"கீரை ஒட்ஸ் பொரியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
17:21, 4 பெப்ரவரி 2010 இல் கடைசித் திருத்தம்கே.வீ.விக்னேஷ் எனக்கு கீரை ரொம்ப பிடிக்கும் அதுவும் தஞ்சாவூர் கும்பகோணம் பக்கத்தில் கிடைக்கும் கீரை வகைகள் ரொம்ப பிரமாதமாக இருக்கும். உங்களுக்கு விருந்து/மருந்து இங்கே.
தேவையான பொருட்கள் : கீரை – 1 கட்டு ஒட்ஸ் – 1/2 கப் எண்ணெய் – 1 தே.கரண்டி கடுகு – தாளிக்க பூண்டு – 2 பல் காய்ந்த மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு
செய்முறை :- கீரை சுத்தம் செய்து பொடியாக வெட்டி கொள்ளவும்.v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கீரை + உப்பு சேர்த்து வதக்கி, தட்டு போட்டு மூடி வேகவிடவும்.v ஒட்ஸினை ஒரு சிறிய கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் பூண்டு + காய்ந்த மிளகாய் போட்டு பொடித்து கொள்ளவும். அத்துடன் ஒட்ஸ் சேர்த்து ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும். கீரை நன்றாக வெந்தபிறகு, பொடித்த ஒட்ஸினை போட்டு மேலும் 1 நிமிடம் வதக்கவும். சுவையான கீரை ஒட்ஸ் பொரியல் ரெடி.
|