"ஜெயகாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி ("ஜெயகாந்தன்" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))
வரிசை 107: வரிசை 107:

== பகுதி 3  ==

== பகுதி 3  ==
வரிசை 201: வரிசை 201:

(அதுபற்றி அடுத்து வரும்)

== பகுதி 5 ==

07.01.2010

ஜெயகாந்தன் தன் பெயரிலேயே காந்தத்தை வைத்திருக்கின்றார். அவர் பெயரைப் பார்க்கும் பலருக்கும் பதிவை எட்டிப் பார்க்கத் தோன்றுகின்றது. அவரைப் பற்றிப் பல கோணங்களில் எழுதியுள்ளார்கள்.

சாதாரண நிலையிலும் ஒரு விஷயத்தைக் கூறினால் அவர் அதனை எவ்வளவு யதார்த்தமாக எடுத்துக் கொள்கின்றார் என்பதை உதாரணங்களுடன் கூற விரும்புகின்றேன். அவர் எழுத்துக்களைத் தொடர்ந்து ஊன்றிப் படிப்பவருக்கு எப்பொழுதாவது ஓர் அனுபவம் ஏற்படும் -“எப்படி நம்மைப் புரிந்து கொண்டு எழுதுகின்றார்” என்று. அவர் எழுத்தில் எங்கோ நம் நிழலும் பதிவாகியிருக்கும்.

தொடருக்குத் திரும்புகின்றேன்

நிருபர் நாராயணன் womens weekly, womens era போன்ற பல ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு நிருபர். எங்கள் இருவர் தொழிலுக்கும்
சம்பந்தம் இருந்தது. அவரைப்போன்று சில நிருபர்களின் வட்டத்தின் நட்பு எனக்குக் கிடைத்தது. குமுதம் அரசியல் நிருபர் பால்யூ இவர்கள் கூட்டத்திற்கு வருவதில்லை. பால்யூ தனிக்காட்டு ராஜா.ஆனாலும் எல்லோருக்கும் நண்பர். Investigation journalism தனியாக அப்பொழுது அவ்வளவு வளராதகாலம். இந்தியன் எக்ஸ்பிரஸில், வடநாட்டுப் பத்திரிகைள் சிலவற்றில் அது வளர ஆரம்பித்திருந்தது. நாட்டின் பிரதமர் இந்திரா காந்தியையே திணற அடித்தவர் கோயங்கா அவர்கள். தமிழகத்தில் இந்தப் பத்திரிகை நிருபர்களே எல்லாச் செய்திகளையும் சேகரித்து வந்தனர். எனவே நாங்கள் சந்திக்கும் பொழுது சுவையான செய்திகள் நிறையக் கிடைக்கும். என்னுடைய பணிக்காலப் பிரச்சனைகளில் எனக்குப் பக்க பலமாக இருந்தது இந்தப் பத்திரிகையுலகம் தான்.

நாராயணனுக்கு என் மீது மதிப்பு அதிகம். தன் நண்பர்களிடம் என்னைப்பற்றி நிறைய சொல்லி இருக்கின்றார். அவரால் ஆர்வமூட்டப் பட்ட பலரிடமும் என்னைக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்துவார். அப்படித்தான் ஜெமினி கணேசனின் அறிமுகம் கிடைத்தது.

நான் சென்ற அன்று பொது விஷயங்கள் நிறைய பேசினோம். காதல் பற்றிக் காதல் மன்னன் பேச, பெண்ணியம் பேசும் நான் அவர் கருத்துக்களைச் சாடினேன். நேரம் போனது தெரியவில்லை. அன்று மாலை ஜெயகாந்தன் வீட்டிற்குக் ஒரு நேரம் குறிப்பிட்டு வருவதாகச் சொல்லி இருந்தேன். எனவே விவாதத்தை இடையில் நிறுத்திப் புறப்பட முயன்றேன். காரணம் கேட்ட பொழுது போகும் இடம் சொன்னேன். உடனே அவர் கௌசல்யா புகழ் பாட ஆரம்பித்துவிட்டார். சிறந்த நடிகை மட்டுமல்ல, அறிவார்ந்த பெண் என்றும் சொன்னார்.சில சம்பவங்களைக் கூறியபொழுது அவருக்குக் கௌசல்யாவின் மேல் எவ்வளவு மதிப்பு இருக்கின்றது என்பது புரிந்தது.ஜெயகாந்தனின் கதைகள் சிலவற்றைப் பற்றி அலசிப் புகழ்ந்தார். யாரிடம் பேசினாலும் ஜெயகாந்தன் பெயரைச் சொன்னால் உடனே அவர் எழுத்தைப் பற்றிய விமர்சனம் கேட்கலாம். ஒரு காலக் கட்டத்தில் அவர் எழுத்தின் வீச்சு அப்படி எல்லை கடந்து பரவியிருந்தது.

என் தோழி புனிதமும் கௌசல்யாவைப் பற்றிப் புகழ்ந்து சொல்லி இருக்கின்றார்.புனிதவதி இளங்கோவன் சென்னை வானொலியில் வேலை பார்த்து வந்ததால் அவர்களுக்குள் நெருங்கிய தொடர்பு இருந்தது.

பிறர் கூறி அறிவதற்கு முன் நானே அவர்களுடன் பழகியதால் அவர்கள் தெளிவையும், எதையும் ஆணித்தரமாகக் சொல்லும் விதமும் கண்டு வியந்திருக்கின்றேன் .சில சமயம் ஜெயகாந்தனிடம் பேசுகின்றோமோ என்ற நினைவு கூட வந்திருக்கின்றது. கே.கே. நகர் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடன் கொஞ்ச நேரமாவது தனித்து அமர்ந்து பேசுவேன். நல்ல சிந்தனையாளர். நினைப்பது மட்டுமல்ல அதனை வெளிப்படுத்தும் முறையும் வியக்க வைக்கும். என் கணவரையும் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தியிருக்கின்றேன். அவரும் கௌசல்யாவின் சிந்தனையாற்றலையும், பேசும் தன்மையையும் புகழ்ந்திருக்கின்றார்.

ஜெயகாந்தன் அதிகமாக எழுதிக் கொண்டிருந்த காலம். அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்கும் பொழுது ஒரு கற்பனை என் மனத்தில் நிழலாடும். பாரதம் எழுத வியாசருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாசரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத வேண்டும். அதுவும் புரிந்து எழுத வேண்டும். ஜெயகாந்தனின் படைப்புகள் எதுபற்றிக் கேட்டாலும் வரிக்கு வரி கௌசல்யாவிற்குத் தெரியும். ஜெயகாந்தன் அவர்களைப் பாராட்டும் பொழுது அவருக்குப் பக்கத் துணையாயிருக்கும் கௌசல்யாவைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.

நம் நாயகர் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெற்றுப் பிழைத்து வந்தபின், அவரின் தேவை இன்னும் கூடுதலாயிற்று. பார்வையாளர்களைக் குறைத்துக் கொண்ட காலத்தில் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள அறிவுசார்ந்த ஒரு தோழமை அவசியம் வேண்டும். உடல்நலம் கருதி வெளியிலிருந்து வருபவர்களைச் சிறிது காலம் குறைத்துக் கொண்டனர். இன்று தோழியாய் இருந்து அந்த அறிவு ஜீவியைப் பாதுக்காத்து வருகின்றார். ஜெயகாந்தனைப்பற்றிப் பேசும் பொழுது அந்தப் பெண்மணியை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. தொடரிலும் அவர் பெயரைப் பதிவு செய்ய வேண்டியது என் கடமை என நினைத்தேன். இம்முறை சென்னைக்குச் சென்றால் நான், ஜெயகாந்தன், கௌசல்யா மூவர் மட்டும் உட்கார்ந்து நிறையப் பேசவேண்டும் என்று இப்பொழுதே கூறிவிட்டேன். இருவரும் சிரித்துக் கொண்டே சம்மதமும் தெரிவித்துவிட்டனர். முதியவள் நான் முணுமுணுக்க நிறையச் செய்திகள் இருக்கின்றன; அவர்களிடம் புலம்ப வேண்டும்.

இனி நம் ஜெயகாந்தனைப் பார்க்கலாம்.

திடிரென்று அவர் எழுதிய கதைகள் ஒன்றிரண்டாவது படிக்க ஆசை வந்துவிட்டது. கண்களில் முதலில் பட்டது “யுக சந்தி”

கௌரிக்குப் பத்துவயதில் திருமணம், பதினாறு வயதில் விதவை.என் பெரியம்மா மீனாட்சியம்மாளின் நினைவு வந்தது. 7 வயதில் திருமணம். 21 வயதில் விதவை. மிகவும் அழகாக இருப்பார்கள். நீண்ட கூந்தலாம். மொட்டையடித்து மூளியாக்கப் பட்டார்கள்.சாகும் பொழுது 83 வயது. 80 வயது வரை புகுந்த வீட்டில், கணவன் இல்லாத வீட்டில் கடுமையாக உழைத்தார்கள்.
81வயதானது.புகுந்த வீட்டார் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. அது ஒரு பெருங்கதை. பிறகு சொல்கின்றேன். கௌரிப்பாட்டியைப் பார்ப்போம்.

கௌரிப் பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசார வாழ்க்கை. அதாவது கட்டுப்பாடான வாழ்கை. காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகிப் பத்து மாதங்களில் விதவையாகிப் பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறி அழுத பொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்குப் பாசம் மட்டும் காரணமன்று. இறந்த காலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.

கீதா வீட்டிற்குள் முடங்காமல் படித்து ஆசிரியர் தொழில் பார்க்க அயல் ஊருக்குச் சென்ற பொழுது பாட்டியும் உடன் சென்றாள். தன் மகனைக் காண கிராமத்திற்கு வந்த பொழுதுதான் அந்தச் செய்தியை அறிகின்றாள். விதவைப் பெண் கீதா மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாள். தன் பிறந்த வீடு தன்னை ஒதுக்கிவிடும் என்பதைக் கூறி தனக்கு வாழ்வு வேண்டிச்
செல்வதை மறைக்காமல் தெரிவிக்க வேண்டியதைக் கடமையாக நினைத்துக் கடிதம் அனுப்பியிருக்கின்றாள். மேலும் கூறுவதை அப்படியே ஜே.கே அவர்களின் வார்த்தைகளில் கூற விரும்புகின்றேன் -  “உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித் திரிந்து , பிறகு அவப்பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணந்திருக்கின்றேன்”.இங்கே அவர் கருத்தாக எதையும் கூறவில்லை. அவள் நினைப்பதைக் கூறிவிடுகின்றார்.

கௌரிப்பாட்டிக்கு விதவை வாழ்க்கையின் கொடுமை தெரியும். தன் பேத்தியுடன் இருக்கப் புறப்பட்டுவிட்டாள்.

எதையும் அறிவுரையாகக் கூறமாட்டார் ஜே.கே. காட்சிகளில் உண்மை உணர்வுகள் புதைந்திருக்கும்.

என் தாயின் நினைவு வருகின்றது. வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் பொழுது நாடக மேடையில் வேற்று ஆடவன் என்னைத் தொட்டதால் என் கற்பே போய்விட்டது என்று கதறி அழுத அப்பாவி அம்மா பல வருடங்கள் கழிந்த பின்னர் அவர்கள் பார்வையின் கோணம் எப்படியிருந்தது என்பதை அடுத்துக் கூறுகின்றேன்.

என்னிடம் சில பக்குவங்கள் ஏற்பட்டதற்குக் காரணம் ஜெயகாந்தன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பின்னால் நான் கூறப்போகும் சம்பவங்களே சான்றுகளாகும் .

== பகுதி 6 ==

10.01.2010

குருவம்மா ஒரு கிராமத்துப் பெண். அவள் பட்டப்படிப்பை முடித்து என் துறையில் பணியாற்றச் சேர்ந்தாள். சில மாதங்களில் அவள் வாழ்வில் காதல் புகுந்தது. செய்தி அறிந்த அவள் தந்தை கொதிப்படைந்து அவளைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சொந்தக்காரப் பையன் ஒருவனுடன் கட்டாயத் திருமணம் செய்து முடித்துவிட்டார்.

ஒருவர் வாழ்க்கை திருமணத்துடன் முடிவடைவதில்லை. அது ஆரம்பம். பொருந்தாத திருமணம். குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை. நாளுக்கு நாள் அது அதிகமாகவும் கணவனை உதறிவிட்டாள். பெற்றவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் அவள் ஒதுங்கிய இடம் ஒரு போலீஸ் அதிகாரியின்நிழல். குருவம்மாளுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவர் திருமணமாகாதவர். யாராவது அவளை முதலில் பார்க்கின்றவர்களாக இருந்தால் “ எவ்வளவு அடக்கமான பெண். நல்ல பெண் “ என்று போற்றுவார்கள். அவர்களைத் தூற்றுவாரும் இருந்தனர்.

என் மீது அவளுக்குப் பிரியம். என்னுடன் மனம் விட்டுப் பேசுவாள். என் வீட்டிற்குத்தான் வருவாள். என் தாயாரைப் பார்க்க வருவதால் பூ வாங்கி வந்து அம்மா கையில் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்வாள். அவள் வீட்டிற்கு வரும்பொழுது சமையல் அறை சென்று ஏதாவது செய்து எடுத்து வந்து அம்மாவிற்குக் கொடுப்பாள். எங்கள் வீட்டுச் சமையலறைக்கு யாரும் செல்லலாம், சமைக்கலாம். என் அப்பாவின் காந்திக் கட்சியின் சக்தி அது. என் தாயாருக்கு அவளைப் பிடிக்கும்.

குருவம்மாள் ஒருவனைக் காதலித்தாள்; இன்னொருவனை மணந்தாள்; கட்டியவனை உதறிவிட்டு இன்னொருவனின் கையைப் பிடித்துக் கொண்டுவிட்டாள். பழங்கால
மாமியின் அபிப்பிராயம் தெரிய ஆவல் -
“ எங்க காலத்துலே பொண்களுக்கு எந்த வாழ்க்கை அமையறதோ அதுலே ஐக்கியமாயிண்டு வாழ முடிஞ்சுது. இப்போ காலம் மாறிடுத்து. கன்னா பின்னான்னு கண்டவனோட சுத்தாம யாரோ ஒருவனுடன் எப்போ வாழ ஆரம்பிச்சுட்டாளோ அப்பறம் அவளைப் பத்தி பேச என்ன இருக்கு? இப்போ மனம் ஐக்கியமா இருக்கற இடத்துலே நன்னா வாழறா” என் அம்மாவா இப்படி பேசறது?!. ஆமாம். ஓர் ஆடவன் கை பட்டால் கற்பு போச்சுன்னு அழுத அம்மாதான். இதுவே யதார்த்தம். இதுதான் நிஜம். ஒன்றில் பழகிட்ட மனசு இன்னொன்றை ஏற்றுக் கொள்வது எளிதல்ல. ஜே. கே யின் கதை கற்பனையன்று. மாற்றங்களை ஜீரணித்து வருபவர்களில் பாட்டியும் ஒருத்தி. அன்று எழுதப்பட்டவை இப்பொழுது சாதாரணமாகிவிட்டன.

ஆடையின்றி அலைந்தோமே
உண்மை ராசா உண்மை
ஆடை சுத்தி அலைஞ்சோமே
உண்மை ராசா உண்மை.
ஆடை குறச்சு அலையறோமே
உண்மை ராசா உண்மை
ஆடையையும் விட்டலைவானே
உண்மை ராசா உண்மை

இது இந்தக் கிழவியின் புலம்பல். எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதை உணர்ந்துகொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வரட்டுப் புலம்பல்களும், அசட்டு எழுத்துக்களும் வளர்ந்து வருகின்றன.

நான் ஒரு தவறு செய்துவிட்டேன். என்னைப் பற்றிச் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. “எவளோ ஒருத்தி, அந்தக்கால மனுஷி, படிச்சுட்டு அரசாங்கத்திலே
ஒரு வேலை, அதிலும் பெண்களுக்கு நல்லது செய்யற வேலையாம், மிஷின்லே தைக்கறது, எம்பிராய்டரி வேலை கத்துத் தர்ரது போல வேலை, அப்போ அப்போ எதோ கதை எழுதறது இப் படி இருக்கறவ, ஏதோ படிச்சதையெல்லாம் எழுதறா,பாவம் வயசானவ எழுதட்டும் “ இப்படி என்னைப் பற்றிப் பலரையும் நினைக்க வைத்துவிட்டேன்.

என்னைப் பற்றிய அறிமுகம் தனியாகச் செய்ய வேண்டியது என் கடமை . விரைவில் தனியாக எழுதுவேன். என் நினைவலைகள் என் பணிகளைக் காட்டும் ஒரு திறந்த வெளி. இப்பொழுது இத்தொடர்பற்றிப் பேசலாம்.

என் பணியிடம் மணம் வீசும் மலர்கள் நிறைந்த நந்தவனம் இல்லை. அது ஒரு காடு. அங்கு மான்களும் இருக்கும். சிங்கம், புலியும் இருக்கும். ஒரு லட்சத்திற்கும் மேல் பெண்கள் பணியாற்றும் துறை. தன்னையும் பாதுகாத்துக் கொண்டு பிறரையும் பாதுகாக்க வேண்டிய காலம். மனிதர்களைப் புரிந்து கொண்டால் பிரச்சனைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். என் மனத்தில் குழப்பம் ஏற்படும்பொழுது நான் தேடிச் செல்லும் இடம் ஜெயகாந்தன் குடில். அவர் எனக்கு ஒரு சுமைதாங்கியல்ல, ஓர் ஊன்றுகோல். என் தள்ளாட்டத்தை ஒடுக்கி நிமிர்த்தும் ஓர் உறுதியான ஊன்றுகோல். நான் கற்கும் பாடசாலை.

என் சுமைதாங்கிகள் மணியனும் சாவியும். துன்பமோ, இன்பமோ நான் போய்ப் புலம்பும் இடம் மணியனும் சாவியும். எனக்கு ஆறுதல் கூறி அமைதிப் படுத்துவார் சாவி. பாராட்டி ஊக்கமளிப்பார் சாவி. மணியனோ ஓடி வந்து என் துயர்களைய எல்லாம் செய்வார். பாராட்ட வேண்டிய இடத்தில் தனக்குக் கிடைத்துவிட்ட பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்வார். எங்கள் குடும்பத்தில் அவரும் ஒருவர். என் அண்ணன் மா.ரா. இளங்கோவனும், மணியனும் இல்லாமல் இருந்திருந்தால் இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். என்னைப் புரிந்து கொள்ளவே இந்த சில வரிகள்.

ஜெயகாந்தனிடமிருந்து நான் பெற்ற சக்தியை, அதனால் நான் பெற்ற தெளிவைக் காட்டச் சில சம்பவங்கள் கூறுகின்றேன். சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வளிப்பது என் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இதை அணுக, உளவியல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

குப்பனுக்கு 16 வயதிருக்கும். சுறுசுறுப்பனவன். பள்ளிப் படிப்பை முழுவதும் முடிக்கவில்லை. அவன் வாழ்க்கையில் ஒரு சம்பவம். அவனுக்குப் புதுப்பாடம் ஒருத்தி கற்றுக் கொடுத்தாள். அவளுக்கு 40 வயது. குப்பனுக்கு அது விளையாட்டாக இருந்தது. அவனுக்குப் பிடித்தும் இருந்தது. அது முதல் அது போன்ற வாய்ப்புகள் வரும் பொழுது மறுக்காமல் விளையாடிக்கொண்டிருந்தான். சில ஆண்டுகளில் கொஞ்சம் ஒதுங்க ஆரம்பித்தான். பின்னர் கொஞ்சம் ஒதுக்க ஆரம்பித்தான். தேர்வு செய்து விளையாடும் மன நிலையும் வந்தது. பின்னர் “சீ” என்று ஒதுக்கித் தள்ளவும் ஆரம்பித்துவிட்டான்.

ஜே .கே யுடன் இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது. ” தவறு என்று திருந்திவிட்டானோ ? “ என்று கேட்டேன். அவர் பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர் புரிந்தது. “குப்பன் எப்பொழுதும் சரி, தப்பு என்று நினைத்திருக்க மாட்டான். யதார்த்தமாகக் கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான். காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன. வீட்டில் இருக்கும் பெரியவர்களில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இப்படி நடப்பது கூடத் தெரியாதவர்களே அதிகம். தெரிந்தால் அவர்கள் கையாளும் விதத்தில் அவன் திருந்தலாம் அல்லது கொடூரமானவனாகவும் ஆகலாம். இது புதிதில்லை. பெரிதாக வெளியில் தெரிவதில்லை ”ஒரு மனிதனின் குணங்கள் அவர்களது பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட பல அனுபவங்களால் பாதிக்கப்படுவதுண்டு. தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அன்புடன் சாமர்த்தியமாகக் கையாள வேண்டும். “

எனக்குக் கிடைத்த சரியான படிப்பினை இது. ஏற்கனவே இயல்பாக என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. வாடிப்பட்டியில் கருப்பன் சிறையிலிருந்து வந்தவுடன் முதலில் வயிற்றுக்கு நிறைய சோறு போடுவேன். அவனைத் தூங்கச் சொல்லிவிட்டு வெளியில் சென்று அவனுக்கு இரு வேஷ்டி சட்டைகள் காசிருந்தால் வாங்குவேன்; அல்லது நண்பர்கள் வீடுகள் சென்று பழைய உடுப்புகள் வாங்கிவந்து அவனுக்குக் கொடுப்பேன்; கொஞ்சம் காசும் கொடுத்து அனுப்புவேன்.

அவன் ஒரு அடியாள். ஓர் அம்பு. எய்பவன் எவனோ? அவனுக்கு வேறு வேலை கொடுக்கவே பயந்தனர். எனவே கை, கால் வெட்டுவதே அவன் வேலை. அவனிடம் வேறு எங்காவது சென்று திருந்தி வாழச் சொல்லிக் கொண்டிருந்தேன். வாடிப்பாடியை விட்டு மாற்றலானதும் அவனைப்பற்றிய செய்தி தெரியாது.அவன் எங்கோ போய்விட்டான் என்று மட்டும் தெரியும். ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் திடீரென்று ஒரு நாள் அவன் என் வீடு வந்தான். நான் அப்பொழுது இருந்தது கோயம்புத்தூரில்; கர்ப்பமாக இருந்தேன். எனக்குப் பிரசவம் ஆகப் போகின்ற செய்தி அறிந்து பார்க்க வந்திருந்தான்.

அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியாதே தவிர அவன் என்னைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தான். இப்பொழுது வேறு ஊர் சென்று கூலி வேலை செய்து பிழைத்து வருவதாகக் கூறினான். தன் நிலையே சரியில்லாததால் திருமணம் செய்து கொள்ளவில்லையாம். எனக்கு நல்லபடியாகப் பிரசவம் ஆகிப் பிழைத்துவர பழனிக்குப் போய் வேண்டிக் கொண்டானாம். பிரசாதம் எடுத்து வந்திருந்தான். பிரசாதம் கொடுத்த அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதேன். தாயைப் போன்ற அவன் பரிவில் நான் நெகிழ்ந்தேன். பலர் மேனியைப் பதம் பார்த்த அந்தக் கைகள் என் கண்ணீரைத் துடைத்தன.மனிதன் பிறக்கும் பொழுது கெட்டவனாகப் பிறப்பதில்லை. கெட்டவனாக்கப் படுகின்றான். நல்லவனாகவும் மாற்றப்பட முடியும். ’பாவத்தை வெறு, பாபியை நேசி’ இது ஏசுநாதரின் பொன்மொழி. இராமாயணத்தை எழுத இறைவன் தேர்ந்தெடுத்தது வால்மீகியைத்தான்.
குற்றவாளிகளிடமும் குறையை மட்டுமே கண்டேன். எனவே என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. பல காரணிகளில் ஜே.கேயும் ஒருவர். காழ்ப்புணர்ச்சி வேண்டாம். மறக்க முடியவில்லையா, மன்னித்துவிடுங்கள். அடுத்து ஒரு காவியக் காட்சி காட்டப் போகின்றேன்.

[[Category:எழுத்தாளர்கள்]]

21:58, 12 ஜனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

தனது நண்பர் ஜெயகாந்தனுடன் கூடிய தனது ஞாபகங்களை கட்டுரையாக தருகிறார் சீதம்மா.

பொருளடக்கம்

சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன்

சீதாலட்சுமி - மின்னஞ்சல் முகவரி seethaalakshmi@gmail.com

பகுதி 1

21-12-2009

டாக்டர். ஜெயகாந்தன்!

பட்டம் வழங்கப் போவதாக செய்தி மட்டும்தான் வந்திருக்கின்றது. ஆனால் ஏனோ உடனே அவர் பெயருடன் டாக்டர் பட்டத்தை ஒட்டிப் பார்க்க மனம் விழைகின்றது.

பள்ளிப்படிப்பு கூட முடிக்காதாவர்.

அச்சகத்தில் அச்சு கோர்க்கும் சாதாரண தொழிலாளி.

இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே!

மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!?

இவரைப்பற்றி எழுத என் மனம் கட்டளையிட்டுவிட்டது. என் அன்புக்குரிய நண்பர். 40 ஆண்டுகால நண்பர். குடும்ப நண்பர். எத்தனை சந்திப்புகள்! நாங்கள் கழித்த பொழுதுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.ஒருகாலத்தில் எனக்குள் ஒரு ஆசை இருந்தது.

ஜான்சனைப்பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜெயகாந்தனின் உரையாடல்களைத் தொகுத்து எழுத விரும்பினேன். கையிலே டேப் ரிகார்டர் சகிதமாகச் சுற்றியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் பதிவு செய்திருக்க முடியாது. சிறு அசைவும் கூட அவரிடமிருந்து திடீரென்று வெள்ளமென வரும் வார்த்தைகளின் ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பொழுதே எழுதியிருந்தால் இந்த சமூகத்திற்கு ஓர் அரிய நூல் கிடைத்திருக்கும். இப்பொழுது என் நினைவுப் பெட்டகத்தில் தேடிப் பார்க்கும் வலுக் கூடக் குறைந்து விட்டது. இருப்பினும் தெரிவதையாவது பதிவு செய்ய வேண்டியது என் கடமையெனக் கருதுகின்றேன்.

என் நட்பு வட்டம் மிகப் பெரியது. நான் சந்தித்தவர்களில் உரையாடலில் மிகச் சிறந்தவர் ஜெயகாந்தன்.

HE IS ONE OF THE BEST CONVERSATIONALISTS IN MY LIFE. என்னைப் பற்றி நன்குணர்ந்த , எங்கள் குடும்ப நண்பர் பேராசிரியர் அரசு அவர்கள் கூறியது. ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர். ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.

“இந்த இரண்டினைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டடர்கள். அவருடன் பேசும் பொழுது அவரிடம் கண்டவைகளை, உணர்ந்தவைகளை அவருடன் பழகியவர்கள் எழுத வேண்டும். சீதாம்மா, அவர் உங்களுக்கு நீண்ட கால நண்பர். நினைவில் இருப்பவைகளைப் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் மீண்டும் எழுதத் தாமதித்துவிட்டீர்கள்.

தொடர்ந்து உங்களுடன் பழகிய பல அறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும். உங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள் “ நான் எழுதும் நினைவலைகள் பிறந்த கதை இதுதான்!

சீதாம்மாவின் குறிப்பேட்டில் இனி என்னுடன் பழகிய பலரைப்பற்றி எழுத நினைத்துள்ளேன்.

வரிசையில் முதலில் வந்துவிட்டார் ஜெயகாந்தன்.

அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று நிறைய பேசினேன், எங்களிடையே நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும், பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.பல
செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.. நாங்கள் இருவரும் அச்சமில்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். ஆடம்பரமில்லாதவர்கள்.

அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப் பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்து உண்மைகளை சத்தம் போட்டுக் கூறியவர்.

அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன. நான் செயலில் இறங்கினேன். இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.அவர் எண்னங்கள் எழுத்துக்களில் வெளிப்பட்டன

என்னுடைய பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது மனங்களில் வரைந்த சித்திரம்.  உணர்வுகள்.

என்னுடைய பணியில் எனக்குக் கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். என் சாதனைகள் என்று கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் இது.கடந்த கால நிகழ்வுகளை மனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி.

எனக்கிருக்கும் வாழ்நாட்கள் குறைவு. இருக்கும் மணித்துளிகளை உங்களுடன் கழிக்க விரும்புகின்றேன். ஆம் இப்பொழுது நான் உங்களுடன் வாழ்கின்றேன்!

பகுதி 2

23-12-2009

ஜெயகாந்தன்பற்றி எழுதுகின்றேன் என்பதைப் பார்க்கவும் நிலா ரசிகனுக்கு ஒரே குஷி !

“அம்மா, அவர் பற்றி நிறைய எழுதுங்க “

அவன் ஆர்வத்திற்கு ஓர் அர்த்தம் இருக்கின்றது. அதுவும் ஒரு கதை. சிறிது காலத்திற்கு முன்னால் ஜெயகாந்தன் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்த சமயம். செய்தி கேள்விப் பட்டவுடன் மனம் வேதனைப் பட்டது. அமெரிக்காவில் இருந்ததால் உடனே என்னால் பார்க்கச் செல்ல முடியவில்லை. ஷைலஜாவிற்குச் சொல்லி விபரங்கள் விசாரிக்கச் சொன்னேன். அவளும் விசாரித்து எனக்கு விபரங்கள் எழுதினாள்.

ஜெயகாந்தன்பற்றி ஒரு தொடர் உடனே முத்தமிழில் எழுத ஆரம்பித்தேன். ஒரு நாள் சென்னைக்கு அவர் வீட்டிற்குத் தொலைபேசியில் கூப்பிட்டேன். கவுசல்யாதான் எடுத்தார்கள், அன்றுதான் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வந்திருக்கின்றார்கள். இருப்பினும் என்னுடன் ஜெயகாந்தன் பேசினார். சரியான நேரத்தில் நான் கூப்பிட்டிருக்கின்றேன்; அது நட்பின் சக்தி. நான் பேசியது அவருக்கு மகிழ்ச்சி. அவர்பற்றி நான் எழுதுவதைத் தெரிவித்து , அது முடிந்ததும் அவருக்குக் கொடுத்தனுப்புவதாகச் சொன்னேன்

ஜெயகாந்தனுக்குக் கலைஞர் உதவி செய்ததுபற்றிப் பத்திரிகை விமர்சனங்கள் கொஞ்சம் கடுமையாக வந்திருந்தன. என் கட்டுரையில் அதற்கு நான் விளக்கம் கொடுத்து எழுதியிருந்தேன். பின்னர் அதனை அச்செடுத்து அவரிடம் சேர்த்தது நிலா ரசிகன்.

மீண்டும் ஜெயகாந்தனிடம் பேசிய பொழுது , அப்பொழுது அவர் அதனைப் படித்து முடித்திருந்ததால் அவர் உடனே சொன்னதை என்னால் மறக்க முடியவில்லை -
“சீதாலட்சுமி, இப்படி எழுத உங்களுக்குத் தான் கட்ஸ் இருக்கும்”

உண்மை பேச தைரியம் வேண்டும். இத்தொடரிலும் கடைசியில் கொஞ்சம் விளக்கமாகவே  ழுதுவேன் .இப்பொழுது நிதானத்துடன் எழுதுவதால் பல சுவையான, அர்த்தமுள்ள காட்சிகளைக் காட்ட முடியும்.

அடுத்து ஒரு நிகழ்ச்சியிலும் நிலா உடன் இருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னால் சென்னைக்கு வந்திருந்தேன். என்னால் தனியாக எங்கும் போக முடியாது. டாக்ஸியில் ஏறவும் இறங்கவும் கூட ஒருவர் என்னைப் பிடித்துக் கொள்ள வேண்டும். என்னுடன் இரு கவிஞர்கள் துணை வந்தனர். ஒருவர் நம் நிலா ரசிகன். இன்னொருவர் கவிஞர் சஹாராத் தென்றல். நிலா எனக்குச் செல்லப்பிள்ளை ; சஹாரா எனக்குச் செல்லப்பொண்ணு. என்னைக் கவனித்துக் கொள்வதில் இருவருக்கும் போட்டி

இவர்கள் யார்? எனக்கு இரத்த சம்பந்தமில்லாதவர்கள். ஆனால் என்னிடம் அவர்கள் காட்டும் பாசம் இமயத்தைப் போன்றது. இன்றும் என்னுடன் தொடர்பு கொண்டு என் நலம்பற்றி விசாரிப்பார்கள். இவர்கள் இருவருடனும் தான் ஜெயகாந்தன் வீட்டிற்குச் சென்றேன்.

எனக்கு அடுத்திருந்தது ஒருசாய்வு நாற்காலி. அதில் வந்து உட்கார்ந்தார் ஜெயகாந்தன். மற்றவர்கள் எதிரே அமர்ந்தனர். அவர் மனைவியார் வந்து நலம் விசாரித்துவிட்டுக் காபி எடுத்துவரச் சென்றார்கள். அவர் வீட்டிற்குச் செல்லும் பொழுது நானும் அவர் மனைவியும் சமயலறையருகில் உட்கார்ந்து பேசுவோம்; பின்னர்தான் ஜெயகாந்தன் இருக்கும் இடம் சென்று பேசுவேன்.
புறப்படும் முன்னர் கவுசல்யா அறைக்குச் சென்று பேசுவேன். இது அந்த நாள் வழக்கம்.

ஆனால் நாங்கள் சென்ற அன்று ஒரே அறையில் உட்கார்ந்து இருந்தோம். கவுசல்யா வந்து அமர்ந்தார். எங்கள் உரையாடல் அக்காலத்திற்குச் சென்றது.
ஜெயகாந்தன் ஒரு கேள்வி கேட்டார் -
”சீதாலட்சுமி, நாம் முதலில் சந்தித்தது எந்த வருடம்?”

”1970ல் சந்தித்தோம்”

அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவர்தான் பேசினார். இரு கவிஞர்களிடம் எங்கள் சந்திப்புகள், நாங்கள் ஊர்கள் சுற்றியது எல்லாம் விளக்கமாக அவர் கூறிவந்தார். எங்கள் சந்திப்பு, எங்கள் சுற்றுலாவிற்குப் பின்னர் அவர் என்னென்ன கதைகள் எழுதினார் என்பதைக் கவுசல்யா விளக்கிவந்தார். சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் அவர் மகன் வரவும் மாறியது.

அவர் அரசியல் பேச ஆரம்பித்தார். என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. நிலாதான் ஏதோ சமாளித்து வந்தான்.நான் ஜெயகாந்தனைப் பார்த்தேன். என் தவிப்பைப் புரிந்த அவர் “gossip” என்றார். ஆமாம், அவர் நினைத்தால் அர்த்தமற்ற பேச்சுகளுக்கிடையிலும் அவரால் அமைதியாக இருக்க முடியும்.

எனக்குள் ஒரு கேள்வி என்னை உறுத்திக் கொண்டிருந்தது. பதில் தெரிந்திருந்தும் கேள்வி உறுத்தியது; கேட்க முடியவில்லை. கேட்கும் சூழலும் இல்லை. ஆனால் அந்த வித்தகர் புரிந்து கொண்டு ஒற்றைச் சொல்லில் ஒரு வார்த்தை உதிர்த்தார். அப்படியே அதிர்ந்து போனேன்.

என் முகக் கலக்கத்தைப் பார்த்து ஒரு சின்ன முறுவல். “பரவாயில்லை” என்று அந்த முறுவலில் புரிந்து கொண்டேன்.

வெள்ளமென வார்த்தைகளையும் கொட்டுவார். ஒற்றைச் சொல்லில் பல வார்த்தைகளையும் உள்ளடக்கி வாசிக்கும் தன்மைபெற்றவர். “இன்னுமா என்னைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கேட்காமல் “பரவாயில்லை” என்று முறுவலால் பதில் கூறியவன் என் நண்பன். எத்தனை பேர்கள் இருந்தாலென்ன? எங்களுக்கிடையில் வாய்மொழி தேவையில்லை. பேசிக் கொள்ள முடியும். இந்த சக்தியை இன்னொருவரிடமும் நான் கண்டிருக்கின்றேன்.

திடீரென்று என்னை நோக்கி, “நாம் இருவரும் சேர்ந்து போய் கலைஞரைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். இப்பொழுது அவர் கேட்கக் கூடாத கேள்வி கேட்டு விட்டார். துடித்துப் போனேன்.

ஒரு காலத்தில் இருவரையும் சந்திக்க நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அன்று நான் விரும்பிய சந்திப்பு இப்பொழுது வாய்க்க இருக்கின்றது. அவர் சுலபமாக் கேட்டுவிட்டார்.

என் கண்முன் ஒரு காட்சி. கலைஞர் முன் நானும் ஜெயகாந்தனும் - எங்கள் மூவரின் மன நிலை எப்படியிருக்கும்?

(தொடரும்)

பகுதி 3

25-12-2009

கற்பனையில் காணும் காட்சிகள் சில விஷயங்களில் கற்பனையாகவே இருந்துவிடுதல் நலம்.என் இயலாமையைத் தெரிவித்துவிட்டு எழுந்து விட்டேன்.நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் காரை நோக்கி நடந்தேன். ஜெயகாந்தனும் உடன் மெதுவாக வந்தார். இருவரும் ஒன்றும் பேசவில்லை. மவுனம் சக்தி வாய்ந்த மொழி; அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

காரில் ஏறும் முன்னர் “போய்வருகின்றேன் “ என்றேன்.

”ஊருக்குப் போகும் முன் வருவீர்களா?”

”நிச்சயம் வருவேன்.”

அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி. இனிமேல் இந்தியாவிற்குத் திரும்ப வருவேனா என்று தெரியாது. ஏனோ என் நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கும் பொழுது இறுதி விடைபெறுவது போன்ற உணர்வு. அமெரிக்கா புறப்படும் முன்னர் என் கணவருடனும் புனிதத்துடனும் அவரைக் காணச் சென்றேன். கவுசல்யா உடன் இருந்தார். நல்ல கலந்துரையாடல். இந்த முறை விடை பெறும் பொழுது என் கணவர் என் கையைப் பிடித்திருந்தார்.கனத்த மனத்துடன் அங்கிருந்து புறப்பட்டேன்.

சில நாட்களுக்கு முன் அவருடன் தொலை பேசியில் பேசினேன் “குரலையாவது கேட்க முடிகின்றதே” என்றார். இதுதான் வாழ்க்கை! இதுதான் நிஜம்.

விழியனும் வேணுவும் கலந்துரைடாலுக்குப் போயிருந்ததாக வேணு எழுதியிருந்தார். ஜெயகாந்தனுடன் கலந்துரையாடல் சுவாரஸ்யமானது. பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும்.

ஜெயகாந்தனைப் பார்க்க, அவருடன் பேச பலர் வந்து போவதுண்டு; இயல்பாகப் பேசுவதும் உண்டு. ஓரிருவர் வந்தால் பேசுவதைவிடக் கூட்டமாக சிலர் இருந்தால் திடீரென்று வேகம் வந்துவிடும். காட்டாறு போல் வார்த்தைகள் வரும். எதிரே உட்கார்ந்திருப்பவர் மயங்கி உட்கார்ந்திருப்பர். பலமுறை நான் கண்ட காட்சி. எங்கிருந்து இந்த திறனைப் பெற்றார்!? அவர் புத்தகங்கள் படிப்பதை நான் பார்த்ததில்லை;எனக்கு அதுபற்றித் தெரியாது. பிள்ளைப் பருவக் கதைகள் இப்பொழுது எங்கும் காணலாம். அங்கும் அரசியல் வாடை அடிக்கின்றதே தவிர, இந்தத் தத்துவங்கள் பேச எங்கு கற்றார்?
அவர் ஒரு சுயம்பு. ஒருவேளை பூர்வ ஜென்மம் என்று
சொல்வார்களே, அப்படித் தொடர் சங்கிலியாய் வந்ததுவோ!?

மேடைப் பேச்சில் எதையாவது சொல்லிவிடுவார்; அவை பிரச்சனையாகும். நான் சொல்வது மேடைப் பேச்சையன்று. அவர் தங்குமிடத்தில் நாம் உட்கார்ந்து பேச வேண்டும்; வான் மழைக்குக் காத்திருப்பது போல் காத்திருக்க வேண்டும். அந்தச் சொல்மாரியைத் தான் புகழ்ந்துரைக்கின்றேன்.

ஜெயகாந்தனின் வீடு கே.கே. நகரில் இருக்கின்றது. முன்பு இவருக்கு இன்னொரு இடம் உண்டு. ஆழ்வார் பேட்டையில் பிள்ளையார் கோயிலுக்கு மேல் ஒரு மாடி இவருடைய இடம். காலையில் கடமைகளை முடித்துவிட்டு இங்கு வந்து விடுவார்; இரவில்தான் போவார்.

ஒரு சின்ன அறை, முன்னதாக ஒரு சின்ன ஹால்; அவ்வளவுதான். அந்த ஹாலில் ஒரு பக்கம் பாதியளவில் ஒரு சுவர்;சின்ன அறையில் ஒரு கட்டில், அதில் ஒரு விரிப்பும், ஒரு தலையணையும் இருக்கும்; ஒட்டி ஒரு நாற்காலியும் இருக்கும். இன்னொரு நாற்காலி அந்த குட்டைச் சுவர் அருகில் இருக்கும்.அதிலேதான் இவர் உட்கார்ந்திருப்பார்.

சுவரை யொட்டிக் கிழே பார்த்தால் ஒரு சின்ன சந்து; இருபக்கமும் வீடுகள். ஏழைகள் வாழும் தெரு அது; எப்பொழுதும் சத்தம் இருக்கும்; நம் நாயகனுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கும். இடுப்பில் ஒரு கைலி, மேலே சட்டை கிடையாது, ஒரு சின்னத் துண்டு. மீசையை முறுக்கிக் கொண்டு அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

ஹாலில் சிலர் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு சின்ன இடத்தில் இரு சின்ன உலகங்கள்.

ஒரு நாள் அவர்களிடம் கேட்டேன் -

“ஏன் இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்கின்றீர்கள்?”

“அம்மா, அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். அவர் பேச்சைக் கேட்கத்தான் காத்திருக்கின்றோம்”

அவர்கள் பைத்தியக்காரர்களா? ஆமாம், அறிவுப் பைத்தியம். ஜெயகாந்தனிடம் வெட்டி அரட்டையை எதிர்பார்க்க முடியுமா? இப்பொழுது அப்படிப்பட்ட காட்சிகள் கிடையாது. அவர் வீட்டின் மாடியில் கூரை வேய்ந்த இடம் இருக்கின்றது. அங்கே சந்திப்புகள் நடக்கின்றன; கலந்துரையாடல்களும் இங்கேதான்; ஆனால் அந்தக் காலத்து அதிரடிக் கச்சேரிகள் இப்பொழுது கிடையாது.

அந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அந்தக் குடிலுக்கு வருவார்கள். நாகேஷுக்கு அங்கே வருவது மிகவும் பிடிக்கும். நடிகனென்றால் அறிவுப்பசி இருக்கக்கூடாதா!?

நான் இரு இடங்களுக்கும் சென்றிருக்கின்றேன். நாங்கள் மனம்விட்டுப் பேசுவோம்; ஆன்மிகம் முதல் அரசியல் வரை பேசுவோம். சமுதாயத்துடன் உறவாடுபவள் நான்; எனக்கு உளவியல் பிடிக்கும். அவர் பார்வையும் சமுதாயத்தில்தானே இருக்கும். பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்த உணர்வுகள் இருந்ததால் நல்ல நண்பர்களாக இருக்க முடிந்தது. மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்; ஆனால் புரிந்து கொண்டு அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டால் நட்பில் விரிசல் வராது.

ஜெயகாந்தன் பார்க்கும் ஒவ்வொன்றும் அவர் கதையில் வந்துவிடும். ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கேயே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் நான் போயிருந்த பொழுது அவர் பார்வையுடன் என் பார்வையும் தொடர்ந்தது.

ஒரு பெண் தலையில் செங்கல்லைச் சுமந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். போகின்ற பாதையில் ஒரு கையால் செங்கல் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் இடுப்பில் இருக்கும் வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு போகின்ற பாதையில் சுவரில் அவள் ஏற்கனவே ஒட்டியிருந்த சுண்ணாம்பை எடுத்து நாக்கில் தடவிக் கொண்டு சென்றாள். இந்தக் காட்சியை அவர் எத்தனை முறை பார்த்திருப்பார்.! “சித்தாள் சினிமாவிற்குப் போகின்றாள் “ என்ற கதையில் இக்காட்சி வரும்; இலக்கியவாதிக்கு மண்ணும் உயிருள்ளதே!

அவருடைய கதைகள் ஒன்றிரண்டைப் பற்றிப் பேசிவிட்டுச் சில நிகழ்வுகள் கூற இருக்கின்றேன். நம் காலத்தில் வாழும் ஒரு சில அறிவு ஜீவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நம்மிடையே அந்தத் திறன் இல்லாவிட்டாலும் ரசிக்கும் திறன் இருக்கின்றதே, அதுவும் சிறப்பானதே!

(தொடரும்)

பகுதி 4

04-01-2010

அக்கினிப் பிரவேசம்

இந்தக்கதை விகடனில் வரவும் பெரிதும் பேசப்பட்டது. இந்தக்கதையின் கரு ஓர் உண்மை சம்பவத்தையொட்டியது. படைப்பாளிக்குப் பார்க்கும் ஒவ்வொன்றும் சொந்தமாகிவிடும். சின்னக் கதையுடன் மனம் திருப்தி அடையவில்லை. அதனுடைய நீட்சிதான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

எத்தனைவிதமான மனிதர்கள்! எத்தனை சூழ்நிலைகள்! அலை அலையாய் வந்து போகும் மனிதனின் அவல உணர்வுகள். கங்காவின் பஸ் பயணத்தில் அவள் அனுபவிக்கும் உரசல்களும் இடிகளும் புதிதல்ல. ஆனால் ஒரு பெண்படும் அவஸ்தையை அப்படியே நம்மையும் உணர வைத்திருப்பார். அக்காட்சியைப் படிக்கும் பொழுது எனக்கே உடலில் பூரான் ஓடுவது போன்று ஓர் அறுவறுப்பான தாக்கம். வக்கிர குணத்திற்கு அப்பனும் உடன் பிறந்தானும் கூட விதிவிலக்கில்லை.

இப்படிக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும்; இது பொதுவானதன்று. ஆனால் இது போன்ற பல புகார்கள் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நான் பார்த்த வேலை அத்தகையது.

கங்காவின் மாமாவின் செய்கைகளை வேறு யார் இப்படி எழுதியிருக்கமுடியும்? ஆனால் ஜானகிராமன் எழுதிய மோகமுள் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மோக முள் - அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்வைக் கொக்கி போட்டு வெளியே இழுத்து , அந்தத் தவிப்பை வெளிக்காட்டிய விதம் இன்றும் கதை உலகில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றது. உளவியல் கதைகளுக்கு ஆயுள் அதிகம். படிப்பவனுக்கு அவஸ்தை கொடுத்தாலும் உண்மைகள் உறங்காமல் என்றாவது கண் விழிப்பதைப் பார்க்கும் பொழுது வியக்காமல் இருக்க முடியாது. அந்தரங்கத்தைச் சுண்டி இழுப்பவை. ஜெயகாந்தனின் கதைகள் எல்லாவற்றிலும் மனிதனின் அந்தரங்கத்தைத் தோலுரித்துக் காட்டுவதைப் பார்க்கலாம். அவர் அதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்.

பெண்களுக்கு மத்தியில் ஒன்று பேசப்படுவதைக் கேட்டிருக்கின்றேன் -“சின்னப் பசங்களைக் கூட நம்பி வெளியில் போகலாம். ஆனால் கிழங்களை நம்ப முடியாது “ எல்லோரும் அப்படியல்ல; ஆனாலும் பெண் மனத்தில் அப்படி எண்ணம் வந்துவிட்டதற்கு அவள் சின்னப் பெண்ணாக இருக்கும் பொழுது வயதானவர்கள் யாராவது சில்மிஷம் செய்திருக்கலாம், அல்லது அவள் சிநேகிதிக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம், அது மனத்தில் தங்கி இப்படி ஒரு கருத்தை அவள் சுமந்து கொண்டிருக்கலாம்.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” தலைப்பே தனித்துவம் கொண்டது. இது திரைப்படமாக வந்தபொழுது , அதில் அத்தனை பாத்திரங்களும் உயிர் பெற்று நடமாடினர். குறிப்பாக லட்சுமி, கங்காவாகவே மாறிவிட்டார். பொதுவாகப் பிரபலமான கதைகள் திரைப்படமாகும் பொழுது ஒரு விமர்சனம் வரும். “கதை மாதிரி சினிமா இல்லே” ஆனால் இந்தப் படம் மட்டும் சிறப்பாக வந்திருந்தது.

கங்கா எங்கே போகின்றாள் இது பெற்ற சிறப்பைப் பெறவில்லை. ஆங்கிலத்திலும் இப்படித் தொடர் நிலையில் கதைகள் வரும்பொழுது மூன்றாவதில் தொய்வு காணலாம்.

கல்கியின் நினைவு இங்கே வருகின்றது. பார்த்திபன் கனவு எழுதினார். அதில் அவர் காட்டும் சிற்பக்கூடத்தில் பிறந்தது சிவகாமியின் சபதம். ஓவியக் கூடத்தில் பிறந்தது பொன்னியின் செல்வன். அவரே பொன்னியின் புதல்வர். நாட்டிய மங்கைக்கு உயிர் கொடுக்கவும், நரசிம்ம வர்மனை இளைஞனாக்கிக் காதலனாக்கவும் ஆசை வந்துவிட்டது. அதே போல் பார்த்திபன் வரைந்தஓவியங்களில் சோழர் காலத்துப் பெருமைகளைக் கண்டார். அவருக்குத் தெரிந்த செய்திகள் அனைத்தையும் யார் வாயிலாகவாவது பேச வைத்தார்.

எண்ணங்களைச் சுமக்கும் பொழுது எழுத்தாளன் பிரசவ வேதனையில் தவிப்பான். கோலைப் பிடித்துவிட்டால் வார்த்தைகள் குதித்தோடி வெள்ளமென வடிந்தோடும். மனித உணர்வுகளை அப்படியே ஓவியமாக்குவதில் சிறந்தவர் ஜெயகாந்தன். ஒரு கதை, இரு கதை என்று மற்றவர் எழுதியிருக்கலாம்ம். ஆனால் ஜெயகாந்தனின் கதைகளை அனைத்தும் உளவியலும், சிந்தனைத் திறனும் கலந்தவை. ஒரு மனிதரின் உணர்வுகளின் தாக்கமே ”ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்”.

அவர் எழுதிய பல கதைகள் பிறந்தவிதம் பற்றி என்னுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். எங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவாக எந்த நிகழ்வும் கிடையாது. அந்தரங்கம் புனிதமானது. ஆனாலும் தகுந்த நண்பர்கள் இருந்தால் அந்த அறையைத் திறந்து காட்டுதல் சரியே.

கௌசல்யா ஒரு படித்த பெண்மணி. வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களும் நடித்துவந்தார். மிகச் சிறந்த நடிகை. சேஷாத்ரி குழுவில் இருந்தார். இவர் நடித்த தனிக்குடித்தனம் பின்னால் கே. ஆர். விஜயா நடித்த திரைப் படமாகியது. படம் வந்த காலத்தில் கௌசல்யாவைப் போல் விஜயா அந்த அளவு சிறப்பாக நடிக்கவில்லை என்பர்.

ஜெயகாந்தனிடம் செயலாளராகப் பணியில் சேர்ந்தார் கௌசல்யா. நடிப்பையும் விடவில்லை. இரு அறிவு ஜீவிகளின் சங்கமம். ஜெயகாந்தனின் துணைவியானார். அப்பொழுதும் சில நாட்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை அழைத்துச் செல்லும் ஜெயகாந்தன் சபாக்களின் வெளியிலேயே இறக்கிவிட்டு வந்து விடுவார். நாடகங்கள் பார்க்க மாட்டார். கௌசல்யா புத்திசாலிப் பெண்மணி. அவராகவே நடிப்பதை நிறுத்திவிட்டார். ஜெயகாந்தன் அவர் நடிப்பதைத் தடுக்கவில்லை.

சில உணர்வுகள் அவர் கதையில் காணலாம்.பிறருக்கு அறிவுரை கூறுவதை விரும்ப மாட்டார் ஜெயகாந்தன். அந்த சொல்லே அவருக்குப் பிடிக்காது. பிறர் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றால் அவர் பேச்சில் அவரின் மறுப்பு இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் அவரது அணுகு முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். கேட்பவர் முதலில் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சிந்தித்துப் பார்க்கும் பொழுது பின்னர் அதன் யதார்த்தம் புரிந்துவிடும். அவரிடம் போலித்தனம் கிடையாது. முரட்டுத்தனம் உண்டு. நுனிப்புல் மேய்வதைப் போன்று படிப்பவர்களுக்கு அவர் காட்டும் பல அரிய செய்திகள் புலப்படாது. ஒவ்வொரு வரியையும் வார்த்தையையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.சில சமயங்களில் மனித உணர்வுகளின் அரிச்சுவடி ஜெயகாந்தன். பல சமயங்களில் வாழ்வியலின், சமூக இயலின் அகராதி.

சில நிகழ்வுகளைக் கூறுவேன். அவரின் பார்வையையும் விளக்குவேன். புரிந்து கொள்வீர்கள். அதற்குமுன் இன்னும் கொஞ்சம் அவர் கதையைப் பற்றிப் பேச வேண்டியிருக்கின்றது.

ஒரு நாள் நானும் என் நண்பர் நிருபர் நாராயணனும் ஜெமினி கணேசனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கே நம் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது.

பகுதி 5

07.01.2010

ஜெயகாந்தன் தன் பெயரிலேயே காந்தத்தை வைத்திருக்கின்றார். அவர் பெயரைப் பார்க்கும் பலருக்கும் பதிவை எட்டிப் பார்க்கத் தோன்றுகின்றது. அவரைப் பற்றிப் பல கோணங்களில் எழுதியுள்ளார்கள்.

சாதாரண நிலையிலும் ஒரு விஷயத்தைக் கூறினால் அவர் அதனை எவ்வளவு யதார்த்தமாக எடுத்துக் கொள்கின்றார் என்பதை உதாரணங்களுடன் கூற விரும்புகின்றேன். அவர் எழுத்துக்களைத் தொடர்ந்து ஊன்றிப் படிப்பவருக்கு எப்பொழுதாவது ஓர் அனுபவம் ஏற்படும் -“எப்படி நம்மைப் புரிந்து கொண்டு எழுதுகின்றார்” என்று. அவர் எழுத்தில் எங்கோ நம் நிழலும் பதிவாகியிருக்கும்.

தொடருக்குத் திரும்புகின்றேன்

நிருபர் நாராயணன் womens weekly, womens era போன்ற பல ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு நிருபர். எங்கள் இருவர் தொழிலுக்கும்
சம்பந்தம் இருந்தது. அவரைப்போன்று சில நிருபர்களின் வட்டத்தின் நட்பு எனக்குக் கிடைத்தது. குமுதம் அரசியல் நிருபர் பால்யூ இவர்கள் கூட்டத்திற்கு வருவதில்லை. பால்யூ தனிக்காட்டு ராஜா.ஆனாலும் எல்லோருக்கும் நண்பர். Investigation journalism தனியாக அப்பொழுது அவ்வளவு வளராதகாலம். இந்தியன் எக்ஸ்பிரஸில், வடநாட்டுப் பத்திரிகைள் சிலவற்றில் அது வளர ஆரம்பித்திருந்தது. நாட்டின் பிரதமர் இந்திரா காந்தியையே திணற அடித்தவர் கோயங்கா அவர்கள். தமிழகத்தில் இந்தப் பத்திரிகை நிருபர்களே எல்லாச் செய்திகளையும் சேகரித்து வந்தனர். எனவே நாங்கள் சந்திக்கும் பொழுது சுவையான செய்திகள் நிறையக் கிடைக்கும். என்னுடைய பணிக்காலப் பிரச்சனைகளில் எனக்குப் பக்க பலமாக இருந்தது இந்தப் பத்திரிகையுலகம் தான்.

நாராயணனுக்கு என் மீது மதிப்பு அதிகம். தன் நண்பர்களிடம் என்னைப்பற்றி நிறைய சொல்லி இருக்கின்றார். அவரால் ஆர்வமூட்டப் பட்ட பலரிடமும் என்னைக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்துவார். அப்படித்தான் ஜெமினி கணேசனின் அறிமுகம் கிடைத்தது.

நான் சென்ற அன்று பொது விஷயங்கள் நிறைய பேசினோம். காதல் பற்றிக் காதல் மன்னன் பேச, பெண்ணியம் பேசும் நான் அவர் கருத்துக்களைச் சாடினேன். நேரம் போனது தெரியவில்லை. அன்று மாலை ஜெயகாந்தன் வீட்டிற்குக் ஒரு நேரம் குறிப்பிட்டு வருவதாகச் சொல்லி இருந்தேன். எனவே விவாதத்தை இடையில் நிறுத்திப் புறப்பட முயன்றேன். காரணம் கேட்ட பொழுது போகும் இடம் சொன்னேன். உடனே அவர் கௌசல்யா புகழ் பாட ஆரம்பித்துவிட்டார். சிறந்த நடிகை மட்டுமல்ல, அறிவார்ந்த பெண் என்றும் சொன்னார்.சில சம்பவங்களைக் கூறியபொழுது அவருக்குக் கௌசல்யாவின் மேல் எவ்வளவு மதிப்பு இருக்கின்றது என்பது புரிந்தது.ஜெயகாந்தனின் கதைகள் சிலவற்றைப் பற்றி அலசிப் புகழ்ந்தார். யாரிடம் பேசினாலும் ஜெயகாந்தன் பெயரைச் சொன்னால் உடனே அவர் எழுத்தைப் பற்றிய விமர்சனம் கேட்கலாம். ஒரு காலக் கட்டத்தில் அவர் எழுத்தின் வீச்சு அப்படி எல்லை கடந்து பரவியிருந்தது.

என் தோழி புனிதமும் கௌசல்யாவைப் பற்றிப் புகழ்ந்து சொல்லி இருக்கின்றார்.புனிதவதி இளங்கோவன் சென்னை வானொலியில் வேலை பார்த்து வந்ததால் அவர்களுக்குள் நெருங்கிய தொடர்பு இருந்தது.

பிறர் கூறி அறிவதற்கு முன் நானே அவர்களுடன் பழகியதால் அவர்கள் தெளிவையும், எதையும் ஆணித்தரமாகக் சொல்லும் விதமும் கண்டு வியந்திருக்கின்றேன் .சில சமயம் ஜெயகாந்தனிடம் பேசுகின்றோமோ என்ற நினைவு கூட வந்திருக்கின்றது. கே.கே. நகர் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடன் கொஞ்ச நேரமாவது தனித்து அமர்ந்து பேசுவேன். நல்ல சிந்தனையாளர். நினைப்பது மட்டுமல்ல அதனை வெளிப்படுத்தும் முறையும் வியக்க வைக்கும். என் கணவரையும் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தியிருக்கின்றேன். அவரும் கௌசல்யாவின் சிந்தனையாற்றலையும், பேசும் தன்மையையும் புகழ்ந்திருக்கின்றார்.

ஜெயகாந்தன் அதிகமாக எழுதிக் கொண்டிருந்த காலம். அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்கும் பொழுது ஒரு கற்பனை என் மனத்தில் நிழலாடும். பாரதம் எழுத வியாசருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாசரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத வேண்டும். அதுவும் புரிந்து எழுத வேண்டும். ஜெயகாந்தனின் படைப்புகள் எதுபற்றிக் கேட்டாலும் வரிக்கு வரி கௌசல்யாவிற்குத் தெரியும். ஜெயகாந்தன் அவர்களைப் பாராட்டும் பொழுது அவருக்குப் பக்கத் துணையாயிருக்கும் கௌசல்யாவைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.

நம் நாயகர் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெற்றுப் பிழைத்து வந்தபின், அவரின் தேவை இன்னும் கூடுதலாயிற்று. பார்வையாளர்களைக் குறைத்துக் கொண்ட காலத்தில் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள அறிவுசார்ந்த ஒரு தோழமை அவசியம் வேண்டும். உடல்நலம் கருதி வெளியிலிருந்து வருபவர்களைச் சிறிது காலம் குறைத்துக் கொண்டனர். இன்று தோழியாய் இருந்து அந்த அறிவு ஜீவியைப் பாதுக்காத்து வருகின்றார். ஜெயகாந்தனைப்பற்றிப் பேசும் பொழுது அந்தப் பெண்மணியை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. தொடரிலும் அவர் பெயரைப் பதிவு செய்ய வேண்டியது என் கடமை என நினைத்தேன். இம்முறை சென்னைக்குச் சென்றால் நான், ஜெயகாந்தன், கௌசல்யா மூவர் மட்டும் உட்கார்ந்து நிறையப் பேசவேண்டும் என்று இப்பொழுதே கூறிவிட்டேன். இருவரும் சிரித்துக் கொண்டே சம்மதமும் தெரிவித்துவிட்டனர். முதியவள் நான் முணுமுணுக்க நிறையச் செய்திகள் இருக்கின்றன; அவர்களிடம் புலம்ப வேண்டும்.

இனி நம் ஜெயகாந்தனைப் பார்க்கலாம்.

திடிரென்று அவர் எழுதிய கதைகள் ஒன்றிரண்டாவது படிக்க ஆசை வந்துவிட்டது. கண்களில் முதலில் பட்டது “யுக சந்தி”

கௌரிக்குப் பத்துவயதில் திருமணம், பதினாறு வயதில் விதவை.என் பெரியம்மா மீனாட்சியம்மாளின் நினைவு வந்தது. 7 வயதில் திருமணம். 21 வயதில் விதவை. மிகவும் அழகாக இருப்பார்கள். நீண்ட கூந்தலாம். மொட்டையடித்து மூளியாக்கப் பட்டார்கள்.சாகும் பொழுது 83 வயது. 80 வயது வரை புகுந்த வீட்டில், கணவன் இல்லாத வீட்டில் கடுமையாக உழைத்தார்கள்.
81வயதானது.புகுந்த வீட்டார் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. அது ஒரு பெருங்கதை. பிறகு சொல்கின்றேன். கௌரிப்பாட்டியைப் பார்ப்போம்.

கௌரிப் பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசார வாழ்க்கை. அதாவது கட்டுப்பாடான வாழ்கை. காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகிப் பத்து மாதங்களில் விதவையாகிப் பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறி அழுத பொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்குப் பாசம் மட்டும் காரணமன்று. இறந்த காலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.

கீதா வீட்டிற்குள் முடங்காமல் படித்து ஆசிரியர் தொழில் பார்க்க அயல் ஊருக்குச் சென்ற பொழுது பாட்டியும் உடன் சென்றாள். தன் மகனைக் காண கிராமத்திற்கு வந்த பொழுதுதான் அந்தச் செய்தியை அறிகின்றாள். விதவைப் பெண் கீதா மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாள். தன் பிறந்த வீடு தன்னை ஒதுக்கிவிடும் என்பதைக் கூறி தனக்கு வாழ்வு வேண்டிச்
செல்வதை மறைக்காமல் தெரிவிக்க வேண்டியதைக் கடமையாக நினைத்துக் கடிதம் அனுப்பியிருக்கின்றாள். மேலும் கூறுவதை அப்படியே ஜே.கே அவர்களின் வார்த்தைகளில் கூற விரும்புகின்றேன் -  “உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித் திரிந்து , பிறகு அவப்பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணந்திருக்கின்றேன்”.இங்கே அவர் கருத்தாக எதையும் கூறவில்லை. அவள் நினைப்பதைக் கூறிவிடுகின்றார்.

கௌரிப்பாட்டிக்கு விதவை வாழ்க்கையின் கொடுமை தெரியும். தன் பேத்தியுடன் இருக்கப் புறப்பட்டுவிட்டாள்.

எதையும் அறிவுரையாகக் கூறமாட்டார் ஜே.கே. காட்சிகளில் உண்மை உணர்வுகள் புதைந்திருக்கும்.

என் தாயின் நினைவு வருகின்றது. வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் பொழுது நாடக மேடையில் வேற்று ஆடவன் என்னைத் தொட்டதால் என் கற்பே போய்விட்டது என்று கதறி அழுத அப்பாவி அம்மா பல வருடங்கள் கழிந்த பின்னர் அவர்கள் பார்வையின் கோணம் எப்படியிருந்தது என்பதை அடுத்துக் கூறுகின்றேன்.

என்னிடம் சில பக்குவங்கள் ஏற்பட்டதற்குக் காரணம் ஜெயகாந்தன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பின்னால் நான் கூறப்போகும் சம்பவங்களே சான்றுகளாகும் .

பகுதி 6

10.01.2010

குருவம்மா ஒரு கிராமத்துப் பெண். அவள் பட்டப்படிப்பை முடித்து என் துறையில் பணியாற்றச் சேர்ந்தாள். சில மாதங்களில் அவள் வாழ்வில் காதல் புகுந்தது. செய்தி அறிந்த அவள் தந்தை கொதிப்படைந்து அவளைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சொந்தக்காரப் பையன் ஒருவனுடன் கட்டாயத் திருமணம் செய்து முடித்துவிட்டார்.

ஒருவர் வாழ்க்கை திருமணத்துடன் முடிவடைவதில்லை. அது ஆரம்பம். பொருந்தாத திருமணம். குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை. நாளுக்கு நாள் அது அதிகமாகவும் கணவனை உதறிவிட்டாள். பெற்றவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் அவள் ஒதுங்கிய இடம் ஒரு போலீஸ் அதிகாரியின்நிழல். குருவம்மாளுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவர் திருமணமாகாதவர். யாராவது அவளை முதலில் பார்க்கின்றவர்களாக இருந்தால் “ எவ்வளவு அடக்கமான பெண். நல்ல பெண் “ என்று போற்றுவார்கள். அவர்களைத் தூற்றுவாரும் இருந்தனர்.

என் மீது அவளுக்குப் பிரியம். என்னுடன் மனம் விட்டுப் பேசுவாள். என் வீட்டிற்குத்தான் வருவாள். என் தாயாரைப் பார்க்க வருவதால் பூ வாங்கி வந்து அம்மா கையில் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்வாள். அவள் வீட்டிற்கு வரும்பொழுது சமையல் அறை சென்று ஏதாவது செய்து எடுத்து வந்து அம்மாவிற்குக் கொடுப்பாள். எங்கள் வீட்டுச் சமையலறைக்கு யாரும் செல்லலாம், சமைக்கலாம். என் அப்பாவின் காந்திக் கட்சியின் சக்தி அது. என் தாயாருக்கு அவளைப் பிடிக்கும்.

குருவம்மாள் ஒருவனைக் காதலித்தாள்; இன்னொருவனை மணந்தாள்; கட்டியவனை உதறிவிட்டு இன்னொருவனின் கையைப் பிடித்துக் கொண்டுவிட்டாள். பழங்கால
மாமியின் அபிப்பிராயம் தெரிய ஆவல் -
“ எங்க காலத்துலே பொண்களுக்கு எந்த வாழ்க்கை அமையறதோ அதுலே ஐக்கியமாயிண்டு வாழ முடிஞ்சுது. இப்போ காலம் மாறிடுத்து. கன்னா பின்னான்னு கண்டவனோட சுத்தாம யாரோ ஒருவனுடன் எப்போ வாழ ஆரம்பிச்சுட்டாளோ அப்பறம் அவளைப் பத்தி பேச என்ன இருக்கு? இப்போ மனம் ஐக்கியமா இருக்கற இடத்துலே நன்னா வாழறா” என் அம்மாவா இப்படி பேசறது?!. ஆமாம். ஓர் ஆடவன் கை பட்டால் கற்பு போச்சுன்னு அழுத அம்மாதான். இதுவே யதார்த்தம். இதுதான் நிஜம். ஒன்றில் பழகிட்ட மனசு இன்னொன்றை ஏற்றுக் கொள்வது எளிதல்ல. ஜே. கே யின் கதை கற்பனையன்று. மாற்றங்களை ஜீரணித்து வருபவர்களில் பாட்டியும் ஒருத்தி. அன்று எழுதப்பட்டவை இப்பொழுது சாதாரணமாகிவிட்டன.

ஆடையின்றி அலைந்தோமே
உண்மை ராசா உண்மை
ஆடை சுத்தி அலைஞ்சோமே
உண்மை ராசா உண்மை.
ஆடை குறச்சு அலையறோமே
உண்மை ராசா உண்மை
ஆடையையும் விட்டலைவானே
உண்மை ராசா உண்மை

இது இந்தக் கிழவியின் புலம்பல். எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதை உணர்ந்துகொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வரட்டுப் புலம்பல்களும், அசட்டு எழுத்துக்களும் வளர்ந்து வருகின்றன.

நான் ஒரு தவறு செய்துவிட்டேன். என்னைப் பற்றிச் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. “எவளோ ஒருத்தி, அந்தக்கால மனுஷி, படிச்சுட்டு அரசாங்கத்திலே
ஒரு வேலை, அதிலும் பெண்களுக்கு நல்லது செய்யற வேலையாம், மிஷின்லே தைக்கறது, எம்பிராய்டரி வேலை கத்துத் தர்ரது போல வேலை, அப்போ அப்போ எதோ கதை எழுதறது இப் படி இருக்கறவ, ஏதோ படிச்சதையெல்லாம் எழுதறா,பாவம் வயசானவ எழுதட்டும் “ இப்படி என்னைப் பற்றிப் பலரையும் நினைக்க வைத்துவிட்டேன்.

என்னைப் பற்றிய அறிமுகம் தனியாகச் செய்ய வேண்டியது என் கடமை . விரைவில் தனியாக எழுதுவேன். என் நினைவலைகள் என் பணிகளைக் காட்டும் ஒரு திறந்த வெளி. இப்பொழுது இத்தொடர்பற்றிப் பேசலாம்.

என் பணியிடம் மணம் வீசும் மலர்கள் நிறைந்த நந்தவனம் இல்லை. அது ஒரு காடு. அங்கு மான்களும் இருக்கும். சிங்கம், புலியும் இருக்கும். ஒரு லட்சத்திற்கும் மேல் பெண்கள் பணியாற்றும் துறை. தன்னையும் பாதுகாத்துக் கொண்டு பிறரையும் பாதுகாக்க வேண்டிய காலம். மனிதர்களைப் புரிந்து கொண்டால் பிரச்சனைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். என் மனத்தில் குழப்பம் ஏற்படும்பொழுது நான் தேடிச் செல்லும் இடம் ஜெயகாந்தன் குடில். அவர் எனக்கு ஒரு சுமைதாங்கியல்ல, ஓர் ஊன்றுகோல். என் தள்ளாட்டத்தை ஒடுக்கி நிமிர்த்தும் ஓர் உறுதியான ஊன்றுகோல். நான் கற்கும் பாடசாலை.

என் சுமைதாங்கிகள் மணியனும் சாவியும். துன்பமோ, இன்பமோ நான் போய்ப் புலம்பும் இடம் மணியனும் சாவியும். எனக்கு ஆறுதல் கூறி அமைதிப் படுத்துவார் சாவி. பாராட்டி ஊக்கமளிப்பார் சாவி. மணியனோ ஓடி வந்து என் துயர்களைய எல்லாம் செய்வார். பாராட்ட வேண்டிய இடத்தில் தனக்குக் கிடைத்துவிட்ட பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்வார். எங்கள் குடும்பத்தில் அவரும் ஒருவர். என் அண்ணன் மா.ரா. இளங்கோவனும், மணியனும் இல்லாமல் இருந்திருந்தால் இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். என்னைப் புரிந்து கொள்ளவே இந்த சில வரிகள்.

ஜெயகாந்தனிடமிருந்து நான் பெற்ற சக்தியை, அதனால் நான் பெற்ற தெளிவைக் காட்டச் சில சம்பவங்கள் கூறுகின்றேன். சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வளிப்பது என் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இதை அணுக, உளவியல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

குப்பனுக்கு 16 வயதிருக்கும். சுறுசுறுப்பனவன். பள்ளிப் படிப்பை முழுவதும் முடிக்கவில்லை. அவன் வாழ்க்கையில் ஒரு சம்பவம். அவனுக்குப் புதுப்பாடம் ஒருத்தி கற்றுக் கொடுத்தாள். அவளுக்கு 40 வயது. குப்பனுக்கு அது விளையாட்டாக இருந்தது. அவனுக்குப் பிடித்தும் இருந்தது. அது முதல் அது போன்ற வாய்ப்புகள் வரும் பொழுது மறுக்காமல் விளையாடிக்கொண்டிருந்தான். சில ஆண்டுகளில் கொஞ்சம் ஒதுங்க ஆரம்பித்தான். பின்னர் கொஞ்சம் ஒதுக்க ஆரம்பித்தான். தேர்வு செய்து விளையாடும் மன நிலையும் வந்தது. பின்னர் “சீ” என்று ஒதுக்கித் தள்ளவும் ஆரம்பித்துவிட்டான்.

ஜே .கே யுடன் இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது. ” தவறு என்று திருந்திவிட்டானோ ? “ என்று கேட்டேன். அவர் பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர் புரிந்தது. “குப்பன் எப்பொழுதும் சரி, தப்பு என்று நினைத்திருக்க மாட்டான். யதார்த்தமாகக் கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான். காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன. வீட்டில் இருக்கும் பெரியவர்களில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இப்படி நடப்பது கூடத் தெரியாதவர்களே அதிகம். தெரிந்தால் அவர்கள் கையாளும் விதத்தில் அவன் திருந்தலாம் அல்லது கொடூரமானவனாகவும் ஆகலாம். இது புதிதில்லை. பெரிதாக வெளியில் தெரிவதில்லை ”ஒரு மனிதனின் குணங்கள் அவர்களது பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட பல அனுபவங்களால் பாதிக்கப்படுவதுண்டு. தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அன்புடன் சாமர்த்தியமாகக் கையாள வேண்டும். “

எனக்குக் கிடைத்த சரியான படிப்பினை இது. ஏற்கனவே இயல்பாக என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. வாடிப்பட்டியில் கருப்பன் சிறையிலிருந்து வந்தவுடன் முதலில் வயிற்றுக்கு நிறைய சோறு போடுவேன். அவனைத் தூங்கச் சொல்லிவிட்டு வெளியில் சென்று அவனுக்கு இரு வேஷ்டி சட்டைகள் காசிருந்தால் வாங்குவேன்; அல்லது நண்பர்கள் வீடுகள் சென்று பழைய உடுப்புகள் வாங்கிவந்து அவனுக்குக் கொடுப்பேன்; கொஞ்சம் காசும் கொடுத்து அனுப்புவேன்.

அவன் ஒரு அடியாள். ஓர் அம்பு. எய்பவன் எவனோ? அவனுக்கு வேறு வேலை கொடுக்கவே பயந்தனர். எனவே கை, கால் வெட்டுவதே அவன் வேலை. அவனிடம் வேறு எங்காவது சென்று திருந்தி வாழச் சொல்லிக் கொண்டிருந்தேன். வாடிப்பாடியை விட்டு மாற்றலானதும் அவனைப்பற்றிய செய்தி தெரியாது.அவன் எங்கோ போய்விட்டான் என்று மட்டும் தெரியும். ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் திடீரென்று ஒரு நாள் அவன் என் வீடு வந்தான். நான் அப்பொழுது இருந்தது கோயம்புத்தூரில்; கர்ப்பமாக இருந்தேன். எனக்குப் பிரசவம் ஆகப் போகின்ற செய்தி அறிந்து பார்க்க வந்திருந்தான்.

அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியாதே தவிர அவன் என்னைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தான். இப்பொழுது வேறு ஊர் சென்று கூலி வேலை செய்து பிழைத்து வருவதாகக் கூறினான். தன் நிலையே சரியில்லாததால் திருமணம் செய்து கொள்ளவில்லையாம். எனக்கு நல்லபடியாகப் பிரசவம் ஆகிப் பிழைத்துவர பழனிக்குப் போய் வேண்டிக் கொண்டானாம். பிரசாதம் எடுத்து வந்திருந்தான். பிரசாதம் கொடுத்த அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதேன். தாயைப் போன்ற அவன் பரிவில் நான் நெகிழ்ந்தேன். பலர் மேனியைப் பதம் பார்த்த அந்தக் கைகள் என் கண்ணீரைத் துடைத்தன.மனிதன் பிறக்கும் பொழுது கெட்டவனாகப் பிறப்பதில்லை. கெட்டவனாக்கப் படுகின்றான். நல்லவனாகவும் மாற்றப்பட முடியும். ’பாவத்தை வெறு, பாபியை நேசி’ இது ஏசுநாதரின் பொன்மொழி. இராமாயணத்தை எழுத இறைவன் தேர்ந்தெடுத்தது வால்மீகியைத்தான்.
குற்றவாளிகளிடமும் குறையை மட்டுமே கண்டேன். எனவே என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. பல காரணிகளில் ஜே.கேயும் ஒருவர். காழ்ப்புணர்ச்சி வேண்டாம். மறக்க முடியவில்லையா, மன்னித்துவிடுங்கள். அடுத்து ஒரு காவியக் காட்சி காட்டப் போகின்றேன்.

பங்களிப்பாளர்கள்

Dev மற்றும் Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=ஜெயகாந்தன்&oldid=789" இருந்து மீள்விக்கப்பட்டது