| வரிசை 3: |
வரிசை 3: |
| | '''ஸ்ரீ அன்னை - சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்''' | | '''ஸ்ரீ அன்னை - சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்''' |

| − | [[Image:Img1101004041_1_1.jpg|border|center|300x300px]] | + | [[Image:Img1101004041 1 1.jpg|border|center|300x300px]] |

| | *வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள். | | *வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள். |
| வரிசை 27: |
வரிசை 27: |
| | இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருநூது தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும். | | இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருநூது தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும். |

| | + | '''* பகுத்தறிவே எஜமானனாக இருக்க வேண்டும்''' |

| − | '''* பகுத்தறிவே எஜமானனாக இருக்க வேண்டும்'''

| | + | திறமையுடன் வாழவேண்டும், உடம்பிடமிருந்து அது கொடுக்கக்கூடிய உச்ச அளவைப் பெறவேண்டும் என்றால் பகுத்தறிவே வீட்டுக்கு எஜமானனாக இருக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே கற்கத் தொடங்கிவிடுவது நல்லது. |

| − | திறமையுடன் வாழவேண்டும், உடம்பிடமிருந்து அது கொடுக்கக்கூடிய உச்ச அளவைப் பெறவேண்டும் என்றால் பகுத்தறிவே வீட்டுக்கு எஜமானனாக இருக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே கற்கத் தொடங்கிவிடுவது நல்லது.
| + | இது யோகம் அல்லது உயர் அனுபூதி பற்றிய விஷயம் அன்று. இது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும், எல்லா இடத்திலும் கற்றுத் தரவேண்டிய ஒன்று. மனிதன் மனோமய ஜீவனாக இருப்பதற்காகப் படைக்கப்பட்டவன். |

| | + | '''மலர் போல மகிழ்ச்சிப்படுத்து .''' |

| − | இது யோகம் அல்லது உயர் அனுபூதி பற்றிய விஷயம் அன்று. இது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும், எல்லா இடத்திலும் கற்றுத் தரவேண்டிய ஒன்று. மனிதன் மனோமய ஜீவனாக இருப்பதற்காகப் படைக்கப்பட்டவன்.

| + | * எத்தனை அன்பு! எத்தனை மென்மை! இனிமை! இவ்வுலகில் இருக்கின்றன. அத்தனையும் நமக்காகவே. நாம் அவற்றை நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். |

| + | * ஒரு மலரைப் போன்று இருங்கள். மலரைப் போல திறந்த வெளிப்படையான குணமும், சாந்தமும், கருணையும், அன்பும் மனதிற்குள் எழவேண்டும். |

| | + | * மலர் எப்படி தன்னிச்சையாக மலர்ந்து மணம் பரப்பி தான் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களை மகிழ்விக்கிறதோ அதுபோல ஒவ்வொருவரும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும். |

14:23, 16 மே 2011 இல் நிலவும் திருத்தம்
ஸ்ரீ அன்னை - சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
- வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள்.
- வாழ்க்கை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களுடன் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.
* உனக்குள்ளேயே விலகி நில்!
உங்களில் மிகப் பெரும்பாலோர் உங்களுடைய ஜீவனின் மேற்பரப்பிலேயே வாழ்கிறீர்கள். அதனால் புறச் செல்வாக்குகள் உங்களைத் தீண்டுவதற்கு இடமளிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலுக்கு வெளியே வாழ்வதுபோல் அவ்வளவு வெளிப்புறத்தில் வாழ்கிறீர்கள். அவ்வாறு புறத்தில் வாழும் விரும்பத்தகாத இன்னொரு ஜீவனைச் சந்திக்கும்போது கலவரமடைகிறீர்கள்.
நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே விலகி நிற்க வேண்டும். உன்னுள்ளேயே ஆழ்ந்து செல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விலகி நின்றாயானால், நீ பத்திரமாயிருப்பாய். வெளி உலகில் இயங்கிக் கொணடிருக்கும் மேலெழுந்தவாரியான சக்திகள் உன்னைப் பயன்படுத்த இடம் கொடாதே. அவசரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதிருக்கும் போது கூட சிறிது நேரம் விலகி நின்றால் எவ்வளவு குறைந்த நேரத்திலும் அதிக வெற்றிகரமாகவும் உங்களுடைய வேலையைச் செய்ய முடியும் என்பதைக்கண்டு ஆச்சரியப்படுவாய்.
யாராவது உன் மீது கோபப்பட்டால் அவனுடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நில். எந்த ஆதரவோ பதிலோ கிடைக்காததால் அவனுடைய கோபம் மறைந்து போகும், எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும்படியான சோதனைகளையெல்லாம் எதிர்த்து நில். விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்யாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் ஒரு வார்த்தையும் பேசாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் செயலில் குதிக்காதே.
சாதாரண உலகைச் சேர்ந்த எல்லாமே நிலையற்றவை, சொற்ப காலத்திற்கே இருப்பவை, ஆகவே கலவரப்படும்படியாக அதில் ஒன்றுமே இல்லை. எது நிலைத்து நிற்பதோ, எது நித்தியமானதோ, எது அமரத்தன்மை கொண்டதோ, எது அனந்தமானதோ அதுவே வென்று பெறுவதற்கு, உடைமையாக்கிக் கொள்வதற்கு, தகுதியுடையதாகும். அதுவே தெய்வ ஒளி, தெய்வ அன்பு, தெய்வ வாழ்வு - அதுவே பரம சாந்திர, பூரண மகிழ்ச்சி, புவி மீது அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துதல், அதன் சிகரம் இறைவனின் முழு வெளிப்பாடு.
இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருநூது தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும்.
* பகுத்தறிவே எஜமானனாக இருக்க வேண்டும்
திறமையுடன் வாழவேண்டும், உடம்பிடமிருந்து அது கொடுக்கக்கூடிய உச்ச அளவைப் பெறவேண்டும் என்றால் பகுத்தறிவே வீட்டுக்கு எஜமானனாக இருக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே கற்கத் தொடங்கிவிடுவது நல்லது.
இது யோகம் அல்லது உயர் அனுபூதி பற்றிய விஷயம் அன்று. இது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும், எல்லா இடத்திலும் கற்றுத் தரவேண்டிய ஒன்று. மனிதன் மனோமய ஜீவனாக இருப்பதற்காகப் படைக்கப்பட்டவன்.
மலர் போல மகிழ்ச்சிப்படுத்து .
- எத்தனை அன்பு! எத்தனை மென்மை! இனிமை! இவ்வுலகில் இருக்கின்றன. அத்தனையும் நமக்காகவே. நாம் அவற்றை நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
- ஒரு மலரைப் போன்று இருங்கள். மலரைப் போல திறந்த வெளிப்படையான குணமும், சாந்தமும், கருணையும், அன்பும் மனதிற்குள் எழவேண்டும்.
- மலர் எப்படி தன்னிச்சையாக மலர்ந்து மணம் பரப்பி தான் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர்களை மகிழ்விக்கிறதோ அதுபோல ஒவ்வொருவரும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:07, 19 ஏப்ரல் 2011 (UTC)