நவராத்திரி நாயகியர் 6மரபு விக்கி இருந்து
சைலபுத்திரி: சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப் படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை. நடைபெறாது. இவள் தமிழில் மலைமகள் என அழைக்கப் படுகின்றாள். மகாமேருவை வலம் வந்து கொண்டிருக்கும் ஆதித்தியன் ஆன சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரியும் வல்லமை கொண்டவன். நவராத்திரி நாட்களில் ஞாயிற்றுக் கிழமை அன்று இவளை வணங்கித் துதித்தால் ஆரோக்கியம் பெருகும். மனம் விசாலமடையும். பர்வத ராஜபுத்திரி வேண்டியது அருளுவாள். வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆநந்த தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவளே ஸ்ரீசைலபுத்ரி என்னும் இந்த தேவி ஆவாள்.
மொச்சைச் சுண்டல் செய்முறை:
காய்ந்த மொச்சையை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் அல்லது அடிகனமான நன்கு குழைந்து வேகும் வண்ணம் உள்ள பாத்திரத்தில் மொச்சையைப் போட்டு வேக வைக்கவும். தேவையான அளவு உப்புச் சேர்க்கவும். அதிகப் படியான நீரை வடித்துவிட்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, மி.வத்தல், பெருங்காயத்தூள் சேர்க்கவும், கருகப்பிலை சேர்த்து வெந்த மொச்சையைப் போடவும். ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்க்கவும். நன்கு வதக்கி இறக்கும்போது தேங்காய் துருவல் சேர்க்கவும். சுவையான சுண்டல் தயார். துர்கா அஷ்டகம் இரண்டாம் பாடல்: உலகையீன்றவள் துர்கா உமையுமானவள் தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே லலிதா நவரத்னமாலையின் நீலம்! மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
--Geetha Sambasivam 09:19, 25 நவம்பர் 2010 (UTC) |

