அன்றொரு நாள்: ஜூலை 15/ 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தமிழ்த்தென்றல். திரு.வி.க. அவர்கள் தன்னுடைய வாழ்க்கைக்குறிப்புகளில், அடிக்கடி மறைமலை அடிகளிடம் தான் தத்துவ விளக்கங்கள் பெற்றதாக எழுதியுள்ளார். அடிகளார் ராயப்பேட்டையில் இருக்கும் குஹானந்த நிலையத்திற்கு வரும்போதெல்லாம், அவர் கட்டிலில் படுத்திருக்க, தான் கீழே அமர்ந்த பாடம் கேட்டவிதம், படிக்கவே நெகிழ்வை தரும். தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவர்கள், பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட வீ.கோ.சூர்யநாராயண சாஸ்திரியும், சுவாமி வேதாசலம் என்ற தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக்கொண்டவரும் ஆவர். அவர் நாகப்பட்டினத்தில் ஜூலை 15, 1876 அன்று பிறந்தவர். சென்னை கிருத்துவக்கல்லூரியில் ஆசிரியர். சைவ சித்தாந்த மஹா சமாஜத்தை நிறுவித்தவர். வடமொழி, தமிழ், ஆங்கிலம் மூன்றும் அடிகளார்க்கு சரளம். மும்மொழிகளிலும் ஆய்வு செய்வதில் ஈடுபட்டவர். மடலாடும் புதினமாக ஒரு இலக்கியப்படைப்பை ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ மூலம் தமிழுலகுக்கு தந்தவர். காளிதாசனின் ‘சாகுந்தலத்தை’ தமிழாக்கம் செய்தவர். 54 நூல்களை எழுதிய அடிகளார் செப்டம்பர் 15,1950 அன்று இயற்கை எய்தினார். அவருடைய பல்லாவரம் மாளிகை சிதிலமடைந்த நிலை. அவருடைய அரிய நூலகம் அங்குமிங்குமாக இருந்த பின், தற்காலம் அவர் பெயரில் உள்ள அறக்கட்டளையின் பொறுப்பில் கன்னிமரா நூலகத்தில் இருக்கிறது. அவற்றில் மின்னாக்கம் செய்யவேண்டிய நூல்கள், பல.



இன்னம்பூரான்

15 07 2011







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:05, 15 ஜூலை 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூலை_15/_2&oldid=7405" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 15 ஜூலை 2011, 12:05 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,395 முறைகள் அணுகப்பட்டது.