கார்னேஷன் பிஸ்கெட்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


ஆரோருட் கிழங்கு மாவு – 500 கிராம்

கோதுமை மாவு – 250 கிராம்

வெண்ணெய் -150 கிராம்

சர்க்கரை – 150 கிராம்

பால் – 300 மில்லி

காடி – 4 தேக்கரண்டி


செய்முறை


ஒரு பாத்திரத்தில் ஆரோரூட் மாவைப் போட்டு, அதோடு கோதுமை மாவு, வெண்ணெய், சர்க்கரை, காடி ஆகியவைகளை ஒன்றாகக் கலந்து இவற்றோடு பாலைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

பிறகு எடுத்து பலகையில் வைத்து, பெரிய அளவில் பூரி போல பதினைந்து மில்லி கிராம் கனத்திற்குத் தட்டையாகச் செய்து, தேவையான வடிவத்திலுள்ள அச்சு கொண்டு வெட்டி எடுத்து, தட்டில் வெண்ணெய் தடவி வரிசையாக அடுக்கி ஓவனில் வைத்து பதமாகச் சுட்டெடுக்கவும்.



--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:08, 25 அக்டோபர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=கார்னேஷன்_பிஸ்கெட்&oldid=8452" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 25 அக்டோபர் 2011, 02:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,736 முறைகள் அணுகப்பட்டது.