பெரிய மாரியம்மன் திருக்கோயில் - ஈரோடு.மரபு விக்கி இருந்து(அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் - ஈரோடு. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
'
மூலவர் : பெரிய மாரியம்மன்
இக்கோயிலின் தேரில் சிவபெருமான், முருகன் திருவிளையாடல்களை காணலாம். தேரின் நான்கு முனைகளிலும் அழகிய நான்கு யானைகள் தாங்குவதை போல் சிற்பங்கள் இருக்கிறது. பிரார்த்தனை பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
இக்கோயிலில் காலை 7 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 7.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. பூச்சாட்டுதல் தொடங்கி கம்பத்தை எடுத்து வாய்க்காலில் விடுவது வரை பெரிய மாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன் கோயில், வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் விழா இணைந்தே நடந்து வருகிறது. பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். ஜாதி, மதம், இன வேறுபாடின்றி ஈரோட்டில் வாழ்கிற அனைத்து மக்களும் பங்கு கொள்கின்ற விழாவாகும். மக்கள் குழுக்களாக கூடி இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும். மூன்று கோயில்களிலும் உள்ள கம்பங்களை எடுத்து வாய்க்காலில் விடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கம்பங்களுக்கு மஞ்சள் நீர் வார்த்து பயபக்தியுடன் வழிபாடு செய்வர். மக்கள் ஒருவர்மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வது வடநாட்டு ஹோலி பண்டிகையை நினைவூட்டும்.
திருவிழா:
பவள சங்கரி திருநாவுக்கரசு தேதி - 30 - 03 - 2011. நன்றி - தின மலர். |

