ஸப்த விடங்கத் தலங்கள் 7மரபு விக்கி இருந்து
திருச்சிற்றம்பலம்ஸப்த விடங்கத் தலங்கள் 7திருக்கோளிலி (திருக்குவளை) இறைவர் பெயர்: கோளிலி நாதர், பிரமபுரீசுவரர்
தீர்த்தம் பிரம தீர்த்தம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும்.
விடங்கர்: அவனி விடங்கர். நடனம் பிருங்க நடனம். வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது பிருங்கநடனம் எனப்படும்.
வழிபட்டோர்:பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவகிரஹங்கள், அகத்தியர், முசுகுந்தன், ஹேமகாந்த மன்னன் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்:சம்பந்தர்: நாளாய போகாமே நஞ்சணியுங் (667-677)
அப்பர்: மைக்கொள் கண்ணுமை (563-572)
சுந்தரர்: நீள நினைந்தடி யேனுமை(199-208)
மூலவர் கோளிலி நாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாய்க் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) அருள் பாலிக்கிறார்.
நவகிரஹங்கள் அனைவரும் இங்கே தென்முகம் பார்த்து வீற்றிருந்து அருள் பாலிப்பது சிறப்பாகும். நவகிரஹங்களின் குற்றங்களை நீக்கி அருள் புரிந்ததால் கோளிலி நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. கோளிலி நாதரை வழிபட்டால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் இருக்கும் நவகிரஹ தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள்- சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன.
கல்வெட்டுக்களில் இறைவன் "திருக்கோளிலி உடைய நாயனார்" என்றும் , "தியாகேசர்" அவனிவிடங்கத் தியாகர் " என்றும் குறிப்பிடப் பட்டுள்ளார்.
அமைவிடம்:திருவாரூர்-எட்டுக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம்; திருவாரூரில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.
தரிசன நேரம்:மு.ப. 6.00-12.00 பி.ப. 4.30-8.30
--Geetha Sambasivam 07:52, 4 டிசம்பர் 2010 (UTC)
|



