"ஞான ஒளி (கலீல் கிப்ரான்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
10:31, 4 ஜூன் 2012 இல் கடைசித் திருத்தம்
பவள சங்கரி
இதமான அமைதியின் ஊடே உம் இதயம் உணரும் இரகசியமாய் பகல், இரவுகளின் நீட்சி. ஆயினும் உம் செவிப்பறையின் ஏக்கமாய் உம் இதயஞான, கீதத்தின் ஓசைகள். சதாசர்வமும் உம் சிந்தையை நிறைத்திருக்கும் எண்ண அலைகள் இனிய சொற்களாய் வடிவுறும் கலையும் அறியக்கூடுமே நீவிர் உம் கனவுகளின் நிர்வாணமதை உம்முடைய விரல்கள் தீண்டும் இன்பம் பெறட்டும்.
உம்மின் ஆன்மாவினூடே புதைந்து கிடக்கும் நன்மைகள் எழுச்சியாய் விரையட்டும் முணங்குதலாய்; சாகரம் நோக்கி. கண்காணா ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அக்கருவூலம் உம் கண்களினூடே ஒளியாய் மின்னட்டும். ஆயினும் நீர் அறிந்திராத அச்செல்வங்களை அளக்கும் அளவுகோல் ஏதும் இல்லாதிருக்கட்டும்: உம் ஞானத்தின் ஆழத்தை ஊழியர்களோ அன்றி உம் உளக்குறிப்பின் ரேகையோ கொண்டு நீவிர் தேடாமல் இருப்பீராக காரணம் அளவையிலும்,கரையினுள்ளும் அடங்காத சாகரமாய் இருப்பதே அச்சுயம்.
“யாம் ஆன்மாவின் பாதையைக் கண்டோம்” என்பதைவிட “யாம் எம் பாதையின் மீது நடந்து செல்லும் அந்த ஆன்மாவை சந்தித்துவிட்டேன்” என்றே சொல்லும். காரணம் அந்த ஞாதிரு சர்வ தளங்களின் மீதும் தம் சுவடியைப் பதிக்கக் கூடியது. ஒற்றைக் கோட்டின் மீதும் நடப்பதில்லை அந்த ஞாதிரு, நானல் தளிராய் முளைப்பதும் இல்லை. எண்ணிலடங்கா இதழ்களைக் கொண்ட தாமரையாய்த் தம்மையே மலரச்செய்கிற ஞாதிரு தாமேஅது. On Self-Knowledge Your hearts know in silence the secrets of the days and the nights.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:31, 4 ஜூன் 2012 (UTC) |