"கும்பாபிஷேஹம், குடமுழுக்கு விழா! தொடர்ச்சி! 3" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்:  பந்தலின் அலங்காரத்தைக் காணலாம்.  இது யாகசாலைக்குப் போடப…)

(ஒரு இடைப்பட்ட திருத்தம் பயனர் செய்தவைகளை காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
பந்தலின் அலங்காரத்தைக் காணலாம்.  இது யாகசாலைக்குப் போடப்பட்டிருந்த பந்தல்.  இங்கே மூலவர், இரு தேவியர் தவிர, கோஷ்டத்தில் இருந்த வேணுகோபாலன், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், கருடாழ்வார் போன்றோருக்கும் சேர்த்து யாக குண்டங்கள் ஏழு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு குண்டத்திற்கும் ஒவ்வொரு பட்டாசாரியார் யாகம் செய்தார்.  நடுவிலே மூலவரின் யாக குண்டத்திற்கு அருகே கலசத்தில் ஆவாஹம் செய்யப்பட்டிருந்த கும்பம் வைக்கப்பட்டு மூலவருக்குச் செய்வது போல் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.  அதன் பின்னர் விஷ்வக்சேனருக்கும், மேதினி, விவசாயக் கருவிகள் போன்றவற்றிற்கு வழிபாடு முடிந்ததும், வாத்யத்திற்கு வழிபாடு செய்யப்பட்டது.

[[Image:DSC00758பந்தல்.JPG|center]] பந்தலின் அலங்காரத்தைக் காணலாம்.  இது யாகசாலைக்குப் போடப்பட்டிருந்த பந்தல்.  இங்கே மூலவர், இரு தேவியர் தவிர, கோஷ்டத்தில் இருந்த வேணுகோபாலன், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், கருடாழ்வார் போன்றோருக்கும் சேர்த்து யாக குண்டங்கள் ஏழு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு குண்டத்திற்கும் ஒவ்வொரு பட்டாசாரியார் யாகம் செய்தார்.  நடுவிலே மூலவரின் யாக குண்டத்திற்கு அருகே கலசத்தில் ஆவாஹம் செய்யப்பட்டிருந்த கும்பம் வைக்கப்பட்டு மூலவருக்குச் செய்வது போல் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.  அதன் பின்னர் விஷ்வக்சேனருக்கும், மேதினி, விவசாயக் கருவிகள் போன்றவற்றிற்கு வழிபாடு முடிந்ததும், வாத்யத்திற்கு வழிபாடு செய்யப்பட்டது.

[[Image:DSC00769வாத்யம்.JPG|center]]

வாத்யத்திற்கு வழிபாடு செய்வதன் முக்கியக் காரணம் திருப்பணிகள் நடக்கையில் பலதரப்பட்ட மக்கள் வந்து திருப்பணிக்கான வேலைகளைச் செய்வார்கள்.  பலதரப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டிருக்கும்.  அனைத்தையும் சுற்றி இருக்கும் தேவதைகள் கிரகித்துக்கொண்டிருக்கும்.  இப்போது கோயில் கட்டி முடிந்து மக்கள் தரிசனத்திற்குத் தயாராகும் வேளையில் கோயிலின் புனிதத் தன்மையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி தான் இது.  சுற்றி இருக்கும் தேவதைகளில் நல்லவையும் இருக்கலாம்.  பொல்லாதவையும் இருக்கலாம்.  இந்த வாத்யத்தை வழிபட்டு அதன் நாதம் மட்டும் கேட்கும்படி சற்று நேரம் வாசித்தால் அந்த நல்ல சுநாதத்தில் அதுவரை பேசிய பேச்சுக்களின் விஷத்தன்மை மறைந்து போய் துர்தேவதைகளும் மறைந்து போகும்.  இது ஒரு நம்பிக்கை.  நம்பிக்கை காரணமாகவே செய்யப்படுகிறது.

[[Image:DSC007அரணி.JPG|center]]

அடுத்துப் பார்க்கும் கருவிகள் அக்னியை உண்டாக்கப் பயன்படும் அரணிக்கட்டைகள்.  அரணிக்கட்டையைக் கடைந்து நெருப்பு உண்டாக்கித் தான் யாகம், ஹோமம் எல்லாம் செய்ய வேண்டும்.  வேறு விதத்தில் நெருப்பை உண்டாக்கக் கூடாது.  ஆனால் இப்போதெல்லாம் கற்பூரம் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டு உடனடியாக நெருப்பு உண்டாக்கப் படுகிறது.  இது யாகங்களுக்கு ஏற்றதல்ல.  இங்கே அரணியைக் கடைந்து நெருப்பு உண்டாக்குவதற்கு முன்னால் அதற்கு வழிபாடுகள் செய்து பிராரத்தித்துக்கொண்டு ஆரம்பிக்கப் போகின்றனர்.  ஆகவே முதலில் வழிபாடு.  சில சமயம் அரணியைக் கடைந்தால் உடனே நெருப்பு உண்டாகும்.  சில சமயம் புகை மட்டுமே வரும்.  நெருப்பு வராது.  சில சமயம் மணிக்கணக்காகியும் நெருப்போ, புகையோ எதுவுமே வராது.  அன்றும் பட்டாசாரியார் இதைச் சொன்னதுமே எல்லாரும் கவலையோடு காத்திருந்தோம்

[[Image:DSC00777கடைதல்.JPG|center]]

அரணிக்கட்டை இரு பட்டாசாரியார்களால் கடையப் படுகிறது.  சீக்கிரமாய் அக்னி வரப் பிரார்த்திக்கும் பக்தர்.

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 20:13, 30 நவம்பர் 2011 (UTC)

[[Category:விழா]]

[[Category:விழா]]

20:17, 30 நவம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்

DSC00758பந்தல்.JPG
பந்தலின் அலங்காரத்தைக் காணலாம்.  இது யாகசாலைக்குப் போடப்பட்டிருந்த பந்தல்.  இங்கே மூலவர், இரு தேவியர் தவிர, கோஷ்டத்தில் இருந்த வேணுகோபாலன், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், கருடாழ்வார் போன்றோருக்கும் சேர்த்து யாக குண்டங்கள் ஏழு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு குண்டத்திற்கும் ஒவ்வொரு பட்டாசாரியார் யாகம் செய்தார்.  நடுவிலே மூலவரின் யாக குண்டத்திற்கு அருகே கலசத்தில் ஆவாஹம் செய்யப்பட்டிருந்த கும்பம் வைக்கப்பட்டு மூலவருக்குச் செய்வது போல் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.  அதன் பின்னர் விஷ்வக்சேனருக்கும், மேதினி, விவசாயக் கருவிகள் போன்றவற்றிற்கு வழிபாடு முடிந்ததும், வாத்யத்திற்கு வழிபாடு செய்யப்பட்டது.
DSC00769வாத்யம்.JPG

வாத்யத்திற்கு வழிபாடு செய்வதன் முக்கியக் காரணம் திருப்பணிகள் நடக்கையில் பலதரப்பட்ட மக்கள் வந்து திருப்பணிக்கான வேலைகளைச் செய்வார்கள்.  பலதரப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டிருக்கும்.  அனைத்தையும் சுற்றி இருக்கும் தேவதைகள் கிரகித்துக்கொண்டிருக்கும்.  இப்போது கோயில் கட்டி முடிந்து மக்கள் தரிசனத்திற்குத் தயாராகும் வேளையில் கோயிலின் புனிதத் தன்மையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி தான் இது.  சுற்றி இருக்கும் தேவதைகளில் நல்லவையும் இருக்கலாம்.  பொல்லாதவையும் இருக்கலாம்.  இந்த வாத்யத்தை வழிபட்டு அதன் நாதம் மட்டும் கேட்கும்படி சற்று நேரம் வாசித்தால் அந்த நல்ல சுநாதத்தில் அதுவரை பேசிய பேச்சுக்களின் விஷத்தன்மை மறைந்து போய் துர்தேவதைகளும் மறைந்து போகும்.  இது ஒரு நம்பிக்கை.  நம்பிக்கை காரணமாகவே செய்யப்படுகிறது.

DSC007அரணி.JPG

அடுத்துப் பார்க்கும் கருவிகள் அக்னியை உண்டாக்கப் பயன்படும் அரணிக்கட்டைகள்.  அரணிக்கட்டையைக் கடைந்து நெருப்பு உண்டாக்கித் தான் யாகம், ஹோமம் எல்லாம் செய்ய வேண்டும்.  வேறு விதத்தில் நெருப்பை உண்டாக்கக் கூடாது.  ஆனால் இப்போதெல்லாம் கற்பூரம் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டு உடனடியாக நெருப்பு உண்டாக்கப் படுகிறது.  இது யாகங்களுக்கு ஏற்றதல்ல.  இங்கே அரணியைக் கடைந்து நெருப்பு உண்டாக்குவதற்கு முன்னால் அதற்கு வழிபாடுகள் செய்து பிராரத்தித்துக்கொண்டு ஆரம்பிக்கப் போகின்றனர்.  ஆகவே முதலில் வழிபாடு.  சில சமயம் அரணியைக் கடைந்தால் உடனே நெருப்பு உண்டாகும்.  சில சமயம் புகை மட்டுமே வரும்.  நெருப்பு வராது.  சில சமயம் மணிக்கணக்காகியும் நெருப்போ, புகையோ எதுவுமே வராது.  அன்றும் பட்டாசாரியார் இதைச் சொன்னதுமே எல்லாரும் கவலையோடு காத்திருந்தோம்

DSC00777கடைதல்.JPG

அரணிக்கட்டை இரு பட்டாசாரியார்களால் கடையப் படுகிறது.  சீக்கிரமாய் அக்னி வரப் பிரார்த்திக்கும் பக்தர்.

--Geetha Sambasivam 20:13, 30 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 30 நவம்பர் 2011, 20:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,561 முறைகள் அணுகப்பட்டது.