள் த்ன்மேனி கூடியவா கூரியநல்
| |
| − | அம்பனைய க்ண்ணாள் அழகுபத் மாவதியாம்
| |
| − | செம்பொன்னாள் தனைமணந்த சேவகனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 29. ஆதிப்பிரான் நம்மாழ்வார்க்(கு) அன்றருள்செய் மால்வண்ணச்
| |
| − | சோதிப்பிரான் திருக்குருகூர்ச் சுடரிலங்கு வ்ல்லியாள்
| |
| − | கோதைப்பிரான் வ்ந்தீண்டு குடிகுடியாய் ஆட்செய்வார்
| |
| − | சாதிப்பிரான் வேங்கடவா சாதித்தோம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 30. நாடுவார்க்(கு) அருள்கின்ற ந்ம்பியுன் பாதமலர்
| |
| − | சூடுவார் ந்லம்பெறுவார் சொல்மாலை புனைந்தேத்திப்
| |
| − | பாடுவார் பதம்பெறுவார் பக்தியால் திருமலையைத்
| |
| − | தேடுவார் தமைக்காக்கும் திருப்பதியே பல்லாண்டு..
| |
| − |
| |
| − | 31. வில்லாண்ட தோள்இராமன் வித்தகனாம் அனுமனெனும்
| |
| − | சொல்லாண்ட சுந்தரன்கீழ்ச் சூழ்ந்திருக்க வலிமைமிகு
| |
| − | கலலாண்ட தோளுடையாய் காகுத்தா உன்க்கிங்கே
| |
| − | பல்லாண்டு முகில்தோயும் திருமலையா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 32. கோகுலத்தில் அந்நாளில் குடிமக்கள் இல்புகுந்து
| |
| − | பாகனைய மொழிபேசும் பாவையராம் ஆய்ச்சியர்சேர்
| |
| − | மாகுடத்துப் பால்தயிரும் மற்றிருந்த வெண்ணெயையும்
| |
| − | மோகமுட்ன் அருந்தியவா முழுமுதலே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 33. பங்கயங்கள் வாய்நெகிழப் படர்ந்தருவி தாம்முழஙகச்
| |
| − | செங்கயல்கள் துள்ளிவிழச் சிறுவண்டு ப்றந்துவ்ர
| |
| − | எங்கும் அழகுபொலி இயற்கைவளத் திருப்பதியில்
| |
| − | மங்கல்மாய் இருந்தருளும் ம்லையப்பா பல்லாண்டு
| |
| − |
| |
| − | 34. சங்கொருகை. ஏந்தியவா சக்கரமும் ஏந்தியவா
| |
| − | மங்கையாம் அல்ர்மேலு ம்கிழந்துறையும் திருமாரபா
| |
| − | தி ங்கள்போல் திருமுகத்தில் தேசுடைட வே ங்க்க்டவா
| |
| − | பொங்குபுகழ்த் திருமலைவாழ் புண்ணியனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 35. கரிய்முகில் மால்வண்ணா கஞ்சன் அனுப்பிவைத்த
| |
| − | கரியழியப் போர்செய்த காயாம்பூ மேனியனே
| |
| − | பெருகிவரும் பேரின்பப் பெருவாழ்வு தரவந்த
| |
| − | திருமலைவாழ் வேங்கடவா தெண்ட்னிட்டேன் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 36. வண்டாடும் சோலை வளைந்தாடும் செடிகொடிகள்
| |
| − | மண்டூகம் பாய்சுனைகள் மாலடிகள் தொடுகற்கள்
| |
| − | கொண்டதொரு திருமலைவாழ் கோவிந்தா கோபாலா
| |
| − | பண்டரக்கன் தலைஎடுத்த் பரந்தாமா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 37. மதகளிற்றின் கொம்பொசித்து மல்லரையும் சாய்ப்பித்து
| |
| − | நதிபொன்னி கால்வருட நமையாள்க் க்ண்வள்ர்வாய்
| |
| − | எதிராச மாமுனிவர் ஏந்துபுகழ்த் திருவரங்கா
| |
| − | கதியான வேங்கடவா கற்ப்க்மே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 38. பஞசடியாள் ந்ப்பின்னை பார்த்திடஏழ் எருதடக்கி
| |
| − | நஞ்ரவச் சிரசின்மேல் ந்டனங்கள் ஆடியவா
| |
| − | வெஞ்சிறையில் பிறந்த்வனே வெவ்வினைகள் தானகல
| |
| − | நெஞ்சிடையில் செம்பொருளாய் நிற்பவனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 39. மொய்வண்டு முகைவிரித்து முகிழ்த்ததேன் தனையருந்தி
| |
| − | மெய்மறந்து தவம்கிடக்கும் மேலான திருப்பதியில்
| |
| − | கையாழி ஏந்தியவா கமலக்கண் நாயகனே
| |
| − | அய்யா ம்லையப்பா அரங்க்னே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 40. கடல்மல்லைத் தலசயனம் கச்சியொடு திருவெக்கா
| |
| − | குடந்தையொடு விண்ணகரம் கோலமிகு திருநறையூர்
| |
| − | படர்வைகைத் திருக்கூடல் பாடகம் திருத்தண்கா
| |
| − | குடிகொண்டு திருமலைவாழ் கோவிந்தா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 41. திருவிடந்தை கரம்பனூர் திருநாகை கண்ணபுரம்
| |
| − | திருவல்லிக் கேணியொடு திருக்கடிகை திருக்கோழி
| |
| − | திருவில்லி புத்தூர் திருமோகூர் திருமெய்யம்
| |
| − | திருவனந்தை வாழ்முகிலே திருப்பதியே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 42. ஊரகம் திருச்சேறை ஓங்குபுகழ்த் திருவழுந்தூர்
| |
| − | நீரகம் சிறுபுலியூர் திருநந்தி விண்ணகரம்
| |
| − | காரகம் கள்வனூர் திருக்காழி விண்ணகரம்
| |
| − | சீரகமாய்க் கொண்டதொரு செங்கண்மால் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 43. செப்பனைய மார்புடைய சிற்றிடைசேர் ஆய்ச்கியரகள்
| |
| − | எப்பொழுதும் சூழ்ந்திருக்க இனியகுழல் ஊதியவா
| |
| − | முப்போதும் வானமரர் முன்வ்ணங்கும் முதற்பொருளே
| |
| − | உப்பிலியாய் ம்லையப்பா உன்னடிக்கே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 44. உலவுதிரைப் பாற்கடலுள் உரகமிசைக் க்ண்வள்ர்வாய்
| |
| − | பொலிவுடைய திருமேனிப் பூமகளுன் கால்வருடத்
| |
| − | தலைமுடிகள் ஆயிரத்தால் த்ரணிதனைத் தாங்குகின்ற்
| |
| − | நலமிக்க சேடனுக்கு நாயகமே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 45. போர்ப்பூமி தானதிரப் பொற்றேரை நடத்தியவா
| |
| − | தேர்பூத்த மாமுகிலே திருத்துழாய் நெடுமாலே
| |
| − | பார்காக்கப் போர்தொடுத்த பாண்ட்வர்க்கு மைத்துனனே
| |
| − | சீர்பூத்த திருமகளைச் சேரந்தவ்னே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 46. மின்னியலும் பொன்மடவார் மேதகுநல் ஆய்ச்சியர்க்ள்
| |
| − | பொன்னாடை தனைக்கவ்ர்ந்த புண்ணியனே மழைகண்ணா
| |
| − | பின்னதோர் அரியாகிப் பேரசுரன் மார்பிடந்த
| |
| − | ம்ன்னாதென் திருவரங்கா ம்லையப்பா பல்லாண்டு
| |
| − |
| |
| − | 47. மன்னுமொரு குற்ள்வடிவாய் . மாவலியைச் செற்றவனே
| |
| − | அன்னவயல் திருவாலி அமர்ந்துள்ள பெருமாளே
| |
| − | முன்னீர்க் கடல்கடந்த முகில்வண்ணா உன்பெருமை
| |
| − | என்னே எனப்புகல என்னுயிரே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 48. பூம்றைகள் தானார்த்துப் புகழ்பாடக் க்ண்வளரும்
| |
| − | தாம்ரையாள் நாயகனே தாளால் உலகளந்த
| |
| − | மாமுகிலே மழைவ்ண்ணா மணிக்க்யிற்றால் க்ட்டுண்ட
| |
| − | தாமோ த்ரனே தனிப்பொருளே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 49. தென்னன் பொதிய்மலைத் தேசுடைய சந்தனங்கள்
| |
| − | மன்னும் திருமேனி திருமால் இருஞ்சோலை
| |
| − | உன்னி உறையும் உறங்காத க்ண்ணுடையாய்
| |
| − | இன்னமுத்ப் பாற்க்ட்லின் இருநிதியே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 50. சீருண்ட் திருமேனிச் செவ்வாயான் அன்றந்த்ப்
| |
| − | பாருண்டு தாய்காணப் பார்காட்டி ஆட்கொண்டான்
| |
| − | நீருண்ட முகில்னைய நெடுமேனித் திருமாலே
| |
| − | தாருண்ட திருத்துழாய் தாங்கியவா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 61. செவ்வாய்க் குழல்கேட்ட சிற்றிடைநல் ஆய்ச்சியர்கள்
| |
| − | அவ்வாய்ச் சுவைகண்ட் அழகுடைய வெண்சங்கை
| |
| − | எவ்வாறு இருந்ததென் எண்ணியொரு வினாக்கேட்ட்
| |
| − | கொவ்வையிதழ் ஆண்டாளைக் கூடியவா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 62. தாதெல்லாம் த்ரைமலிய்த் தண்தரைமேல் நீர்நிறையக்
| |
| − | கோதிலாக் குயிலினங்கள் குழல்போல் இசைபொழிய
| |
| − | மாதரசி ந்ப்பின்னை ம்னத்துக்(கு) உகந்தவ்னே
| |
| − | போதராய் எம்மிட்த்தே பூவண்ணா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 63. விண்ணாகிக் காற்றாய் விளங்கும் அனலாகி
| |
| − | மண்ணாகி எங்கும் ம்லிபுனலாய் ஆனவ்னே
| |
| − | உண்ணேரும் ஆவியாய் உகந்திருக்கும் பெருமானே
| |
| − | கண்ணே திருமலைவாழ் க்ற்பகமே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 64. வண்டாடும் சோலை வடவேங் கடத்தானே
| |
| − | உண்டாய்நீ மண்ணென்று கோபித்த உன்தாயும்
| |
| − | கண்டாள் உலக்னைத்தும் காட்டுவாய் உன்தென்று
| |
| − | கொண்டாடித் தொழுது நித்ம் கும்பிட்டோம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 65. அவம்புரிந்து வலியிழந்த அரக்கர்கோன் த்ன்னுடைய்
| |
| − | தவமஅழித்து நிறைவாணாள் த்னையழித்து வைத்தபிரான்
| |
| − | பவமகலச் ச்ரணமலர்ப் பாதங்கள் காட்டுவாய்
| |
| − | உவணத்தாய் வேங்கடவா உத்தம்னே பல்லாண்டு
| |
| − |
| |
| − | 66. காலால் சகடத்தின். கட்டழித்த பெருமானே
| |
| − | வாலால் அன்ல்வைத்த வ்லியமகனாம் அனும்ன்
| |
| − | பாலருளைச் சுரந்திட்ட் பரந்தாமா மாவலியைக்
| |
| − | காலால் அமிழ்த்தியவா க்ருமணியே பல்லாண்டு
| |
| − |
| |
| − | 67. சங்குடையாய் கையிலொரு சாரங்க வில்லுடையாய்
| |
| − | க்ங்கைகமழ் திருவ்டியாய் க்ருடனாம் கொடியுடையாய்
| |
| − | அங்குடையாய் உன்முடிமேல் அரவிருக்க ம்ங்கையொரு
| |
| − | பங்குடையான் மைத்துனனுன் பரமபதம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 68. செஞ்சோதித் தாமரைபோல் சிவந்திருக்கும் திருவடியை
| |
| − | நசூதும் பாம்பணைமேல் நங்கைதிரு கால்வருட
| |
| − | ம்ஞ்சூதும் ந்ன்ம்ழைபோல் ம்கிழ்ந்தருளைப் பொழிந்துவரும்
| |
| − | எஞ்சோதி வேங்கடவா ஏழுமலை பல்லாண்டு
| |
| − |
| |
| − | 69. க்ண்ணனே நெடுமாலே க்விங்குருகூர்ச் சடகோபன்
| |
| − | அண்ணலே த்மிழ்மாலை ஆயிரமாய்ப் பாடிவைத்த்
| |
| − | பண்ணாரும் பாட்லுக்குப் ப்ரம்பத்ம் அருளியவா
| |
| − | தண்ணார் கருமேனித் தாம்ரையே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 70. மாமலராள் நப்பின்னை ம்ணவாளா திருவ்டியாம்
| |
| − | பூமலரைத் தலையேற்றுப் போற்றினோம் நின்னுடைய
| |
| − | நாம்ங்கள் ஓத் ந்லம்லளிக்கும். .பெருமானே
| |
| − | கோமுதலாய்க் கொண்டிட்ட கோபாலா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 71. பாகனைய சொல்லாள் பரிவுடைய யசோதை
| |
| − | வாகாய்த் தழுவியுனை வளர்த்தநாள் அசுரருக்கே
| |
| − | ஆகுலங்கள் வேளைதொறும் அருளியவா அற்றைநாள்
| |
| − | கோகுலத்தைத் தன்னிடமாய்க் கொண்டவனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 72. மாறுபகை நூற்றுவரை மாமனொடு அசுரர்களை
| |
| − | நீறுபடச் செய்தவனே நிலங்கீண்ட பெருமானே
| |
| − | ஆறுதலைச் சிவனாரின் அன்பான மைத்துனனே
| |
| − | ஏறுபுகழ்த் திருப்பதிவாழ் இனியவனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 73. மாயத்தால் ஆய்ச்சியரை மயக்கியவா பாண்டவரைத்
| |
| − | தாயத்தால் வென்றவ்ர்கள் தானழிய்த் தேர்நடத்தி
| |
| − | வேய்ன்ன தோழி வியன்நங்ககை பாஞ்சாலி
| |
| − | தூய குழல்முடிக்கத் துணையானாய் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 74. வார்புனல்சேர் அருவிநீர் வ்ழிந்தோடச் சூரிய்னார்
| |
| − | தேரேறி வ்லங்கொண்ட் திருப்பதிவாழ் பெருமானே
| |
| − | சீர்பூத்த தாமரையாம் சேவடிகள் காப்பதெனப்
| |
| − | பேர்பாடி வணங்குகிறோம் பீடுடையாய் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 75. சேலாரும் க்ண்ணாள்ந்ற் சீதைக்காய் மான்பின்னே
| |
| − | காலோய ஓடியஎம் காகுத்தா ம்ண்பொதிந்த்
| |
| − | ஞாலத்தை அன்றாண்ட நாய்கன்நீ காப்பென்றே
| |
| − | ஓலமிட்டோம் திருப்பதியாம் ஊருடையாய் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 76. திருவாலி நாட்ன் திருமங்கை ம்ன்னன்சொல்
| |
| − | திருமொழிக்கு மயங்கியவா திருவாழி சங்கமுடன்
| |
| − | அருளாழிக் க்டலாகி அல்ர்மேலுத் தாயாரை
| |
| − | ஒருமார்பில் வைத்திட்ட உடைய்வனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 77 பூரத்தில் உதித்தாளை புகழ்பாவை நூலோதிக்
| |
| − | காரொத்த மேனிதிருக் க்ண்ணனையே அடை ந்தாளைத்
| |
| − | தார்சூட்டித் தந்தவளைத் த்ன்னிடத்தில் கொண்டவனே
| |
| − | பேர்ரங்கம் உடைய்தொரு. பெரியவனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 78. தேன்மலர்சேர் காவிரிசூழ் தென்னரங்கா பக்திகொண்ட்
| |
| − | பான்மையினால் யதிராஜர் பரவிடவே அருளிய்வா
| |
| − | மேன்மையால் நின்ன்டியை மேலாக் எண்ணியவர்
| |
| − | வானாடு பெற்வைத்த வ்ள்ளலே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 79. பூந்துழாய் மார்புடைய் புண்ணியனே பொன்னாழி
| |
| − | ஏ ந்துகரம் உடையவனே இனியபத் மாவதியின்
| |
| − | பூந்துகில்மேல் மனம்வைத்த போரேறே ம்லையப்பா
| |
| − | நா த்கவாள் ஏந்தியந்ல் நாயகனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 80. தீதுடைய் கெளரவுர்கள் தீரமிக்க பாண்டவரைச்
| |
| − | சூதாலே வென்ற்வரைச் சூழ்ச்சியால் கான்போக்க்த்
| |
| − | தூதாய் நடந்தவர்க்குத் துணையான வேங்கடவா
| |
| − | பாத்மலர் தலைவைத்துப் பணிகின்றோம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − |
| |
| − | 81. கொல்வித்த பூதகியைக் கொல்வித்தாய் தூதுநீ
| |
| − | சொலலவந்த போதன்று சூழ்ச்சிபல செய்தார்க்கே
| |
| − | நல்லவழி காட்டநீ நல்லபெரு வடிவெடுத்தாய்
| |
| − | மல்லார்தோள் திருமலைவாழ் ம்லையப்பா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 82. வானளந்த காலுடையாய் வார்கடல்போல் நிறமுடையாய்
| |
| − | கானளந்த நறுந்துளவக் கவின்ம்ணக்கும தோளுடையாய்
| |
| − | மீனளந்த க்ண்ணுடையாள் மேலான அலர்மேலு
| |
| − | தானிருக்கும் மார்பனே தாயனையாய் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 83. அவரவர்க்கே உரியதனை அளந்தளிக்கும் பெருமானே
| |
| − | எவர்வரினும் அவர்பக்தி இங்குண்மை ஆனாலோ
| |
| − | உவப்புடனே அவர்மன்த்தின் உட்பொருளாய் இருபபவனே
| |
| − | தவமிக்க திருப்பதிவாழ் தனித்தேவே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 84. திருக்கோட்டி யூர்நம்பி திகழ்யமுனைத் துறைவனார்
| |
| − | திருக்கோட்;டும் பெரும்புதூர்த் திருமகனர் எதிராசர்
| |
| − | அருட்கோவில் கொண்டிருக்கும் அழகதனைக் காணவைத்தாய்
| |
| − | உருககாட்டி வேங்கடத்தில் உறைபவனே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 85. மதிஇரவி உடுக்களுடன் மற்றுமுள்ள கோளகளுக்கும்
| |
| − | அதிபதிநீ அல்லாண்ட மேனியனே அழகுபத்மா
| |
| − | வதிபதிநீ அசோதை வளர்ம்தலாய் பரமபதப்
| |
| − | பதிபுரக்கும் திருமலையே பரந்தாமா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 86. அதிர்கின்ற கடல்வண்ணா அசோதை மடியிருந்து
| |
| − | மதுரமுலை அமுதுண்டு மருதொசித்த பெருமானே
| |
| − | உதரத்தில் நான்முகனைத் தாமரைமேல் உதிக்கவைத்த
| |
| − | கதிர்முடிசேர் வேங்கடவா கருமுகிலே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 87. பங்கயங்கள் வாய்நெகிழ்ந்து பனித்துளிபோல் தேனசொரியக்
| |
| − | கொங்குண்ணும் வண்டின்ங்கள் குடித்துன்றன் புகழ்பாட
| |
| − | மங்கை அலர்மேலு ம்கிழ்ந்தணைக்கும ம்ணவாளா
| |
| − | சங்கேந்தும் வேங்கடவா சககரமால் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 88. கொத்தார் குழல்பின்னை கோவலனே என்றுன்னை
| |
| − | எத்தாலும் சேவித்தாள் இதயத்தில் உனைவைத்தாள்
| |
| − | நத்தார் புனலரவில் நடனமிட்ட நாரணனே
| |
| − | வித்தாய் இருக்கின்ற வேங்கடவா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 89. செங்கைத் தலத்தாலே சிறீதரா நீயன்று
| |
| − | துங்கப் பரிபொருந்தும் தூய்தொரு தேர்நடத்தி
| |
| − | மங்கையாள் பாஞ்சாலி மனச்சபதம் நிறைவேற்றி
| |
| − | எங்களையும் காத்துவரும் ஏழுமலை பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 90. இரவனைய நிற்முடையாய் ஏறேழும் தழுவியவா
| |
| − | அரவ்ணையாய் கோபாலா அரசுரர்களின் கூற்றுவனே
| |
| − | உரவுடைய தோளாய் உததியிலே கண்வளரும்
| |
| − | கரவ்றியா வேங்கடவா கைகுவித்தோம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 91 படஅரவில். துயில்கொள்ளும் பாற்கடலாய் சீனிவாசா
| |
| − | மடவரலாம் பாஞ்சாலி மானத்தைக் காத்தவனே
| |
| − | உடையவரும் ஆழ்வாரும் உவந்துபணி வேங்கடத்தை
| |
| − | இடமாக உடையவனே ஈடில்லாய் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 92. இனியவனே திருமகளுக்(கு) ஏற்றதுணை ஆனவனே
| |
| − | கனிசபரி தரவுண்ட காகுத்தா கைவில்லி
| |
| − | உனைவெல்ல வ்ருமவுணர் உயிர்வாங்கி வீடளித்த
| |
| − | பனித்துளவ முடியுடையாய் வேங்கடவா பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 93. ஏர்வளரும் சோலை இருந்தழ்கு செய்துவரப்
| |
| − | பார்வளரும் மாந்தர் பலர்வந்து ப்ணியுமொரு
| |
| − | சீர்கொண்ட வேங்கடவா சிலைமலர்ந்த தோளுடையாய்
| |
| − | கார்;கொண்ட மேனிக் கடவுள்மால் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 94. திருநெடுமாற்(கு) அடிமையெந்த் தினம்ப்ணியும் அடியார்கள்
| |
| − | கருமாலே ம்ணிவண்ணா கடல்கடைந்த மாயவனே
| |
| − | பெருமாளே மோகினியாய்ப் பேரமுதம் பங்கிட்ட்
| |
| − | திருமாலே வேங்கட்வா தெண்டனிட்டோம் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 95. புள்ளின்வாய் கீண்டோனே பூத்ங்க்ள் ஐந்தானாய்
| |
| − | கள்ள்ச் சகடத்தைக் காலால் உதைத்தழித்தாய்
| |
| − | வெள்ளம்போல் வ்ருகமவுண்ர் வீயநீ அம்பெய்தாய்
| |
| − | உள்ளத்தில் வேங்கடவா ஒளியானாய் பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 96. கோதை ம்ணவாளா கோவலனாய்ப் பிறந்தவனே
| |
| − | சீதை திருக்கேள்வா சிறையெடுத்த இராவணனை
| |
| − | வாதையுற்ற தேவர்களை வாழவைத்த் நாயகனே
| |
| − | தீதக்ற்றும் வேங்கடவா தேன்த்மிழால் பல்லாண்டு
| |
| − |
| |
| − | 97. முடியார் திருமலையின். முத்ற்பொருளே முன்பணியும்
| |
| − | அடியார் படுதுயரம் அழித்தருளும் பெருமானே
| |
| − | செடியான வல்வினைகள் சேர்த்தழிக்கும் உயர்கருடக்
| |
| − | கொடியானே வேங்கடவா நெடுமாலே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 98. தீதுரைத்த கெள்ரவ்ர்கள் தீமைசெயப் பாண்டவர்க்காய்த்
| |
| − | தூதுரைத்த கேசவனே துளவநறுந் தாருடையாய்
| |
| − | மாதுரைத்த சொல்லுக்காய் மாநகரம் நீங்கியவா
| |
| − | தீதறுக்கும் வேங்க்டவா திருமலையே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 99. கோட்டானைக் கொம்பொடித்தாய் குதிரையினை அடக்கிவைத்தாய்
| |
| − | தாட்டா ம்ரையாலே காளிங்கன் த்லைமிதித்தாய்
| |
| − | மாட்டாத் இராவணனை ம்ண்ணிலே விழச்செய்தாய்
| |
| − | தேட்டாளா வேங்கடவா திருமலையே பல்லாண்டு.
| |
| − |
| |
| − | 100. வில்லாண்ட தோளாய் வியந்துளவத் தாருடையாய்
| |
| − | எல்லாண்ட மேனி இனியதிரு வேங்கடவா
| |
| − | கல்லாண்ட மனத்தைக் க்ரைத்துநீ காத்தருள்க
| |
| − | சொல்லாண்ட செந்தமிழால் சொல்லிவைத்தேன் பல்லாண்டு.
| |
| | | | |
| | நிறைவுற்து - காப்பியக் க்விஞர். நா.மீன்வன் | | நிறைவுற்து - காப்பியக் க்விஞர். நா.மீன்வன் |