"கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 34" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எட்டுத்தொகை, பத்துப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

வரிசை 1: வரிசை 1:

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் 'மக்கள் பதிப்பை' வெளியிட்டார் கலாம்

கோவிலூர் மடாதிபதி முயற்சிக்குப் பாராட்டு

சங்க இலக்கியம் எனப்படும் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'மக்கள் பதிப்பை' குடியரசுத் தலைவர் அபுதுல் கலாம் வியாழக்கிழமை வெளியிட்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் கோவிலூர் மடத்தில் 12--ஆவது பட்டமாகிய நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமையில், தமிழண்ணல், சுப. அண்ணாமலை உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மொழி, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த நிறுவனங்களைத் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் நிறுவ முயற்சி எடுத்து வருபவர் ஞானதேசிக சுவாமிகள்.

தமிழில் உள்ள பல செவ்வியல் இலக்கியங்கள் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், தொன்மை மிக்க, சங்க இலக்கியம் எனப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும்படி மக்கள் பதிப்பாக வெளியிட எண்ணினார் அவர்.

அதற்காக, தமிழண்ணல், சுப. அண்ணாமலை ஆகிய இருவரையும் பொதுப் பதிப்பாசிரியர்களாக நியமித்து, அந்நூல்களில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற பத்துப் பேராசிரியர்களைக் கொண்டு, இந்த இலக்கியத்தைக் கலைக் களஞ்சியம் போல வெளியிட்டுள்ளார்.

இவை பதினோரு தனி நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

ஞானதேசிக சுவாமிகளின் முயற்சியையும், நூல்களை எழுதிய ஆசிரியர்களையும் பாராட்டினார் குடியரசுத் தலைவர் கலாம்.

புற நானூறில், 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்ற அடியைச் சுட்டிக்காட்டி, இது போன்ற கருத்துக்கள் அடங்கிய நூல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார் கலாம்.

இந்த நூல்களின் தெளிவுரை விளக்கம் எழுதிய தமிழண்ணல், சுப. அண்ணாமலை, சிங்காரவடிவேலன், மேஜர் கதிர் மகாதேவன், தெ. முருகசாமி, இரா. இளங்குமரன், இரா. சாரங்கபாணி, ச.வே. சுப்பிரமணியன் உள்ளிட்ட 10 தமிழறிஞர்களும் கோவிலூர் மட நிர்வாகிகள் நாராயணன், மெய்யப்பன், விசாலாட்சி மெய்யப்பன் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அறிஞர்களிடம் அந்த நூல்களைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டார் கலாம்.

அத்துடன் தன்னிடம் இருந்த சில ஓலைச் சுவடிகளை அளித்து, அவற்றின் விபரங்களைக் கண்டு பிடித்து உரையாக எழுதித்தருமாறு கேட்டுக் கொண்டார்.

கோவிலூர் மடத்தைப் பற்றி விளக்கமாகக் கேட்ட கலாம், தமிழகம் வரும்போது அங்கு வருவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஞானதேசிக சுவாமிகள் கூறியதாவது:

காரைக்குடி அருகில் உள்ள கோவிலூர் மடம் 200 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது.  இங்கு அத்வைத வேதாந்தம் தமிழில் கற்பிக்கப்பட்டு வருவது இதன் தனிச்சிறப்பு.  வேதாந்தம் மட்டுமின்றி படிப்பு ஏழைகளுக்கு உதவி என சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

இங்கு வேதம், ஆகமம், சைவத் திருமுறைகள், நாதஸ்வர இசைக்கலை, தவில் ஆகியவற்றுக்குத் தனித்தனிக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது.  அத்துடன் சிற்பக் கலை, கோயில் தேர்க்கலை போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகிறது.  இக்கல்லூரிகள் அனைத்தையும் இணைத்து, கோயில் கலை பற்றிய நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில்100 மாண்டிசோரி பள்ளிகள் நிறுவ, மடத்தின் சார்பில் ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே 6 பள்ளிகள் துவங்கப்பட்டுவிட்டன என்றார் அவர்.

'தமிழில் பதிப்பாக வெளியாகியுள்ள எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை இந்தியிலும் வெளிக்கொண்டு வர நிதியுதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அப்பணிக்குச் சரியான ஒருவரை அடையாளம் காண நீங்கள் உதவ வேண்டும் என ஞானதேசிக சுவாமிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தமிழண்ணல் தெரிவித்தார்.

தினமணி, சென்னை.

மேதகு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகை

நம் கோவிலூர் திருமடத்தின் செம்பதிப்பான சங்க இலக்கிய நூல்களை 2005 ஆம் ஆண்டு அன்று புது டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நம் சுவாமிகள் மற்றும் நூல் ஆசிரியர்கள் முன்னிலையில் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தினார்கள்.  அது சமயம் நம் சுவாமிகள் மேதகு அப்துல்கலாம் அவர்களை நம் திருமடத்திற்கு வருகை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கிணங்க மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நம் திருமடத்திற்கு வருகை புரிந்தார்கள்.  நம் திருமடத்தில் நடைபெற்று வரும் அனைத்து கலைக்கல்லூரிகளின் மாணவர்கள் செய்துள்ள பொருட்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தார்கள்.  நம் இசைக்கல்லூரி மாணவர்களின்  இசைகளைக் கேட்டுப் பாராட்டினார்கள்.  நம் மழலையற் பள்ளி மாண்டிசோரிக் குழந்தைகளுடன் அளவளாவினார்கள்.

நம் சந்நிதானத்துடன் பேசிச் சிரித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து மகிழ்ந்தார்கள்.  தனது வருகை மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று கூறி நம் மாணவர்கள் யாவரையும் பாராட்டினார்கள்.  தொடர்ந்து நம் திருமடத்துடன் இணைந்து கலைகளை, மாண்டிசோரிக் கல்வியை வளர்க்க உதவுவதாகக் கூறினார்கள்.

கோவிலூர் மடத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம்

மாணவர்களிடம் திருவாசகம் பாடச் சொல்லிக் கேட்டார்.

காரைக்குடி, செப்.25 காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மடத்திற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் சென்றார்.  அங்கு மாணவர்களிடம் திருவாசகம் பாடச் சொல்லிக் கேட்டார்.

3 நாள் சுற்றுப்பயணம்

தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி அபுதுல் கலாம், முதல்நாள் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  சுற்றுப் பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று முன் தினம் கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, அன்று பிற்பகல் சொந்த ஊரான ராமேசுவரம் வந்தார்.  தொடர்ந்து தனது வீட்டிற்குச் சென்ற அப்துல் கலாம், பின்னர் மாலையில் மதுரை புறப்பட்டுச் சென்றார்.

சுற்றுப் பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வருகை தந்தார்.  காலை 8-52 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய ஜனாதிபதி அப்துல்கலாமை, தமிழக அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் சித்திக் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் வருகை தந்தார்.

கோவிலூர் மடம் வருகை

பின்னர் ஜனாதிபதியும், தமிழக கவர்னரும் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மடம் சென்றனர்.  அங்கு கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் மடாலய நிர்வாகிகள் மெய்யப்பன், நாராயணன் ஆகியோர் ஜனாதிபதியைப் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

கோவில் சார்ந்த கலைகள் அழிந்து விடாமல் இருப்பதற்காகக் கோவிலூர் மடாலயம் நடத்தி வரும் சிற்ப, இசைக்கல்லூரிகளை ஜனாதிபதி அப்துல் கலாம் பார்வையிட்டார்.  பஞ்சலோகத்தால் செய்யப்பட்டிருக்கும் சிலைகளைக் கண்டு விளக்கம் கேட்டார்.  பின்னர் அங்கு பயின்று வரும் மாணவர்களிடம் இந்தச் சிலையினை வடிவமைக்க எவ்வளவு காலம் ஆகும் என்றும் கேட்டறிந்தார்.

சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர் வாகனத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டார்.  பின் அங்கிருந்த சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு பொருளை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்கினார் அப்துல் கலாம்.

பின்னர் வேத ஆகம பாடசாலை சென்றார்.  அங்கு பயின்று வரும் மாணவர்களைச் சந்தித்து வேத சுலோகங்களைக் கூறச் சொல்லி அதைக் கேட்டார்.  பிறகு தேவாரம், திருப்புகழ் பாடிய மாணவனை அழைத்துத் திருவாசகம் தெரியுமா என்று கேட்டார்.  அந்த மாணவன் கொஞ்சம் தெரியும் என்று சொல்ல, முழுவதுமாக அதனைப் படிக்குமாறு கூறினார்.

போட்டோ எடுத்த கலாம்

பின்னர் இசைக்கல்லூரி சென்று மாணவர்கள் தவில், நாதஸ்வரம் வாசிப்பதைக் கேட்டார்.  பின் அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.  அதன் பின் குருநாதர் கோவிலூர் ஆண்டவர் நினைவிடம் சென்று மரியாதை செய்தார்.

பிறகு மடாலயத்தால் நடத்தப்பட்டு வரும் மாண்டிசோரி பள்ளிக்குச் சென்று குழந்தைகளைப் பார்த்தார்.  அங்கு செயல்முறை விளக்கக் கருவிகளாக வைக்கப்பட்டிருந்த எண்களில் 6 ஆம் எண்ணை எடுக்குமாறு ஒரு குழந்தையைக் கூற அந்தக் குழந்தை 6 ஐ சரியாக எடுத்தது.  பின் வட்டம் எடு, முக்கோணம் எடு என்று கூறிக் குழந்தைகளோடு பேசி மகிழ்ந்தார்.  மடாலயத்தில் உள்ள தஞ்சை ஓவியங்களையும் ஜனாதிபதி அப்துல்கலாம் பார்த்து ரசித்தார்.  தொடர்ந்து மடாலயம் சார்பில் சில நூல்களையும் சிறிய தேர் வாகனம் ஒன்றையும் அவருக்குப் பரிசாக அளித்தனர்.

தினத்தந்தி --  மதுரை --25-09--2006

--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:50, 4 ஜூலை 2014 (GMT)

[[பகுப்பு:கோவிலூர் ஆதீனம்]]

12:50, 4 ஜூலை 2014 இல் கடைசித் திருத்தம்

--Geetha Sambasivam (பேச்சு) 12:50, 4 ஜூலை 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூலை 2014, 12:50 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,689 முறைகள் அணுகப்பட்டது.