|
மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக இந்திய நாட்டின் அதிலும் குறிப்பாக தமிழக தொடர்பு இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்ததற்கான் சான்றுகள் பல கிடைத்திருக்கின்றன. அவ்வகையில் கிடைத்த சான்றுகளில் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல ஆலயங்கள், மண்பாண்டங்கள் ஆலய வழிபாட்டு பொருட்கள் சுவாமி விக்ரகங்கள் போன்றவையும் அடங்கும்.
பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மெர்போக் நகரில் உள்ள சிறு கிராமமான கம்போங் பெண்டாங் டாலாம் (Kampung Bendang Dalam) பகுதியில் ஒரு ஆலயம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது. இதன் பெயர் சண்டி பெண்டாங் டாலாம் என குறிக்கப்பட்டுள்ளது. « முழுக்கட்டுரை
|