"கனகாபிஷேஹம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி (சடங்குகள், கனகாபிஷேஹம் என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
 

07:51, 18 டிசம்பர் 2010 இல் கடைசித் திருத்தம்

கனகாபிஷேஹம்:

Kanakabisheham.jpg


இந்தப்புகைப்படம் 1989-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி எங்க பையரின் உபநயனத்தன்று திடீர் ஏற்பாடாக என் மாமனாருக்கும் மாமியாருக்கும் கனகாபிஷேஹம் செய்யப் பட்டபோது எடுத்த படம். பொதுவாய்க் கனகாபிஷேஹம் என்பது பிள்ளை வயிற்றில் பிறந்த ஆண் குழந்தைக்கும் திருமணம் ஆகிக் கொள்ளுப் பேரனோ, கொள்ளுப்பேத்தியோ பிறந்தால் செய்வார்கள். ஆனால் எங்க பையருக்கோ அப்போது பதினோரு வயது தான். என் பெரிய நாத்தனார் பெண்ணுக்குத் திருமணம் ஆகிக் குழந்தை பிறந்திருந்தாள். ஆகவே அதைமுன்னிறுத்தி என அப்பா ஏற்பாடு செய்தார். கனகாபிஷேஹம் ஆரம்பிக்கும் முன்னால் வைதீக சங்கல்பம் செய்துவிட்டுப் பின்னர் ஒரு சல்லடையில் அனைவரும் அவரவர் நகைகளைப் போட்டோம். தாலிச் சங்கிலி தவிர்த்த எந்த நகையை வேண்டுமானாலும் போடலாம். குடத்தில் ஜலம் நிரப்பி அதில் மந்திரங்கள் சொல்லிப் புனிதமாக்கிப் பின்னர் நகைகளோடு கூடிய சல்லடையைத் தம்பதிகள் தலை மேல் பிடித்துக்கொண்டு அபிஷேஹம் நடக்கும். அபிஷேஹப் படங்கள் வீணாகிவிட்டன. கொஞ்சம் பார்க்கும்படி இருப்பது இதுதான்.


--Geetha Sambasivam 04:07, 14 டிசம்பர் 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam மற்றும் Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=கனகாபிஷேஹம்&oldid=4177" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 18 டிசம்பர் 2010, 07:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,478 முறைகள் அணுகப்பட்டது.