ஆகமீயம் ஓர் அறிமுகம்மரபு விக்கி இருந்துIntroduction History of Dravidian Philosophy திராவிட மெய்யறிவு வரலாறு முனைவர் கி. லோகநாதன்
இப்பெரு நூலில், திராவிட மெய்யறிவு சிந்தனையின் போக்கினை ஓர் புதிய அணுகு முறையில் சிந்தித்து எழுதியுள்ளேன். அலசப்பட்ட இலக்கியங்கள் 3000 BC தொடங்கி வந்துள்ள சுமேருத் தமிழ் இலக்கியங்களோடு கடைச் சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள பத்தி இலக்கியங்கள் அளவை இலக்கியங்கள் மெய்கண்ட சாத்திரங்கள் அதனைச் சார்ந்து எழுந்த பிறவகை சைவ சாத்திரங்கள் சித்தர் இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் வேதாந்த இலக்கியங்கள் என்றெல்லாம் திரிந்து அவற்றின் போக்குகளைக் கண்டு ஏன் இப்படி என்று விளக்குவதே இந்த ச நூலின் நோக்கம். பலவகையான மெய்யறிவுச் சிந்தனையின் போக்கினை இந்த இலக்கியங்கள் உணர்த்தி நிற்க. அவற்றின் இயல்புகளை வர்ணிப்பதொடு, ஏன் அவை அவ்வாறு எழுந்தன என்றும் ஆயப்பட்டுள்ளது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். ஆகமீயம் எனும் தெரிவி(Theory) மேலும் இந்த போக்குகளை எல்லாம் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் எனவரும் ஆகமீயத்தின் வழியாக தெரித்து விளக்கியும் உள்ளேன். இதனால் பலவேறு மெய்யறிவுச் சிந்தனைகள் தெய்வங்களின் திருவிளையாட்டாகவே, இறையருளின் வெளிப்பாடுகளாவே காணப்பட்டுள்ளன. இதில் நாத்திக வாதமான உலகாயதுமும் அடங்கும் ஆனால் இந்த மூலமான எந்திராயணம் அகப்படுத்திய ஆகமீயம் தான் என்ன? இதனை ஓரளவு சுருக்கமாக விளக்கும் ‘எந்திராயணம்’ எனும் அத்தியாயத்தொடு இந்த நூல் தொடங்குகின்றது. பிறகு மந்திராயணம் தந்திராயாணம் என்றும் பின் அவற்றிற்கு ஆய்வியல் சான்றுகள் யாதென்று விளக்கும் படலங்களையும் உள்ளடக்கியதாக முதல் பகுதி வருகின்றது. பலவகையான விசாரணைகள் வடிவில் திராவிட மெய்யறிவுச் சிந்தனை வரலாறு விரிக்கப்படுமுன், அதற்கு ஆதாரமாக இருக்கும் இலக்கியவகைகள் பலவேறு தலைப்பில் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து சுருக்கமாகத் தரப்படுகின்றது. அதன் பிறகே இத்தகைய இலக்கிய வகைகள் ஏன் என்ற கேள்வியொடு ஆகமீயத்தை ஓர் தெரிவு கோட்பாடாக கொண்டு (theoretical framework) திராவிட மெய்யறிவு வரலாறு தொடங்குகின்றது சுமேரு இலக்கியங்களிலிருந்து ஏறகுறைய தற்கால தமிழ் இலக்கியங்கள் தாங்கி வரும் சிந்தனைப் போக்குகளை மிகவும் விரிவான 5-ஆம் படலம் விரிக்கும குறிப்பு: மரபு விக்கிக்காக ஆகமீயத்தின் முதன் நான்கு படலங்களே இங்கு பதிவு செய்யப்படுகின்றன. வளர்ந்து வரும் ஏனையப் படலங்களைக் காண செல்க: https://sites.google.com/site/ulagansbooks/hist-of-drav-phil-tamil மேலும் பொதுவாக எனது பல்வேறு ஆய்வுகளை எல்லாம் படித்து மகிழ செல்க: https://sites.google.com/site/ulaganaar/ மேலும் இவற்றின் தொடர்பாக விளக்கங்கள் பெற அன்பர்கள் ‘meykandar’ மடலாடு குலாத்திற்குச் சென்று உறுப்பியம் பெறலாம். செல்க: http://groups.yahoo.com/group/meykandar/ இப்படிக்கு அன்பன் முனைவர் கி, லோகநாதன்(உலகன்) 25-2-13 |