அன்றொரு நாள்: ஆகஸ்ட் 8 ~2மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
வரலாற்றின் ஏடுகளை புரட்டுவதற்கு, இடமும், பொருளும், ஏவலும் துணை போகும். ஆனால், மனமிருந்தால் தான் மார்கமுண்டு. அந்த மனம் கனவிலும் மிதக்கலாம்; நனவிலும் மிதக்கலாம். ஒரே சமயத்தில் இரண்டிலும் யாத்திரை செய்யலாம். ஒரு காலகட்டத்தில், திருமலையில் சலுகைகள் இருந்ததால், சாவதானமாக விஜயநகர சக்கரவர்த்தி ஶ்ரீகிருஷ்ணதேவராயர் தம்பதிகளின் சிலைகளை தரிசிக்கும் போது, ஏழுமலையிலிருந்து இறங்கி, அகண்ட காவேரி சென்று, ஶ்ரீரங்கநாதர் கோயிலில் உள்ள ராயர் கோபுரம் வரை சென்றது மனம்; அங்கிருந்து வானாளவிய ‘அரசு முத்திரை’ கோயில் ஶ்ரீவில்லிப்புத்தூர் சென்று, கோதாப்பிராட்டியிடம் சரணாரவிந்தம் அடைந்தது. எல்லாம் க்ஷண நேரம். ஶ்ரீ கிருஷ்ணதேவராயரின் பேசும் மொழி துளு. எழுதும் மொழி தெலுங்கு. அவரோ புவியாள்பவர் மட்டுமல்ல; கவிதா சிரோன்மணி. படைத்த அருமையான காவியம், ‘ஆமுக்த மால்யதா’; காவியத்தின் வகை, ‘பிரபந்தமு’ ~ஒரு தொடர்காவியம். ஆண்டாள் உலகமாதா; சிறுமி; பசலையால் வாடும் தலைவி. காவியத்தின் நுட்பம், அவளழகுடன், காலபருவத்தையும், கொட்டும் மழையும், இயற்கையழகையும் இணைத்து வருணித்த நேர்த்தி. இறையுடன் அவள் இணைந்துவிடுவதை மோக்ஷசாம்ராஜ்யமாகவல்லவா கவி பாடுகிறார், இந்த மன்னர் மன்னன். எத்தனை உபகதைகள் - தந்தை பெரியாழ்வாருக்கு திவ்ய தரிசனம், பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி, பரிசில் இறங்கி வந்த அற்புதம், ‘விஷ்ணுசித்தர் வந்தார்’ என்று பாண்டிய மன்னனின் உபசாரம், கண்டிகையில் உலா, யமுனாச்சாரியர், ‘சண்டாள ~பிரும்மராக்ஷஸ விவாதமு’. பக்தி ரசம் ததும்பும் கவிதோத்தமம்.(அக்காவியத்தை தமிழாக்கம் தெனாலிராமன் கதைகள்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:47, 15 ஆகஸ்ட் 2011 (UTC) |
