மகாவீரர் - மலர் போல பேசு!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

* மகாவீரர் - மலர் போல பேசு!


                                                                                
Tblanmegamideanews 1682680846.jpg
 


  • கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்ற வர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்?


  • நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.

  நல்லதையே சிந்திப்போம்


  • நல்லவர்களிடம் நட்பு, இனிய சொற்கள் பேசுதல், எளியவர்களுக்கு உதவுதல், மனத்தூய்மை, நல்ல குணங்கள் ஆகியவை மேன்மக்களிடம் அமைந்திருக்கும் குணங்கள்.
  • நாம் வாழ்கின்ற நாட்களும் நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு வாழும் ஒவ்வொரு நொடியும் நேர்மையான ஆன்மிக நாட்டம் உள்ளவர்களாக வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்வாகும்.
  • ஆயுட்காலம் மிகக் குறைவே. எனவே, குறைபாடுகளை உதறிவிட்டு நல்ல வழியில் செல்லுங்கள். சுற்றி வளைந்து செல்லும் பாதையிலிருந்து விலகி விடுங்கள்.
  • பிறரை இகழ்வதும் பழிப்பதும் கோபமாகப் பேசுவதும் தீமையையே விளைவிக்கும். மேலும் பிறரை இகழ்ந்து பேசுபவர்களை உலகம் பழிக்கும்.
  • பாவங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில் தயக்கம் கூடாது. பாவம் செய்தது நாம் தானே! செய்த பாவத்தை ஒத்துக் கொள்வதில் மட்டும் போலி கவுரவமும் பிடிவாதமும் கொள்வது ஏன்?
  • மனதில் நல்ல எண்ணங்களையே சிந்திப்போம். அந்த எண்ணங்களே நம் வாழ்க்கையில் பல மேன்மைகளை உருவாக்கும். நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல் இவை மூன்றும் புண்ணியத்தைத் தரும்.











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 01:45, 16 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=மகாவீரர்_-_மலர்_போல_பேசு!&oldid=8174" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 9 செப்டெம்பர் 2011, 06:02 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,674 முறைகள் அணுகப்பட்டது.