துவையல்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

துவையல்

பருப்புத் துவையல் +  பருப்புப் பொடி

துவரம் பருப்பை வெறும் வாணலியில் அல்லது கடாயிலிட்டுஎண்ணெய் ஊற்றாமல் இளம் சிவப்பாக சிவக்க வறுத்து
எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.


பூண்டு வாசனை பிடிப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு பூண்டும் போட்டு வறுத்துக்கொள்ளலாம்.


இந்த இரண்டையும் அரைப்பானில் இட்டு கூடவே நாலைந்து மிளகையும் ( மிளகாய் அல்ல) அதிலிட்டு தேவையான உப்பை சேர்த்து பொடியாக்கி வைத்துக்கொண்டால் போதும். இந்தப் பொடியை பருப்புப் பொடி என்று சொல்வார்கள். இந்தப் பொடியை சற்றே நீர் ஊற்றிக் கலந்து கொண்டால் பருப்புத் துவையல்.


எழுதியவர்: தமிழ்த்தேனீ



எள்ளு பொடி + எள்ளு துவையல்

இதே போன்று எள்ளை எடுத்து கல், தூசி போன்றவற்றை நீக்கி லேசாக வறுத்து இதே முறையில் கொஞ்சம் துவரம் பருப்பை வறுத்துப் போட்டு மிளகிற்கு பதிலாக காய்ந்த மிளகாயை போட்டுக்கொண்டு சற்றே புளியும் சேர்த்து அரைத்தால் எள்ளுப் பொடி. 

 


இந்த எள்ளுப் பொடியில் சற்றே நீர் கலந்து நெகிழ வைத்தால் எள்ளுத் துவையல்.


எழுதியவர்: தமிழ்த்தேனீ

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=துவையல்&oldid=1191" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2010, 18:26 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,294 முறைகள் அணுகப்பட்டது.