"கீரை வகைகள் கொத்துமல்லிக்கீரை 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
 
(2 இடைப்பட்ட திருத்தங்கள் பயனர் செய்தவைகளை காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
பச்சைக் காய்கறிகளில் கீரை மிகவும் முக்கியமானது. உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்டது. முக்கியமாய் நல்ல மலமிளக்கியாய்ச் செயல்படுவது. இனி ஒவ்வொரு கீரையாகவும், அதன் பலன்களையும், எப்படிச் சமைப்பது என்றும் பார்க்கலாமா?  
 
<br>  
+
[[Image:Indexdhaniya.jpg|right]]<br>  
  
முதலில் நாம அலங்கரிக்கப் பயன்படுத்தும் கொத்துமல்லிக்கீரை. இதன் விதைகளே தனியா எனப்படும். சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தனியா விதைகள். அதைப் பின்னர் பார்க்கலாம். இப்போது இதன் கீரையைப் பார்ப்போம். இது தான் கொத்துமல்லிக்கீரையாகும். இதிலே விட்டமின் பி, பி12 மற்றும் விட்டமின் சி இருக்கிறது. விட்டமின் சி ஜலதோஷம் போன்ற நோய்களுக்குச் சிறந்த நிவாரணி. இந்தக் கொத்துமல்லி அனைவரு உடல்நலனுக்கும் ஏற்ற ஒன்று. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பித்தம் இருந்தால் குறையும். நாவின் ருசி கெட்டுப் போயிருந்தால் ருசியைத் தூண்டும். போதை வஸ்து அருந்தியவர்களின் போதையை நீக்கும். அதன் கடுமையும் ஓரளவு குறையும்.  
 
வரிசை 63: வரிசை 63:
 
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 09:37, 18 ஏப்ரல் 2011 (UTC)  
 
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 09:37, 18 ஏப்ரல் 2011 (UTC)  
  
[[Category:சமையல்]]
+
[[Category:சமையல்]][[Category:கீரைவகைகள்]]

11:49, 3 ஜூலை 2011 இல் கடைசித் திருத்தம்

பச்சைக் காய்கறிகளில் கீரை மிகவும் முக்கியமானது. உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்டது. முக்கியமாய் நல்ல மலமிளக்கியாய்ச் செயல்படுவது. இனி ஒவ்வொரு கீரையாகவும், அதன் பலன்களையும், எப்படிச் சமைப்பது என்றும் பார்க்கலாமா?

Indexdhaniya.jpg

முதலில் நாம அலங்கரிக்கப் பயன்படுத்தும் கொத்துமல்லிக்கீரை. இதன் விதைகளே தனியா எனப்படும். சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தனியா விதைகள். அதைப் பின்னர் பார்க்கலாம். இப்போது இதன் கீரையைப் பார்ப்போம். இது தான் கொத்துமல்லிக்கீரையாகும். இதிலே விட்டமின் பி, பி12 மற்றும் விட்டமின் சி இருக்கிறது. விட்டமின் சி ஜலதோஷம் போன்ற நோய்களுக்குச் சிறந்த நிவாரணி. இந்தக் கொத்துமல்லி அனைவரு உடல்நலனுக்கும் ஏற்ற ஒன்று. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பித்தம் இருந்தால் குறையும். நாவின் ருசி கெட்டுப் போயிருந்தால் ருசியைத் தூண்டும். போதை வஸ்து அருந்தியவர்களின் போதையை நீக்கும். அதன் கடுமையும் ஓரளவு குறையும்.

இது முகத்துக்கு அலங்கரிக்கவும் பயன்படும். இதன் சாறை முகத்தில் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளிக்கலாம். இதன் சாறை, காரட் சாறு, தக்காளிச் சாறு, பூஷணிச் சாறு, வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றோடு சேர்த்துத் தயாரித்த உடனேயே சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால் உடலில் இருக்கும் அதிகப்படிக் கொழுப்புக் கரையும். உடலில் தேவையற்ற சதைப்படலங்கள் மறையும். இதை எப்படிச் சமைப்பது?

கொத்துமல்லியை அரிசி மாவோடு சேர்த்துக்கொண்டு அக்கி அடை என்னும் அடை தயாரிக்கலாம்.

இதற்குத் தேவையான பொருட்கள்:

களைந்து சுத்தம் செய்து மிஷினிலோ அல்லது மிக்சியிலே அரைக்கப்பட்ட அரிசி மாவு ஒரு கிண்ணம். கொத்துமல்லி ஒரு சிறிய கட்டு சுத்தம் செய்து ஆய்ந்து பொடிப் பொடியாய் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் சின்னதென்றால் 100கிராம் உரித்துப் பொடியாக நறுக்கவும். பெரிதென்றால் ஒன்றோ அல்லது இரண்டோ நறுக்கிக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு. ப.மி. ஒன்றிரண்டு, இஞ்சி ஒரு துண்டு, பெருங்காயம், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்(விருப்பப் பட்டால்) எண்ணெய் பிசைய ஒரு தேக்கரண்டி, தோசைக்கல்லில் வார்த்து எடுக்க ஒரு கிண்ணம் அல்லது 100 கிராமுக்குள்.

அரிசிமாவைச் சலித்து உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும். பின்னர் நறுக்கி வைத்த வெங்காயம், கொத்துமல்லி இலையைச் சேர்க்கவும். நன்கு பிசையவும், நீர் சேர்க்கவேண்டாம். வெங்காயத்திலும், கொத்துமல்லி இலையிலும் உள்ள நீரே போதுமானது. ப.மிளகாய்ப் பொடியாக நறுக்கிக்கொண்டு அதோடு இஞ்சித் துருவலோ அல்லது பொடியாக நறுக்கியோ சேர்க்கவும். நன்கு கலந்து அரை மணி வைக்கவும்.

அடுப்பை மூட்டி அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டுச் சூடாக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தோசைக்கல்லைச் சூடாக்கவும். ஒரு வாழை இலை அல்லது நல்ல சுத்தமான ப்ளாஸ்டிக் பேப்பரில் எண்ணெயைத் தடவிக்கொண்டு எலுமிச்சம்பழ அளவுக்கு ஒரு உருண்டை மாவை எடுத்து உருட்டிக்கொண்டு கையால் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு அடை போல் தட்டவும். அப்படியே தோசைக்கல்லில் போடவும். எண்ணெய் விடவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் எடுத்துத் திருப்பிப் போடவும், மற்றொருபக்கமும் நன்கு வேகும் வரை வைத்துவிட்டு, தக்காளிச் சட்னியோடு அல்லது தேங்காய்ச் சட்னியோடு சூடாய்ப் பரிமாறவும்.

கொத்துமல்லிச் சட்னி: உலர் வகை, இது நெடுநாள் வைத்திருக்கலாம். இம்முறையில் சட்னி செய்தால் அவசரத்துக்குக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு பயன்படுத்த முடியும். மோர் சாதம் சாப்பிட ஊறுகாய் போலவும் பயன்படுத்தலாம். சாதம் பிசைந்தும் சாப்பிடலாம்.

கொத்துமல்லி இரண்டு கட்டு. புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, மிளகாய் வற்றல் பத்து முதல் பதினைந்து. கடுகு, உ.பருப்பு.

மண் போக அலம்பி சுத்தம் செய்து வேரை மட்டும் நீக்கிவிட்டுப்பொடியாக நறுக்கி ஒரு வடிதட்டில் போட்டு நீர் மொத்தமும் வடியும்படி வைக்கவும். நீர் வடிந்ததும் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, 100 கிராம் மிளகாய் வற்றலை வறுத்துக்கொள்ளவும், பெருங்காயத்தைப் பொரிக்கவும். தனியாக வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்துக்கொண்டு தனியாக வைக்கவும். முன்பெல்லாம் கல்லுரலில் போட்டு இடிப்பதே வழக்கம். தற்சமயம் யாரிடமும் கல்லுரல் இல்லை என்பதால் மிக்சியில் போட்டு அரைக்கவேண்டும்.

முதலில் மி.வத்தல், புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுப் பின்னர் நன்கு நீரை வடித்த கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து மீண்டும் மிக்சியை ஓட விடவும். காரம் அதிகம் வேண்டாம் எனில் ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்க்கலாம். பின்னர் தனியே வைத்த கடுகு, உளுத்தம்பருப்பையும் சேர்த்துவிட்டு ஒன்றிரண்டாக வரும்படி ஒரே சுற்றுச் சுற்றிவிட்டு எடுக்கவும். கடுகு, உ.பருப்பு நன்கு மசியவேண்டாம். இது நெடுநாள் வைத்திருந்து ஊறுகாய்க்கு மாற்றாக தயிர் சாதத்தோடு சாப்பிடலாம். சாதத்தில் போட்டுக்கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்தும் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளும் சைட் டிஷாகவும் பயனாகும்.

கொத்துமல்லிக்கீரைப் பச்சைச் சட்னி:

கொத்துமல்லிக்கீரை ஒரு சின்னக் கட்டு, பச்சை மிளகாய் நான்கு அல்லது ஐந்து, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு, பெருங்காயப் பொடி, விரும்பினால் இஞ்சி ஒரு சின்னத் துண்டு.
எல்லாவற்றையும் நன்கு சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அரைத்துக் கடுகு, உபருப்பு தாளிக்கவும். தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவைகளோடு சாப்பிடலாம்.

மேலே சொன்னவற்றில் கொத்துமல்லிக்கீரையைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு தேங்காய் துருவலைச் சேர்த்தும் அரைக்கலாம். அல்லது தக்காளி, சின்ன வெங்காயம் போன்றவற்றை எண்ணெயில் வதக்கிக்கொண்டு கொத்துமல்லிக்கீரை, தேங்காய் இவற்றோடு சேர்த்துக்கொண்டு கூட ஒன்றிரண்டு பச்சை மிளகாயும் சேர்த்து அரைக்கலாம்.

மிளகாய் வற்றலை எண்ணெயில் வறுத்துக்கொண்டு புளிக்குப் பதிலாக ஒன்றிரண்டு தக்காளியை எண்ணெயில் வதக்கிச் சேர்த்தும் அரைக்கலாம். இவற்றோடும் வெங்காயம் சேர்க்கலாம்.

--Geetha Sambasivam 09:37, 18 ஏப்ரல் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 3 ஜூலை 2011, 11:49 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,717 முறைகள் அணுகப்பட்டது.